அதுவரைக்கும் ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு.. ஒன்னுமே தெரியல.. மனம் திறந்த மாதம்பட்டி ரங்கராஜ்

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்திருந்தார். அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. மேலும் ஜாயும் தனது பங்குக்கு காவல் ஆணையர் அலுவலகத்தில் ரங்கராஜ் மீது புகார் ஒன்றையும் அளித்தார். அதனையடுத்து ரங்கராஜிடம் சமீபத்தில் தீவிர விசாரணையும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் ஹீரோ மாதம்பட்டி ரங்கராஜ் முதலில் ஸ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ஸ்ருதி - ரங்கராஜின் திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருந்த நிலையில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுடன் ரங்கராஜுக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது அதுமட்டுமின்றி அந்த காதல் திருமணத்திலும் சென்று முடிந்திருக்கிறது.

ஜாய் வெளியிட்ட புகைப்படங்கள்: இந்த விஷயத்தை மாதம்பட்டியார் சீக்ரெட்டாகவே வைத்திருந்தார். ஆனால் ஜாயோ அண்மையில் தனது எக்ஸ் பக்கத்தில் தங்களுக்குள் நடந்த திருமணம் தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டார். அப்போது பலரும் ரங்கராஜை கழுவி கழுவி ஊற்றினார்கள். ஸ்ருதியை விவாகரத்து செய்யாமலேயே இவர் எப்படி இரண்டாவது திருமணம் செய்யலாம் என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு ரங்கராஜோ தனது பங்குக்கு மௌனத்தையே பதிலாக கொடுத்துக்கொண்டிருந்தார்.

Madhampatty Rangaraj s Throwback Interview Goes Trending on Social Media
Photo Credit:

காவல் நிலையம் சென்ற பஞ்சாயத்து: சூழல் இப்படி இருக்க அவர் மீது ஜாய் கிரிஸில்டா சமீபத்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில் தன்னை கர்ப்பமாக்கி ரங்கராஜ் ஏமாற்றிவிட்டார் என்றும் அவர்தான் தனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு பொறுப்பு என்றும் குறிப்பிட்டிருந்தார். அவரது இந்தப் புகார் பெரிய பரபரப்பை இந்த விஷயத்தில் ஏற்படுத்திவிட்டது.

ரங்கராஜின் ரியாக்‌ஷன்: இதனால் பொறுத்துக்கொள்ள முடியாத ரங்கராஜ் தனது பங்குக்கு ஜாய் மீது அவதூறு வழக்கை தொடர்ந்தார். மேலும் தன் தொடர்பான வீடியோக்கள் அனைத்தையும் டெலிட் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். இருப்பினும் ஜாய் அதெல்லாம் கேட்காமல் தொடர்ந்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்ட வண்ணமே இருக்கிறார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரங்கராஜிடம் தீவிரமான விசாரணையும் சமீபத்தில் நடைபெற்றது.

ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் கொடுத்த பேட்டியில், "ஆரம்பத்தில் எனக்கு ஒரு காஃபிகூட போட தெரியாது. அதுவரைக்கும் சமைத்து கொடுத்ததை சாப்பிட்டு கொண்டிருந்தோம். ஆனால் அதனையே ஒரு தொழிலால தேர்ந்தெடுக்க முடிவு செய்தபோது அது குறித்த அனுபவமும், அறிவும் வேண்டும். ஆரம்பத்தில் எனக்கு ஒன்றுமே தெரியாது. ரொம்பவே கஷ்டமாக இருந்தது. பிறகு கற்றுக்கொண்டேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்களோ இப்படியே சமையல் வழியிலேயே சென்றிருக்கலாம்; இப்போது தேவையில்லாத சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறீர்களே மாதம்பட்டியாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X