ஏன் டா என்னை குடிக்கவிடல.. சரக்குக்காக நண்பரிடம் கோபப்பட்ட இளையராஜா.. இது தனி கதை!

சென்னை: இளையராஜாவுக்கு சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள். லண்டனில் அரங்கேற்றிய சிம்பொனி இசையை இந்த நிகழ்ச்சியிலும் அரங்கேற்றினார் ராஜா. அதையெல்லாம் தாண்டி இளையராஜா, ரஜினிகாந்த், மகேந்திரன் பல வருடங்களுக்கு முன்பு பீர் குடித்த விஷயம்தான் இந்த நிகழ்ச்சியில் ஹைலைட்டாக மாறியது.

இந்திய சினிமாவின் இசை அடையாளமாக திகழ்ந்துகொண்டிருப்பவர் இளையராஜா. கடந்த 50 வருடங்களாக இசையமைத்துவரும் அவர் இதுவரை 1500 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இத்தனை படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் ஒரு படம் மாதிரியே இன்னொரு படத்துக்கு இசையமைக்காதது அவரது தனி சிறப்பு. அதுமட்டுமின்றி இந்தக் கால தலைமுறையினரும் அவரது இசையை கொண்டாடிவருகிறார்கள்.

சிம்பொனி இளையராஜா: சினிமாவில் இசையமைத்துவந்த அவர் அண்மையில் லண்டனுக்கு சென்று சிம்பொனி இசையையும் அரங்கேற்றிவிட்டு வந்தார். இந்தியாவிலிருந்து முதன்முறையாக சிம்பொனியை அரங்கேற்றியவர் என்ற பெருமையையும் அவர் அதன் மூலம் பெற்றார். அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்த சூழலில்; தமிழ்நாடு அரசு சார்பிலும் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Selvaraj shared a throwback incident where Ilayaraja got angry because he wasn t allowed to drink alcohol
Photo Credit:

பிரமாண்ட விழா: அதன்படி கடந்த 13ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் அந்த பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல், சத்யராஜ், நாசர் என பலர் கலந்துகொண்டார்கள். இனி வருடா வருடம் இளையராஜா பெயரில் இசை துறையில் விருது வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்தார்.

ரஜினி பேச்சு: அந்த நிகழ்ச்சியில் அனைவரது பேச்சும் சிறப்பாக இருந்தாலும் ரஜினியின் பேச்சு ஹைலைட்டாக இருந்தது. இள வயதில் தாங்கள் செய்த செயல் குறித்த ராஜா பேசியபோது குறுக்கிட்ட ரஜினிகாந்த், 'ஜானி பட ஷூட்டிங்கின்போது நான், மகேந்திரன், ராஜா ஆகிய மூன்று பேரும் பீர் குடித்தோம். அப்போது இளையராஜா 1/2 பாட்டில் பீர் குடித்துவிட்டு ஆடிய ஆட்டம் இருக்கே.. நடிகைகளை பற்றிய கிசுகிசுக்களாக நள்ளிரவு 3 மணிவரை பேசிக்கொண்டிருந்தார். அண்ணன் அப்போலாம் செம லவ். அதனால்தான் இப்படி பாடல்கள் வந்தன' என கலகலப்பாக பேசினார்.

ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் கதாசிரியரும், இளையராஜாவின் நெருங்கிய நண்பருமான செல்வராஜ் அளித்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் கொடுத்த பேட்டி ஒன்றில், 'பஞ்சு அருணாச்சலத்திடம் இளையராஜாவுக்காக வாய்ப்பு கேட்டு ஒத்துக்கொள்ள வைத்துவிட்டேன். ராஜாவும் வந்தார். அவரை பஞ்சு பார்த்த பிறகு, என்ன இவர் இவ்வளவு இள வயதாக இருக்கிறாரே என்று ஆச்சரியப்பட்டார்.

கோபப்பட்ட ராஜா: அதேசமயம் பாடலை ராஜா பாடிய பிறகு பஞ்சு அருணாச்சலம் அசந்துவிட்டார். நான் சொல்லிவிடுகிறேன் என்று கூறிவிட்டு; மது அருந்த ஆரம்பித்தார். அப்போது ராஜாவிடம் நீங்கள் மது குடிக்கிறீர்களா என கேட்டார். ஆனால் எனக்கு ராஜாவை பற்றி நன்றாக தெரியும். அவர் மது குடித்துவிட்டு ஏதாவது பேசிவிட்டால் வாய்ப்பு போய்விடுமே என பயந்து; 'அவருக்கு அந்தப் பழக்கம் இல்லை' என கூறிவிட்டேன். அங்கிருந்து நாங்கள் கிளம்பியதும் இளையராஜா என்னிடம் 'அவர்தான் என்னிடம் குடிக்கிறியானு கேட்டாரு. நீ ஏன் தடுத்த. என்னை ஏன் டா குடிக்கவிடல; நீ மட்டும் குடித்தாயே என சண்டை போட்டார். பிறகு எப்படியோ அவரை சமாதானம் செய்துவிட்டேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X