ரஜினிகாந்த் சொன்னதை கேட்கல.. சாப்பாடு போல சரக்கு சாப்பிட்டேன்.. ரோபோ சங்கரே சொன்னது

சென்னை: ஆரம்ப காலக்கட்டத்தில் சாதிக்க வேண்டும் என துடிக்கும் பலர் சினிமாவில் நுழைந்து கொஞ்சம் பணத்தையும் சில பார்ட்டிகளையும் பார்த்துவிட்டால் அப்படியே அதற்கு அடிக்ட் ஆகிவிடுவது வழக்கம். இயக்குநர் தினந்தோறும் நாகராஜ் எல்லாம் மது போதை காரணமாகவே வாழ்க்கையை தொலைத்தேன் என அவரே பேட்டி அளித்துள்ளார்.

பல பிரபலங்கள் குடி போதையால் தங்களது குடியையும் புகழையும் கெடுத்துள்ளனர். நடிகர் ரோபோ சங்கருக்கு உடல்நலனில் கோளாறு வருவதற்கு மிக முக்கிய காரணமே குடி போதை தான் என அவரே ஒரு பேட்டியில் மனம் விட்டுப் பேசியுள்ளார்.

Robo Shankar Once Ignored Rajinikanth s Advice on Alcohol Faced Health Issues Later

ரஜினிகாந்த் சொன்ன அட்வைஸ் கூட கேட்காமல் சரக்கை சாப்பாடு போல பயன்படுத்தியதால் தான் தனக்கு உடல்நலம் ரொம்பவே மோசமானது என்றும் தற்போது அதையெல்லாம் விட்டு மீண்டு வந்துவிட்டேன் என பேட்டியளித்த ரோபோ சங்கர் மீண்டும் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக இந்த உலகத்தை விட்டுப் பிரிந்துவிட்டது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Robo Shankar Once Ignored Rajinikanth s Advice on Alcohol Faced Health Issues Later

மனைவி போட்ட ஆட்டம்: ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா தனது கணவர் ரோபோ சங்கர் வெறும் 46 வயதுக்குள் தன்னை விட்டுப் பிரிந்த நிலையில், தாளமுடியாத துக்கத்தில் இருந்தார். ஆம்புலன்சில் உடலை ஏற்றும் போது கூட அவர் பெரிதாக அழவில்லை. ஒவ்வொரு பிரபலங்களும் வந்து அஞ்சலி செலுத்தும் போது கூட கல் போலவே இருந்தார். கடைசியில், தனது மொத்த சோகத்தையும் கரைக்கும் விதமாக தனது கணவர் கடைசியாக போகும் போது பிரியாவிடை கொடுக்க ஆடியது பலரையும் உருக வைத்தது. இப்படி கணவர் மரணத்தில் மனைவி ஆட்டம் போடலாமா? என சிலர் விமர்சனங்களை முன் வைத்தாலும், அது அவருடைய காதல் என பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Robo Shankar Once Ignored Rajinikanth s Advice on Alcohol Faced Health Issues Later

மகனாக மாறிய மாப்பிள்ளை: ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா ரொம்ப காலமாகவே கார்த்தியை தம்பியாக தத்தெடுத்து வளர்த்து வந்த நிலையில், தாய் மாமன் என்கிற முறையோடு தனது மகளையும் கட்டிக் கொடுத்தார். ரோபோ சங்கருக்கு மகனாக மாறி மொட்டை அடித்து மீசை எடுத்து மின் மயானத்தில் கார்த்தி இறுதிச்சடங்குகளை செய்த காட்சிகள் பலரையும் நெகிழ வைத்தது.

ரஜினி சொல்லியும் கேட்கல: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்பவுமே ஒரு அட்வைஸ் சொல்வார். சரக்கு எல்லாம் அகேஷனலாக எப்போதாவது லைட்டா எடுத்துக்கணும். ஆனால், நான் அந்த அட்வைஸ் தெரிந்தும் கேட்கவே இல்லை. சாப்பாடு போல சரக்கை சாப்பிட்டேன். அதனால், தான் மருத்துவமனையில் உயிருக்கு போராடினேன், என்னுடைய குடும்பம் தான் என்னை மீட்டுக் கொண்டு வந்தது. நான் மத்தவங்களுக்கு அட்வைஸ் சொன்னாலும் யாரும் கேட்கமாட்டாங்க. அவங்களாவே பட்டுத் திருந்தட்டும். குடி அந்தளவுக்கு பேராபத்தான விஷயம் என ரோபோ சங்கர் உடல் மெலிந்த தோற்றத்தில் இருந்து மீண்டு வந்த போது அளித்த பேட்டியில் பேசிய காட்சிகளை தற்போது ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

குடி குடியை கெடுக்கும்: மதுப்பழக்கம் உடலுக்கு தீங்கானது, குடி குடியை கெடுக்கும் என படங்கள் போடுவதற்கு முன்பாக விளையாட்டாக சொல்வது கிடையாது. பலருக்கும் புத்தி வரட்டும் என்பதற்காகத்தான் சொல்கின்றனர். கூலி படத்தில் கூட மொத்த சரக்கையும் அண்டாவில் ஊற்றி ரஜினிகாந்த் எட்டி உதைத்துக் கொட்டும் காட்சிகளும் சமூக பொறுப்போடு தான் வைக்கப்பட்டுள்ளது. பல பிரபலங்களின் மரணத்துக்கும் அவர்களுடைய குடும்பத்தினர் அப்பா இல்லாமல், கணவன் இல்லாமல், மகன் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்க காரணமே இந்த குடிப்பழக்கம் தான். தயவு செய்து அதற்கு யாரும் அடிமையாகிவிடாதீர்கள் என்பதே வேண்டுகோள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X