எங்களுக்குலாம் மரியாதையே இருக்காது.. ரஜினிகாந்த் மகள் பற்றி தனுஷ் இப்படி சொல்லிருக்காரே ப்பா
சென்னை: ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட தனுஷ் கடந்த வருடம் சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்தார். விவாகரத்துக்கு பிறகு இரண்டு பேரும் சிங்கிளாக இருந்துவருகிறார்கள். தங்களது மகன்களை கோ பேரண்ட்டிங் முறையில் வளர்க்கவும் செய்கிறார்கள். இந்நிலையில் ரஜினியின் இரண்டாவது மகளுடன் விஐபி 2 படத்தில் பணியாற்றிய அனுபவத்தை தனுஷ் பகிர்ந்த வீடியோ ட்ரெண்டாகியிருக்கிறது.
ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், தனுஷுக்கும் காதல் கொண்டேன் படத்தின்போது காதல் மலர்ந்தது. அந்தக் காதலுக்கு வீட்டு சம்மதம் கிடைத்ததை அடுத்து இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டார்கள். பெரிய வீட்டு மருமகன் ஆனாலும் அந்த வீட்டின் நிழலில் வளர்ந்துவிடகூடாது என்பதில் தெளிவாக இருந்து தனக்கான தனி செல்வாக்கை தன்னுடைய திறமை மூலம் உருவாக்கிக்கொண்டார் தனுஷ். அதற்கு ஐஸ்வர்யாவும் உறுதுணையாக இருந்தார்.
மனஸ்தாபம்: ஐஸ்வர்யாவின் இயக்குநர் பயணத்துக்கு தனுஷும் ரொம்பவே சப்போர்ட்டாக இருந்தார். யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்களையும் பெற்றார்கள். நல்லபடியாக போய்க்கொண்டிருந்த அவர்களது வாழ்க்கையில் விழ ஆரம்பித்த கீறல்கள் பெரிதாகி விவாகரத்தில் சென்று முடிந்தது. எப்படியாவது அவர்களை சேர்த்துவைத்துவிட வேண்டுமென்பதில் குடும்பத்தினர் எடுத்த முயற்சிகள் அத்தனையும் வீணாய் போயின.

என்ன பிரச்னை: இரண்டு பேருக்குமிடையே நடந்த பிரச்னை குறித்து ஏகப்பட்ட காரணங்கள் யூகங்களாக சொல்லப்பட்டன. அதாவது லதா ரஜினிகாந்த் தனுஷின் குடும்பத்தை சுத்தமாக மதிக்கவில்லை என்று ஒரு தகவலும், ரஜினியின் பெயரை சொல்லி தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா கடன் வாங்கி சிக்கலில் மாட்டிக்கொண்டார் என்று ஒரு தகவலும் சிறகடித்தன. ஆனால் உண்மையான பிரச்னை என்னவென்று குடும்பத்தினருக்கு மட்டுமே தெரியும்.
தனுஷின் த்ரோபேக் பேட்டி: இந்நிலையில் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா இயக்கத்தில் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்த அனுபவத்தை தனுஷ் பகிர்ந்திருந்த வீடியோ ஒன்று திடீரென ட்ரெண்டாகியிருக்கிறது. அந்த பட ரிலீஸ் சமயத்தில் அளித்திருந்த பேட்டியில், "சௌந்தர்யா ஷூட்டிங் ஸ்பாட்டில் சார் என்ன அங்க பிரச்னை. யார் பர்ப்பிள் ஷர்ட். என்ன அண்ணா இங்கே நடக்குது என்று கேட்டுக்கொண்டே இருப்பார். அந்த பர்ப்பிள் ஷர்ட் ரொம்ப தூரம் தள்ளி போய்க்கொண்டிருப்பார். அவரை பார்த்து இவர் என்ன அண்ணா நடக்குது இங்கே என்று கேட்டுக்கொண்டே இருப்பார்.
இரண்டு திருமணங்கள்: நாங்கள் ஆர்ட்டிஸ்ட்டுகள் எல்லாம் இங்கே நடித்துக்கொண்டிருப்போம். ஆனால் எங்களுக்கெல்லாம் மரியாதையே இருக்காது" என்றார். முன்னதாக சௌந்தர்யாவும் முதல் திருமணத்தில் தோல்வியை கண்டவர். அடுத்ததாக விசாகன் என்பவருடன் திருமணம் நடந்து இப்போது சந்தோஷமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











