வரலட்சுமியை மாற்ற சரத் ட்ரை செஞ்சாரு.. அவங்க ஸ்ட்ரிக்ட்டா நோ சொல்லிட்டாங்க.. ராதிகா ஓபன் டாக்

சென்னை: நடிகை வரலட்சுமி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஃபேமஸான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவர் இப்போது விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் படத்தில் நடித்துவருகிறார். இதில் அவருக்கு முக்கியமான ரோல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அவர் ஹாலிவுட் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அதுமட்டுமின்றி இயக்குநராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார் அவர்.

சரத்குமாரின் மகளான வரலட்சுமி போடா போடி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் வரலட்சுமிக்கு நல்ல பெயர் கிடைத்தது. தொடர்ந்து தாரை தப்பட்டை, சண்டகோழி 2 உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்த அவர்; நல்ல நடிகை என்ற பெயரை பெற்றாலும் ஹிட் எதையும் பெற முடியவில்லை. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் அவர் பிஸியான நடிகையாகவே வலம் வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் செய்துகொண்ட வரலட்சுமி: இதற்கிடையே அவர் நிக்கோலாய் என்பவரை காதலித்தார். இரண்டு பேரின் திருமணத்துக்கும் சரத்குமார் தரப்பு பச்சை கொடி காண்பித்ததை அடுத்து அவர்களின் திருமணம் கடந்த வருடம் தாய்லாந்தில் வைத்து பிரமாண்டமாக நடந்தது. நிக்கோலாய்க்கு ஏற்கனவே திருமணமாகி டீன் ஏஜில் ஒரு மகள் இருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது. திருமணத்துக்கு பின்பு அனைவரும் ஒற்றுமையோடு வாழ்ந்துவருகிறார்கள்.

Radhika s throwback interview about Varalakshmi and Sarathkumar Here are details
Photo Credit:

ஜன நாயகனில் வரலட்சுமி: நிக்கோலாயை திருமணம் செய்த பிறகும் நடிப்பில் கவனம் செலுத்துகிறார் வரு. அவருக்கு கணவரும் ஃபுல் சப்போர்ட்டை தருகிறார். இப்போது விஜய்யுடன் ஜன நாயகன் படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் அவருக்கு முக்கியமான ரோல் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். ஏற்கனவே சர்கார் படத்தில் விஜய்யுடன் நடித்திருந்தார். ஆனால் அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. எனவே விஜய்யுடன் நடிக்கும் இரண்டாவது படமாவது வெற்றியடைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவருக்கு எகிறியிருக்கிறது.

இயக்குநர் அவதாரம்: இத்தனை நாட்கள் தனது எதார்த்தமான மற்றும் சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துவந்த வரலட்சுமி இப்போது இயக்குநராகவும் அவதாரம் எடுக்கவிருக்கிறார். அந்தவகையில் அவர் இயக்கும் படத்துக்கு சரஸ்வதி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அப்படத்தை அவரே தயாரிக்கவும் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வரலட்சுமி மற்றும் சரத்குமார் குறித்து ராதிகா பேசியிருக்கும் பழைய வீடியோ கவனத்தை ஈர்த்திருக்கிறது.

நோ சொன்ன வரு: அவர் அளித்திருந்த அந்தப் பேட்டியில், "சரத்குமார் இப்போது முழுக்க முழுக்க சைவமாக மாறிவிட்டார். அவர் வரலட்சுமியையும் அசைவத்திலிருந்து சைவத்துக்கு மாற்றுவதற்கு ரொம்பவே முயற்சி செய்தார். ஆனால் வருவோ, 'அப்பா என்னால் முடியவே முடியாது. கிட்னி, லிவர் என எது போனாலும், எந்த நோய் வந்தாலும் அசைவத்தை நிறுத்தமாட்டேன் என ஸ்ட்ரிக்ட்டாக நோ சொல்லிவிட்டார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X