கொஞ்சமாச்சும் நம்புற மாதிரி உருட்டுங்க.. சீரியல்னா உங்க சௌகரியத்துக்கு எடுப்பீங்களா?

சென்னை: திரைப்படங்களில் யதார்த்தத்திற்கு மாறான காட்சிகள் இருந்தாலே ரசிகர்கள் ஆயிரத்து எட்டு கேள்விகள் கேட்டு, படத்தையும் அந்த காட்சியையும் நார அடித்துவிடுவார்கள். ரசிகர்களுக்கு பயந்தே, ஒவ்வொரு காட்சியையும் மிகவும் பார்த்து பார்த்து கவனமாக படமாக்கும் இயக்குநர்கள் இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, சீரியல்களில் யதார்த்தத்திற்கு கொஞ்சமும் ஒட்டாத காட்சிகளை எடுத்து வைத்து, ரசிகர்களை கடுப்பேற்றுகிறார்கள்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மிகவும் முக்கியமான சீரியல்கள் என்றால், கார்த்திகை தீபம், வீரா, சந்தியா ராகம் மற்றும் அண்ணா. இந்த நான்கு சீரியல்களில் கார்த்திகை தீபம், வீரா மற்றும் சந்தியா ராகம் ஆகிய மூன்று சீரியல்களிலும் ஒரே மாதிரியான திரைக்கதைதான் இருக்கப்போகிறது. அதாவது, ஒரு சீரியலில் இந்த வாரம் கோவில் திருவிழா என்றால், அடுத்த இரண்டு சீரியல்களிலும் அடுத்தடுத்த வாரங்களில் கோவில் திருவிழாதான் என்று நாம் முடிவெடுத்துக் கொள்ளலாம். அண்ணா சீரியல் ஒன்றும் விதிவிலக்கு அல்ல என்றாலும், யதார்த்தத்திற்கு கொஞ்சமும் ஒப்பாத காட்சிகளை வைப்பதில் மற்ற சீரியல்களை விட அண்ணா சீரியலுக்கு கோல்ட் மெடலே கொடுக்கலாம்.

ZEE TAMIL Veera Anna Karthigai Deepam Sandhya Raagam SerialS Has Very Old Style Dramas Which is Not Close To Reality
Photo Credit:

அதாவது, அண்ணா சீரியலில் சண்முகத்தின் தங்கை வீரா காவல் துணை ஆய்வாளர். ஒரு காவல் துணை ஆய்வாளரின் விருப்பமே இல்லாமல், அவரது முறை மாமன் அவருக்கு தாலி கட்டுகிறார். அந்த சப் இன்ஸ்பெக்டரும் அந்த தாலியைக் கட்டிக் கொண்டு, தனது பிறந்த வீட்டிலேயே இருக்கிறார். விருப்பம் இல்லாமல் கட்டிய தாலியை கழட்டி வீசிவிட்டு, அந்த முறை மாமன் மீது புகார் கொடுத்து சிறையில் அடைக்கலாம். ஆனால் அதையே இந்த கதாபாத்திரம் ரொம்பவும் தாமதமாக செய்துள்ளது. அதுவும் செய்யவில்லை.

ரசிகர்கள் பாவம்: அதேபோல், அந்த சப் இன்ஸ்பெக்டர் வீராவுக்கு பார்க்கப்பட்ட மாப்பிள்ளை பல குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்று கூறுகிறார், தாலி கட்டிய முறை மாமன். தான் ஒரு போலீஸ், இந்த குற்றச்சாட்டு வந்ததும், உடனே தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, குற்ற வழக்குகள் உள்ளதா இல்லையா என்று கூடவா பார்க்க மாட்டார். இப்படி முட்டாள் போலீஸாகவே இந்த கதாபாத்திரத்தை வடிவமைத்திருப்பதைப் பார்த்தால், ரசிகர்கள் தான் முட்டாள் என சீரியல் டீம் நினைத்து விட்டது போல என்று யோசிக்க வைக்கிறது.

ZEE TAMIL Veera Anna Karthigai Deepam Sandhya Raagam SerialS Has Very Old Style Dramas Which is Not Close To Reality
Photo Credit:

முட்டாள் வில்லி: அதேபோல், வீரா சீரியலில் வில்லி கதாபாத்திரமான விஜி கதாபாத்திரத்தை பார்த்தாலே காண்டாகும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அது அந்த கதாபாத்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்றே கூறலாம். ஆனால் கார்த்திகை தீபம் சீரியலில் வரும் வில்லி கதாபாத்திரம் ரசிகர்களுக்கு எரிச்சலை உருவாக்கினாலும், இவ்வளவு தத்தியாகவா ஒரு வில்லி கதாபாத்திரம் இருக்கும் என யோசிக்க வைக்கும் அளவுக்கு உள்ளது. இதில் என்ன விஷயம் என்றால், வீரா மற்றும் கார்த்திகை தீபம் என இரண்டு சீரியல்களின் வில்லிகளுக்குமே ஒரே ஃப்ளாஷ் பேக் கதையாகத்தான் உள்ளது.

Take a Poll

இப்படி மட்டும் வேண்டாம்: சீரியல்களை சம காலங்களில் பார்க்கும் ரசிகர்கள் எண்ணிக்கை என்பது அதிகரித்துக் கொண்டே உள்ளது. வீட்டில் பார்க்கவில்லை என்றாலும், பயணங்களின் போது, இடைவேளையின் போது ஓடிடி தளங்களில் மொபைலில் பார்க்கும் ரசிகர்கள் ஏராளமாக உள்ளார்கள். அப்படி இருக்கும்போது, அந்த ரசிகர்களுக்கு தைரியத்தை, நம்பிக்கையை ஏற்படுத்தும் கதாபாத்திரங்களை, காட்சிகளை வடிவமைக்க வில்லை என்றாலும் பரவாயில்லை. இப்படி மொக்கை மொக்கையாக, யெப்பா முடியல என புலம்பும் மாதிரியான காட்சிகளோ. கதாபாத்திரங்களோ வேண்டாமே ப்ளீஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X