நமக்கு முதலிரவு எப்போ.. கார்த்தியிடம் வெட்கத்தை விட்டு கேட்ட ரேவதி.. கார்த்திகை தீபம்!

சென்னை: பரமேஸ்வரி பாட்டி, வீட்டிற்கு ஜோசியரை வர வைத்து நவீன் துர்காவின் சாந்தி முகூர்த்தத்திற்கு நாள் குறிக்கிறாள். அப்படியே கார்த்திக் ரேவதிக்கும் சாந்தி முகூர்த்தத்திற்கு நாள் குறிக்க கார்த்திக் இதெல்லாம் இப்போ எதுக்கு என்று கேட்க பாட்டி அமைதியா இரு என்று அவனை அடக்குகிறாள். இதையடுத்து என்ன இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோடில் துர்காவின் சாந்தி முகூர்த்தத்திற்கு கட்டிலை ரேவதி அலங்கரித்துக் கொண்டே இருக்கிறாள். அப்பொழுது, நமக்கும் இப்படி நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும், இந்த ராஜா தான் எதுக்குமே ஒத்து வரமாட்ரான்என மனதிற்குள் பேசிக்கொண்டே இருக்கிறாள். அப்போது ராஜா (அதாவது கார்த்தி ) அந்த வழியாக வர,ரேவதி, கார்த்திகை பாசத்தோடு அழைத்து, நமக்கு இப்போ இப்படி முதலிரவு எப்போது நடக்கும் என கேட்கிறாள். உடனே கார்த்தி, நம்ம பாட்டி வீட்டில் இருக்கோம், எதையாவதை பேசிக்கொண்டு இருக்காதே என்கிறார். உடனே பாட்டி வீடும் நம்ம வீடு தானோ, எங்கே நடந்தா என்ன, நான் ஆசையா எப்போ முதல் இரவு என்று கேட்கிறேன், நீ இப்படி எல்லாம் பேசாதேனு சொன்ன என்ன அர்த்தம் புருஷா, என்னை லவ் பண்றேனு சொல்லு டா என ரேவதி காத்திகை கொஙஞ்ச, இதற்கு மேல் உன்கிட்ட பேச முடியாது என, கார்த்திக் அந்த இடத்தில் இருந்து நைசாக சென்றுவிடுகிறான்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: மறுபக்கம் சிறையிலிருந்து வெளியே வரும் காளியம்மாள், நான் இப்பவே என்னுடைய மருமகள் சந்திரகலாவை பார்க்க வேண்டும் என சொல்ல சிவனாண்டி சந்திரகலாவிற்கும் ஃபோன் செய்து சித்தி உன்னை உடனே பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள். நீ உடனே கிளம்பி வா என சொல்கிறாள். மறுபக்கம், கார்த்திக் மற்றும் மயில்வாகனம் மண்டபத்திற்கு சென்று அங்கு காணாமல் போன செல்போன் குறித்து விசாரிக்கின்றனர். அங்கு இருக்கும் மேனேஜர், சார் யாராவது கொண்டு வந்து கொடுத்து இருந்தால், நிச்சயம் நான் உங்களுக்கு கொடுத்து இருப்பேன். ஆனால், யாருமே தரவில்லை சார் வேண்டுமானால் நீங்கள் அனைத்து அறைக்கும் சென்று பார்த்துவிடுங்கள் என சொல்கிறான். அந்த நேரம் காரத்திக்கிற்கு போன் வருகிறது. அதில் காளியம்மா சிறையில் இருந்து வந்த விஷயத்தை ஒருவர் சொல்ல கார்த்திக் கடுப்பாகிறான். பின் மயில்வாகனத்திடம், காளியம்மா ஜெயில் இருந்த வந்துவிட்டார்களால், இனி அடுத்து எதாவது திட்டம் போடுவார்கள் என சொல்கிறான்.

காளியம்மாவின் திட்டம்: மற்றொருபக்கம் சந்திரகலா, காளியம்மாவை சந்திப்பதற்காக செல்கிறாள். அப்போது, காளியம்மாள், நாம எவ்வளவு திட்டம் போட்டாலும் அதிலிருந்து சாமுண்டீஸ்வரி தப்பித்து கொண்டே இருக்கிறாள். அதற்காக நான் இப்போது ஒரு பெரிய திட்டம் ஒன்றை போட்டு வைத்து இருக்கிறேன். சாமுண்டீஸ்வரிக்கு வீடு இருப்பதால் தான், ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்கா, அந்த வீட்டையே இல்லாமல் ஆக்கிஅவளை நடுத்தெருவிற்கு கொண்டு வந்து அவளில் கொட்டத்தை அடக்க வேண்டும் என சொல்கிறாள். அதற்கான திட்டம் இதுதான் என காளியம்மாள் சொல்ல, சந்தரகலா அதைக்கேட்டு சந்தோஷப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X