அண்ணி, பாப்பா இல்லாம வீடே வெறுமை.. ஒன்னா வாழணும்.. ஜோதிகா பற்றி கார்த்தி உருக்கம்.. செம பாசம்!

சென்னை: சூர்யாவும், ஜோதிகாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். அவர்கள் கோலிவுட்டின் சூப்பர் ஜோடிகளில் ஒன்றாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். இப்போது இருவரும் மும்பையில் செட்டிலாகியிருக்கிறார்கள். அதனை வைத்து பலரும் பல கதைகளை கட்ட ஆரம்பித்தார்கள். ஆனால் அதெல்லாம் உண்மையில்லை என்பதை சம்பந்தப்பட்டவர்கள் தெளிவுப்படுத்திவிட்டார்கள். இந்நிலையில் கார்த்தி கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.

பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் சூர்யாவும், ஜோதிகாவும் சேர்ந்து நடித்தபோது அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பல வருடங்கள் எந்த சர்ச்சைகளிலும் சிக்காமல் தீவிரமாக காதலித்தார்கள். தங்கள் காதலை வீட்டில் சொல்லியபோது சிவக்குமார் கடுமையாக எதிர்த்தார். ஆனால் சூர்யா காதலில் உறுதியாக நின்றார். அதன் காரணமாக கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள்.

ஜோடினா இவங்கதான் ஜோடி: திருமணமாகி குழந்தை பிறந்ததால் சினிமாவிலிருந்து கொஞ்ச வருடங்கள் ஒதுங்கியிருந்தார் ஜோ. பிறகு 36 வயதினிலே படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார். தான் மீண்டும் நடிக்க வந்ததற்கு சூர்யா முழு சப்போர்ட் செய்தார் என்றும் அவர் போல் ஒரு கணவரை எங்கேயும் பார்க்க முடியாது பல முறை நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டிருக்கிறார். சூர்யாவும் ஜோதிகா பற்றி பல மேடைகளில் அவ்வாறே பேசியுள்ளார்.

Karthi s Throwback Interview about Suriya and Jyothika s family life goes viral Joint family is true happiness
Photo Credit:

மும்பையில் செட்டில்: தனது இரண்டாவது இன்னிங்ஸில் பிஸியாக நடித்துவரும் ஜோவின் இப்போது முழுக்க முழுக்க ஹிந்தியில் இருக்கிறது. இதன் காரணமாகவும், தனது தாய்க்காகவும் கணவர் மற்றும் குழந்தைகளோடு கடந்த சில காலமாக மும்பையில் செட்டில் ஆகியிருக்கிறார். அவ்வபோது சென்னைக்கு வந்து செல்கிறார். அவர்கள் மும்பைக்கு குடிபெயர்ந்ததை வைத்து ஏகப்பட்ட கதைகள் கட்டவிழ்க்கப்பட்டன.

மறுத்த சூர்யா, ஜோதிகா: அதனை இரண்டு பேருமே திட்டவட்டமாக மறுத்துவிட்டார்கள். அதிலும் ஜோ மீண்டும் நடிக்க வந்தது சிவக்குமாருக்கு பிடிக்கவில்லை அதுதான் மோதலின் முதல் புள்ளி என்றெல்லாம் ஒருதரப்பினர் பேசினார்கள். அதனை மறுத்த அவர், 'தான் மீண்டும் நடிக்க வந்தது என்னுடைய மாமனாருக்கு சந்தோஷம்தான்' என நெத்தியடியாக கூறிவிட்டார். இருந்தாலும் அவர்களுக்குள் மோதல் என்று தொடர்ந்து பேசுபவர்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அந்தக் குடும்பத்தினர் தங்களது வாழ்க்கையிலும், சந்தோஷத்திலும் கவனம் செலுத்தி நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

கார்த்தியின் பேட்டி: இந்நிலையில் நடிகரும், சூர்யாவின் தம்பியுமான கார்த்தி சில வருடங்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்று திடீரென சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது. அந்தப் பேட்டியில் அவர், "அண்ணி ஜோதிகாவும் பாப்பாவும் மும்பை போய்விட்டு வந்தால் வீடே காலியாக இருக்கும். அப்படி வீட்டில் இருக்க முடியாது. எல்லோரும் ஒன்றாக இருந்தால்தான் சந்தோஷமாக இருக்க முடியும். கூட்டு குடும்பம் அவ்வளவு அழகாக இருக்கிறது. முக்கியமாக குழந்தைகள் வளர்வதற்கு அதுதான் அழகான விஷயம். என் நண்பர்கள் வீட்டுக்கு செல்லும்போது என் நண்பர் அவர் மனைவி குழந்தைதான் இருப்பார்கள்.

தியாகம் செய்ய வேண்டும்: அந்தக் குழந்தை எப்போதும் அப்பா முகத்தையும், அம்மா முகத்தையும் மட்டும்தான் பார்க்கும். விட்டுகொடுத்து வாழ தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் தனக்கு மட்டுமே வேண்டும் என்ற மனப்பான்மையில் இருக்கிறது. கூட்டு குடும்பத்தில் அந்த பிரச்னை இல்லை. என் தங்கை குழந்தையோடு தியா (சூர்யாவின் மகள்) விளையாடுவாள்.

வீட்டில் நிறைய பேர் இருக்கிறார்கள். ஏதாவது தியா சாப்பிட வேண்டுமென்றால் எல்லோருக்கும் கொடுத்துவிட்டுத்தான் தியா சாப்பிடும். ஏனென்றால் கொடுப்பதற்கு அங்கு ஆள் இருக்கிறார்கள். எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் சில தியாகங்கள் செய்யத்தான் வேண்டும். ஆனால் அப்படி செய்யும்போது அழகாக இருக்கும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X