ஆமா வெட்கமே இல்லாமல் அதை நான் பண்ணுவேன்.. அமலா பால் இப்படி சொல்லிட்டாங்களே.. ஓஹோ அப்படியா?
சென்னை: நடிகை அமலா பால் இயக்குநர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கை பாதியிலேயே முடிந்தது. அந்த மண முறிவுக்கு பிறகு ஜெகத் தேசாய் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அந்தத் தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். இப்போது சுமூகமாக அவர்களது திருமண வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவர் கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
சிந்து சமவெளி படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானவர் அமலா பால். அந்தப் படம் விவகாரமான கதையாக இருந்தாலும்; தைரியமாக நடித்து அமலா பால் பெயர் வாங்கினார். ஆனாலும் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அப்படிப்பட்ட நிலைமையில் பிரபு சாலமன் இயக்கத்தில் நடித்த மைனா திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதிலிருந்து அமலாவின் கரியரும் உச்சம் செல்ல ஆரம்பித்தது.
வரிசையாக படங்கள்: அவர் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தவும் செய்தார். தேவைப்படும் இடத்தில் கிளாமர் காண்பித்தும் நடித்த அவர்; கிளாமர், ஹோம்லி கேரக்டர்களுக்கு செட் ஆகக்கூடிய ஹீரோயினாக திகழ ஆரம்பித்தார். ஆர்யா உள்ளிட்டோருடன் நடிக்கும் வாய்ப்பை பெற்ற அவர்; ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் நடித்த தலைவா படத்திலும் ஹீரோயினாக நடித்தார். அதுவும் அவருக்கு பெரிய பிரபல்யத்தை பெற்றுக்கொடுத்தது.

விஜய்யுடன் திருமணம்: தலைவா படத்தின்போதுதான் இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும், அமலா பாலுக்கும் காதல் மலர்ந்தது. அந்தக் காதலுக்கு விஜய் வீட்டில் முதலில் சம்மதம் கிடைக்கவில்லை. பிறகு ஒருவழியாக வீட்டு சம்மதம் கிடைத்ததை தொடர்ந்து இரண்டு பேருக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பிறகும் தொடர்ந்து நடித்துவந்தார் அமலா. நிலைமை இப்படி இருக்க அவர்களது திருமண வாழ்க்கை திடீரென பாதியில் முடிந்தது.
இரண்டாவது திருமணம்: மணம் முடிந்த பிறகும் நடித்ததால்தான் இந்தப் பிரிவு என்று பலரும் கூறினார்கள். ஆனால் அதுகுறித்து சம்பந்தப்பட்ட இர்ண்டு பேருமே பேசவில்லை. விஜய் இரண்டாவது திருமணம் செய்து செட்டிலாகிவிட்டார். அமலாவும் ஜெகத் தேசாய் என்பவரை இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார். அவர்களுக்கு இலை என்ற மகனும் இருக்கிறார். இந்நிலையில் அமலா பால் கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
அமலா பாலின் பேட்டி: அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "கேரளாவில் ரோட்டு கடைகளை தட்டு கடை என்று சொல்வார்கள். அங்கே நல்ல மஞ்சளாக இருந்தால் நல்ல பழம்பூரி. அந்த இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு மாஸ்க்கை கழற்றிவிட்டு பழம்பூரியை சாப்பிடுவேன். அதேபோல் பானிபூரியும் சாப்பிடுவேன். வெட்கமே இல்லாமல் மாஸ்க்கையும் கழற்றிவிடுவேன். அங்கே வருபவர்கள் அமலா பால் என்று ஆச்சரியமாக பார்ப்பார்கள். ஆனால் நானோ அதெல்லாம் இல்லை என்று ஃபன் செய்வேன். கேரளாவில் ரோடு பயணம் செல்வது எனக்கு பிடிக்கும்" என்றார்.


Click it and Unblock the Notifications











