Attagasam: அட்டகாசம் படத்தை பின் தொடரும் அந்த பிரச்னை.. 21 வருஷத்துக்கு முன்னால் நடந்த சோகம் தெரியுமா?

சென்னை: ஒரு படத்தை எடுத்து ரிலீஸ் செய்வது என்பது ரொம்பவும் சவாலான விஷயம் என்று பலரும் பேசிக் கேட்டுள்ளோம். இதில் ரிஸ்க் அதிகம் தான் என்று அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் எவ்வளவு பிரச்னைகளை எதிர் கொண்டு படத்தை ரிலீஸ் செய்கிறார்கள் என்பது வெகு சில படங்களின் ரிலீஸின் போது தான் தெரியவருகிறது. இதில் பெரிய நடிகர், சின்ன நடிகர் என்ற வித்தியாசங்கள் எல்லாம் எதுவும் கிடையாது. சில மாதங்களுக்கு முன்னர் கூட நடிகர் விக்ரமின் வீர தீர சூரன் பாகம் 2 படம் குறித்த தேதியில் ரிலீஸ் ஆனாலும், முதல் காட்சி மாலை தான் ரிலீஸ் ஆனது. புதிதாக ரிலீஸ் ஆகும் படத்திற்கு தான் இந்த பிரச்னைகள் என்றால், ரீ ரிலீஸ் படத்திற்கும் இந்த பிரச்னை வருவது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

தமிழ் சினிமாவில் மற்ற நடிகர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு உச்ச நடிகர் என்றால் அது அஜித் குமார் தான். நடிப்பு, கார் ரேஸ், பைக் ரேஸ், பைக் ரைட், துப்பாக்கி சுடும் பயிற்சிகள், அதற்குரிய போட்டிகளில் கலந்து கொளவது என எப்போதும் செம ஆக்டிவாக இருக்கிறார். இவரது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் தன்னைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் தான் ஒரு உத்வேகமாக இருக்க வேண்டும் என்னும் படியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

Ajithkumar Attagasam Movie Re-Release Postponded Remembers Attagasam Movie Release Time Issues

தன்னை அல்டிமேட் ஸ்டார் என்றோ, தல என்றோ யாரும் அழைக்க வேண்டாம், எனது பெயரான அஜித் குமார் என்றே என்னை அழைத்தால் போதுமானது என்று அறிவித்தார். இது ஒரு புறம் இருக்க, தனது ரசிகர் மன்றத்தை கலைத்தார். இவ்வளவு செய்த பின்னரும் அஜித்துக்கான ஓபனிங் என்பது வழக்கத்தை விட கூடுதலாக தான் உள்ளது.

ரீ-ரிலீஸ் பிரச்னை: இப்படி இருக்கையில் அஜித்தின் அட்டகாசம் படம் இன்று அதாவது அக்டோபர் 31ஆம் தேதி ரீ- ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் படத்தை ரீ ரிலீஸ் செய்வதில் சில சிக்கல்கள் ஏற்பட்டதால் படத்தை ரீ ரிலீஸ் செய்ய முடியவில்லை. இதனால் ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளார்கள். மேலும் சில ரசிகர்களோ தங்களது ஏமாற்றத்தை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அதில் ஒரு ரசிகரோ அட்டகாசம் படம் ரிலீஸ் ஆன 2004ஆம் ஆண்டு தான் படம் பார்த்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

Ajithkumar Attagasam Movie Re-Release Postponded Remembers Attagasam Movie Release Time Issues

படம் ரிலீஸ் ஆகும்போது பிரச்னை: அதாவது அட்டகாசம் படம் ரிலீஸ் ஆகும்போது படத்தை காலையில் முதல் காட்சி பார்க்கவே நான் தியேட்டருக்குச் சென்றுவிட்டேன். ஆனால் படம் ரிலீஸ் ஆவதில் சில பல பிரச்னைகளும் சிக்கல்களும் இருந்ததால், படத்தின் முதல் காட்சியே மாலை 7.30 மணிக்கு தான் திரையிட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் அட்டகாசம் படத்தின் ரிலீஸ்க்கு எப்படி பிரச்னை இருந்ததோ அதே போல் அட்டகாசம் படத்தின் ரீ ரிலீஸ்க்கும் பிரச்னையாக இருக்கிறதே என்று பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X