மாதம்பட்டி ரங்கராஜை விடுங்க.. ஜாய் கிரிஸில்டாவிடம் விஜய் என்ன கேட்டாரு தெரியுமா?.. செம மேட்டர்
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார். முதல் மனைவியான ஸ்ருதியை அவர் விவாகரத்து எதுவும் செய்யாமலேயே இந்த காரியத்தில் ஈடுபட்டிருக்கிறார். இது ஒருபக்கம் இருக்க தன்னை கர்ப்பமாக்கி ரங்கராஜ் ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிஸில்டா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரும் கொடுத்திருக்கிறார்.
பொன்மகள் வந்தாள் படத்தின் இயக்குநர் ஃபெட்ரிக்கை திருமணம் செய்துகொண்டவர் ஜாய் கிரிஸில்டா. அவர் ஜில்லா, மெர்சல், வேலைக்காரன் உள்ளிட்ட படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியிருக்கிறார். ஃபெட்ரிக்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்தத் திருமண வாழ்க்கையிலிருந்து வெளியே வந்த அவர்; சில ஆண்டுகள் சிங்கிளாக இருந்தார். அந்த சமயத்தில்தான் பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.
காதலாக மாறிய பழக்கம்: முக்கியமாக ரங்கராஜுக்கு சில நிகழ்ச்சிகளில் ஆடையையும் வடிவமைத்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அதேசமயம் ஸ்ருதியை ஏற்கனவே ரங்கராஜ் திருமணமும் செய்திருந்தார். அவரை விவாகரத்து செய்யாமலேயே ஜாய் கிரிஸில்டாவை திருமணம் செய்துவிட்டார். அதுதொடர்பான புகைப்படத்தையும் ஜாயே வெளியிட்டிருந்தார்.

வீதிக்கு வந்த பஞ்சாயத்து: திருமணம் செய்த கையோடு ஜாயிடமிருந்து ரங்கராஜ் கொஞ்சம் கொஞ்சமாக விலகுவது போல் தெரிகிறது. இதனால் கொதிப்படைந்த கிரிஸில்டா நேராக காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்து புகார் கொடுத்தார். ரங்கராஜும் ஜாய் மீது அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த விஷயங்களால் அவர்கள் இரண்டு பேருக்குமான பிரச்னை மேற்கொண்டு ஊடக வெளிச்சத்தை பெற்றது.
விசாரணை நடத்திய போலீஸ்: தனக்கு இருக்கும் உயர்ந்த இட பழக்கவழக்கம், செல்வாக்கை கொண்டு தன் மீது பாயவிருக்கும் சட்ட நடவடிக்கைகளை மாதம்பட்டியார் தடுக்கிறார் என்பது ஜாயின் நிலைப்பாடாக இருந்தது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும் tag செய்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். நிலைமை இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு இந்தப் புகாரின் அடிப்படையில் மாதம்பட்டி ரங்கராஜிடம் தீவிரமான விசாரணையை மேற்கொண்டார்கள் காவல் துறையினர்.
ட்ரெண்டாகும் பேட்டி: இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து என்ன நடக்குமோ என்பதற்கு காலத்திடம்தான் பதில் இருக்கிறது. இந்நிலையில் ஜாய் கிரிஸில்டா கொடுத்த பேட்டி ஒன்று திடீரென ட்ரெண்டாகியிருக்கிறது. அந்தப் பேட்டியில் பேசிய அவர், "மெர்சல் படத்தில் பிஸ்தா க்ரீன் கலரில் ப்ளெய்ன் சட்டை ஒன்றை விஜய் போட்டிருப்பார். அந்த சட்டையை நான் எடுக்கும்போது அதன் விலை 1200 ரூபாய். அவர் ரேஞ்சுக்கு கம்மிதான். இதனை அவர் யூஸ் செய்வாரா என்றுதான் யோசித்தேன்.
ஆனால் அவர் அதையெல்லாம் யோசிக்கவில்லை. சட்டையை போட்டு பார்த்த பிறகு அவருக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. உடனே என்னிடம் அவர், இந்த மாதிரி சட்டை இன்னும் இரண்டு எனக்கு வேண்டும் என கேட்டார். உடைகளை பொறுத்தவரை பிராண்ட், எவ்வளவு விலை என்பது குறித்தெல்லாம் விஜய் பெரிதாக கண்டுகொள்ளமாட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











