Aishwarya Rai: இந்தியாவிலேயே இவர்தான் செம்மையான ஆம்பள.. ஐஸ்வர்யா ராய் சொன்னது யாரைத் தெரியுமா?

மும்பை: பாலிவுட் வட்டாரங்களில் ஐஸ்வர்யா ராய்யின் திருமண வாழ்க்கை குறித்து தெரிந்து கொண்டவர்கள் எந்த அளவுக்கு இருக்கிறார்களோ அதே அளவுக்கு அவரது திருமணத்திற்கு முந்தைய காதல் குறித்து தெரிந்தவர்களும் இருப்பார்கள். பாலிவுட்டில் மிகவும் பேசுபொருளான காதல் கதை இவர்களதுதான். ஐஸ்வர்யா ராய் மற்றும் சல்மான் கான் இடையிலான காதல் கதைதான் அது. அவர்களின் காதல் கதை என்பது எப்போதுமே பேசப்படும் ஒரு விஷயமாகவே உள்ளது. ஒரு காலத்தில் இருவரும் காதலித்ததாக செய்திகள் பரவின. சஞ்சய் லீலா பன்சாலியின் 'ஹம் தில் தே சுகே சனம்' திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது இவர்களின் நட்பு என்பது காதலாக மாறியது என்றும் பேசப்படுகிறது. சுமார் இரண்டு ஆண்டுகள் இருவரும் காதலித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், ஐஸ்வர்யா ராய் மற்றும் சல்மான் கான் பிரிந்தது ஒரு பெரிய சர்ச்சையாக மாறியது. சல்மான் கான் தன்னைத் தாக்கியதாகவும், துஷ்பிரயோகம் செய்ததாகவும் ஐஸ்வர்யா ராய் குற்றம் சாட்டினார். மேலும், சல்மானின் குடிப்பழக்கம் தனக்கு பெரிய சிக்கலாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இவையெல்லாம் பெரும் பேசு பொருளாக மாறியது. ஆனால், ஒருமுறை ஒரு பேட்டியில் ஐஸ்வர்யா ராய் சல்மான் கானைப் பெரிதும் பாராட்டினார்.

Actress Aishwarya Rai Talks About Salman Khan When They Are In Relationship Throwback
Photo Credit:

கவர்ச்சியான ஆண்: அந்த பேட்டியில், பாலிவுட்டின் மிகவும் கவர்ச்சியான ஆண் யார் என்று ஐஸ்வர்யா ராயிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், "கவர்ச்சியான என்ற வார்த்தைக்குப் பதிலாக 'அழகான' என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாமா?" என்று பதில் கேள்வி எழுப்பினார். ஆனால், அதற்கு தொகுப்பாளரோ, கொஞ்சம் யோசித்துவிட்டு, முடியாது நீங்கள் கவர்ச்சியான ஆண் யாரென்றே கூறுங்கள் என்று மீண்டும் கேட்டார்."அழகு என்று நீங்கள் கேட்டால், இந்திய ஆண்களில் சல்மான் கானை மட்டுமே நான் கூறுவேன்" என்று ஐஸ்வர்யா ராய் தெரிவித்தார்.

Actress Aishwarya Rai Talks About Salman Khan When They Are In Relationship Throwback
Photo Credit:

அபிசேக் பச்சனுடன் திருமணம்: ஐஸ்வர்யாவின் இந்த கருத்து, சல்மான் கான் மீது அவர் இன்னும் ஈர்ப்பு கொண்டிருந்தார் என்பதைத் தெளிவாகக் காட்டியது. சல்மானுடன் பிரிந்த பிறகு, ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். ஐஸ்வர்யாவின் திருமணத்திற்கு சல்மான் கான் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

சல்மானின் வாழ்த்து: அவர் கூறுகையில், "அபிஷேக்கை அவர் திருமணம் செய்து கொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அபிஷேக் குடும்பத்தினர் மட்டுமல்ல, அவரும் ஒரு சிறந்த மனிதர். இருவரும் எப்போதும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்றார் சல்மான் கான். ஐஸ்வர்யா ராயின் திருமணத்தின் போது, சல்மான் கானி வாழ்த்து பெரிய அளவில் கவனிக்கப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X