பாலிவுட் நடிகையின் பிரைவேட் வீடியோவை வெளியிட்ட காதலன்.. அடுத்து என்ன ஆச்சு தெரியுமா?

மும்பை: பாலிவுட்டில் பல நடிகைகள் தங்கள் துணிச்சலான நடிப்புக்காக எப்போதும் பேசப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி பேசப்பட்டவர்களில் நடிகை ரியா சென் ஒரு காலத்தில் தனது அழகால் ரசிகர்களைக் கவர்ந்தார். இருப்பினும், அவரது பிரைவேட் வீடியோ, ஒரு MMS வீடியோவாக வெளியான பிறகு, அவரது வாழ்க்கை எதிர்பாராத திருப்பத்தை சந்தித்தது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ரியா சென், தனது 10 வயதிலேயே நடிப்புத் துறைக்குள் நுழைந்தார். அவரது தாயார், நடிகை முன்முன் சென், மற்றும் அவரது பாட்டி, பிரபல நடிகை சுசித்ரா சென், இதன் காரணமாக அவரது சினிமா வாழ்க்கை என்பது எளிதாகவே அமைந்துவிட்டது. தனது அம்மாவும், பாட்டியும் என இருவரும் திரைப்படத் துறையில் முக்கியப் பங்காற்றியவர்கள்.

ரியா சென்னின் முதல் திரைப்படம், "விஷகன்யா", 1991 இல் வெளியானது. பின்னர், பாலிவுட்டில் ஓரளவுக்கு வெற்றிகரமாக செயல்பட்டுக்கொண்டிருந்த நிலையில், அவரது பிரைவேட் வீடியோ, ஒரு MMS வீடியோவாக லீக்காகி அவருக்குப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Bollywood Actress Riyaa Senn Career Totally Changed MMS Controversy Overview

பிரைவேட் வீடியோ லீக்: அந்த வீடியோ மிக வேகமாகப் பரவியது. அவரது பிரைவேட் வீடியோ லீக்கான காலகட்டம் என்பது, சமூக வலைத்தளங்கள் அதிகப் பிரபலமாக இல்லாவிட்டாலும், பல இணையதளங்களில் அது வைரலானது. இந்த வீடியோ லீக்கிற்கு அவருடன் அப்போது காதலில் இருந்த காதலரான அஷ்மித் பட்டேல் தான் காரணம் என்று ரியா குற்றம் சாட்டினார், இதனையடுத்து அவர்கள் காதலும் பிரிவைச் சந்தித்தது. இந்த MMS சர்ச்சைக்குப் பிறகு, ரியா சென்னின் திரைப்பட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. படத் தயாரிப்பாளர்கள் அவரைத் தங்கள் படங்களில் நடிக்க வைக்கத் தயங்கினர், அவரது திரையுலகப் பயணம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்ததாகவே கூறலாம்.

வெப் சீரீஸ்: இருப்பினும், சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் டிஜிட்டல் தளங்களில் மீண்டும் தனது பயணத்தைத் தொடங்கினார். "ராகினி MMS: ரிட்டர்ன்ஸ்" மற்றும் "மிஸ்மேட்ச் 2" போன்ற வெப் சீரீஸ்களில் நடித்து, தனது துணிச்சலான கதாபாத்திரங்களால் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அந்த பிரைவேட் வீடியோ லீக் சர்ச்சைக்குப் பின்னர் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைந்திருந்தாலும், டிஜிட்டல் உலகம் அவருக்கு மீண்டும் ஒரு அடையாளத்தைப் பெற உதவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X