மடியில் தூக்கி வைத்து கொஞ்சல்.. விஷயம் தெரிந்ததும் கிங் காங்கை தூக்கி வீசிய நடிகை.. அய்யோ பாவம்

சென்னை: கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக கலக்கியவர் கிங் காங். மாற்று திறனாளியாக இருந்தாலும் திறமை இருந்தால் வெல்லலாம் என சினிமாவில் நிரூபித்து காட்டிய அவர்; சமீபத்தில்தான் தனது மகளுக்கு ஜோராக திருமணத்தை நடத்திவைத்தார். திருமண வரவேற்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் எல்லாம் கலந்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் கிங் காங் 80களின் இறுதி மற்றும் 90களின் ஆரம்பத்தில் சினிமாவுக்கு வந்தவர். உயரம் குறைவான மாற்று திறனாளியான அவர் தன்னிடம் இருக்கும் திறமையை மட்டுமே நம்பி கோலிவுட்டுக்குள் நுழைந்தார். சில படங்களில் நடித்த அவருக்கு ரஜினியுடன் அதிசய பிறவி படத்தில் நடித்தபோது ஆடிய பிரேக் டான்ஸ் அவருக்கு பெரிய வெளிச்சத்தை பெற்றுக்கொடுத்தது. அதனையடுத்து பிஸியாகிவிட்டார்.

வடிவேலுவுடன் காமெடி: தொடர்ந்து காமெடி ரோல்களை செய்து கலக்கிவந்த அவர் வடிவேலு உள்ளிட்டோருடன் நடித்து பட்டையை கிளப்பினார். வைகை புயலும், கிங் காங்கும் சேர்ந்து செய்த ஏகப்பட்ட காமெடிகள் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து அசத்தியவர் அவர். ஷாருக்கானுடன் சென்னை எக்ஸ்பிரஸ் படத்திலும் நடித்திருந்தார்.

மகளுக்கு திருமணம்: இப்போது சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கும் அவர்; தனது மகள் கீர்த்தனாவின் திருமணத்தை சமீபத்தில்தான் ஜோராக நடத்தி முடித்தார். தமிழ் நட்சத்திரங்கள் மட்டுமின்றி கன்னட சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சிவராஜ்குமார் உள்ளிட்டோருக்கும் பத்திரிகை வைத்தார். அவர் அழைப்பிதழை பலருக்கும் கொடுத்தபோது; மகளின் திருமணத்தை வைத்து சம்பாதிக்க நினைக்கிறார் என்ற விமர்சனங்கள் எல்லாம் எழுந்தன.

incident of actress Sujatha throwing actor King Kong has been revealed
Photo Credit:

முதலமைச்சர் வருகை: ஆனால் அவருக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை என்பதுதான் உண்மை. கீர்த்தனாவின் திருமணம் கடந்த மாதம் நடைபெற்றது. பெசன்ட் நகர் கோயிலில் கல்யாணத்தை சிம்ப்பிளாக முடித்துவிட்டு; ரிசப்ஷனை தனியார் மண்டபத்தில் பிரமாண்டமாக வைத்திருந்தார். அந்த வரவேற்புக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் எல்லாம் வந்திருந்தார்கள். அது கிங் காங்கை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

தூக்கி வீசிய நடிகை: அதேசமயம் கிங் காங் பத்திரிகை வைத்த நடிகர்களில் பலர் வரவில்லை. சிவகார்த்திகேயன், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் வீட்டுக்கு சென்று வாழ்த்தினார்கள். இந்நிலையில் கிங் காங் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்று தெரியவந்திருக்கிறது. அதாவது இயக்குநர் செந்தில்நாதன் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருந்திருக்கிறார் கிங் காங். அந்தப் படத்தில் சுஜாதாதான் ஹீரோயினாம்.

incident of actress Sujatha throwing actor King Kong has been revealed
Photo Credit:

ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் அமர்ந்திருந்தபோது அவரிடம் கிங் காங்கை இயக்குநர் அறிமுகப்படுத்தியிருக்கிறார். அந்த நேரத்தில் கிங் காங் ரொம்பவே உயரம் குறைவாக பார்ப்பதற்கு சிறு பிள்ளை போல் இருப்பாராம். இயக்குநர் சொல்லிவிட்டு சென்றதை அடுத்து; அவரை தூக்கி தனது மடியில் வைத்து கொஞ்சிக்கொண்டிருந்தாராம் சுஜாதா. அந்த சமயம் வந்த செந்தில்நாதன், என்னம்மா மடியில் வைத்து கொஞ்சுற.. அவன் வயது என்ன தெரியுமா 20 என சொன்னாராம். உடனே பதறிப்போன நடிகை கிங் காங்கை மடியிலிருந்து தூக்கி வீச; ஆறடி தூரத்தில் சென்று விழுந்தாராம். இந்த சம்பவத்தை காதல், வல்லவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த சுகுமார் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X