ஒருமாதிரி ஆன ரஜினிகாந்த்.. போராடிய மருத்துவர்கள்.. மருத்துவமனையில் தேற்றிய பெண்மணி.. யார் அவர் தெரியுமா?

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக கூலி திரைப்படம் வெளியானது. ஒட்டுமொத்த இந்திய திரை உலகிலேயே மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்த திரைப்படம் சம்பாதித்து இருந்தது. ஆனால் படம் மோசமான தோல்வியை தழுவியது. அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். அவருக்கென்று மூத்த தலைமுறை முதல் இளைய தலைமுறை வரை ரசிகர்களாக இருக்கிறார்கள். 70 வயதுக்கு மேலானாலும் இன்றுவரை படு சுறுசுறுப்பாகவும், பிஸியாகவும் நடித்துவருகிறார் ரஜினி. அவரது சம்பளம் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் என்று திரைத்துறையில் பேச்சுக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

கூலி ரஜினி: அவரது நடிப்பில் கடைசியாக கூலி திரைப்படம் வெளியானது. அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். அதில் ரஜினியுடன் சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாகிர், அமீர்கான், ஸ்ருதிஹாசன், ரச்சிதா ராம் என பலர் நடித்திருந்தார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்பை இப்படம் சம்பாதித்திருந்தது. கண்டிப்பாக ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்து ஆயிரம் கோடி க்ளப்பில் சேர்ந்த முதல் தமிழ் ப்ட்ம் என்ற பெயரை பெறும் என்றும் திரைத்துறையினரும், ரசிகர்களும் உச்சகட்டமாக நம்பிக்கொண்டிருந்தார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

Here are Unknown incident From Rajinikanth s Personal Life
Photo Credit:

மோசமான தோல்வி: ஆனால் படமோ எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை, கடுமையான ட்ரோல்களை சந்தித்து லோகேஷ் கனகராஜின் மார்க்கெட்டையே அசைத்துப் பார்த்திருக்கிறது. கூலி படத்தில் புதுமையாக எதுவுமே இல்லை திரைக்கதையில் சொதப்பல், ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் என படத்தில் பெரும் குறைகள் மட்டுமே இருந்ததாக படம் பார்த்த ரசிகர்கள் கூறினார்கள். விமர்சன ரீதியாகத்தான் இப்படி என்றால் வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த கலெக்ஷனை படம் கொடுக்கவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை.

ஜெயிலர் 2: இப்போது அவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் கோவை உள்ளிட்ட பகுதிகளில் மும்முரமாக நடந்துவருகிறது. ரஜினிகாந்த்தும் ஆர்வத்துடன் அதில் கலந்துகொண்டிருக்கிறார். கூலியில் விட்டதை கண்டிப்பாக இப்படத்தில் பிடிக்க வேண்டும் என்ற முழு உழைப்பில் படக்குழு உழைத்துவருகிறது. இது ஒரு பக்கம் இருக்க கமல்ஹாசனுடன் பல வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு படத்தில் ஒன்றாக இணைந்து நடிக்கவிருக்கிறார் என்றும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. இது ஒட்டுமத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறது.

ரஜினி வாழ்க்கையில் நடந்தது: இந்நிலையில் ரஜினிகாந்தின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் குறித்து தெரியவந்திருக்கிறது. அதாவது தர்மயுத்தம் என்ற படத்தில் ரஜினிகாந்த் நடித்தபோது அந்த சமயத்தில் ரொம்பவே வைலண்ட்டாக இருந்திருக்கிறார். அந்தப் படத்தின் ஷூட்டிங் ஒரு வீட்டில் நடந்திருக்கிறது. அந்த வீட்டின் உரிமையாளர் ஒரு பெண். அச்சமயத்தில் ரஜினி குடித்துவிட்டுதான் ஷூட்டிங்கிற்கு வருவாராம். இதனால் ஷூட்டிங்கும் லேட்டாகி இருக்கிறது. இதனை தெரிந்துகொண்ட அந்த வீட்டின் உரிமையாளரான பெண்; ரஜினியை அழைத்து இப்படி குடித்துவிட்டு வந்தால் ஷூட்டிங் ஒழுங்காக நடக்குமா என்று அறிவுறுத்தி இருக்கிறார் அப்போதிருந்து குடித்துவிட்டு வர மாட்டேன் என ரஜினியும் உறுதியளித்திருக்கிறார்.

தேற்றிய பெண்மணி: ஒருகட்டத்தில் ஷூட்டிங் முடிந்தாலும் அவர் வைலண்ட்டாகவே இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. அப்போதெல்லாம் அம்மா அம்மா என்று இந்த பெண்மணியை அவர் கூறியிருக்கிறார். உடனே அங்கு இருந்த மருத்துவர் யார் அந்த பெண்மணி என்பதை விசாரித்து சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு தகவலை சொல்லி இருக்கிறார். உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்த அந்த ஹவுஸ் ஓனர் ரஜினியின் கைகளை பிடித்து சமாதானப்படுத்தி தேற்றி இருக்கிறார். மேலும் அந்தப் பெண்ணின் வீட்டிலேயே ரஜினி தங்குவதற்கு விருப்பமும் தெரிவித்து இருக்கிறார். அதன்படி சில நாட்கள் ரஜினி அப்பெண்ணின் வீட்டில் தங்கி நார்மல் ஆனாராம். அந்த பெண்தான் பின்னாளில் பெரிய சமூக சேவகியாக வந்த ரெஜினா வின்சென்ட் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றுவரை ரஜினியின் வீட்டில் அந்த பெண்ணின் புகைப்படம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X