Thaththuvamasi 5: ஆண்டவர் படத்தில் பக்காவான ஐட்டம் பாட்டு.. தத்துவத்துக்கு பஞ்சமில்லை பாஸ்!

சென்னை: தமிழ் சினிமாவில் இருக்கும் துள்ளலிசை பாடல்களான அதாவது, ஐட்டம் பாடல்கள் என்று பரவலாக சொல்லப்படுகிற இந்த பாடலகள் அனைத்தும் இரட்டை அர்த்த வசனங்களையோ, காமத்தைப் பற்றி பேசுவதைப் போலவே, நேரடியாக பெண்ணின் உடலை வர்ணித்துமே இடம் பெற்றுள்ளது. அதில் அங்காங்கே பாடல்களில் வாழ்க்கைத் தத்துவங்களும் இடம் பெற்றுள்ளது. அப்படியான பாடல்களை எல்லாம் வாராவாரம் ஒவ்வொன்றாக சுட்டிக் காட்டி வருகிறோம்.

அப்படி இந்த வாரத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த வசூல் ராஜா MBBS படத்தில் இடம்பெற்ற பாடலான, " சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்" பாடல் வரிகளில் உள்ள வாழ்க்கைத் தத்துவங்களைக் காணலாம். இந்த பாடலை கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார். பாடலின் முதல் சரணத்தில் வரும் வரிகளிலேயே அட்டகாசமான வாழ்க்கை தத்துவம் உள்ளது.

அதாவது, "வய்த்து மட்டும்
நிறைச்சி கிட்டு நான்கு
புலன் பட்டினியா
கெடந்தா யாருக்கு லாபம்".

ஐம்புலன்களுக்கும் விருந்து: இந்த வரிகள் தான் அவை. இந்த வரிகள் ஐந்து புலன்களாக இருக்க கூடிய கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தோல் ஆகியவற்றில், வாயில் உள்ள நாக்கிற்கு மட்டும் சுவையை உணர வைத்து வயிற்றை நிரப்பிக் கொண்டு வாழ்ந்தால், அந்த வாழ்க்கையால் இப்படியான வாழ்க்கையை வாழக்கூடிய அந்த நபருக்கு கூட லாபம் இல்லை. இப்படியான வாழ்க்கையை வாழாமல், ஐம்புலன்களுக்கும் விருந்து வைப்பது போன்ற வாழ்க்கையை வாழ வேண்டும். அதாவது இந்த உலகத்தைச் சுற்றிப் பார்த்து கண்ணுக்கு விருந்து வைக்க வேண்டும். நல்ல இசைகளை, நல்ல சொற்களை வாழ்க்கையை மேம்படுத்துகிற உரையாடல்களை கேட்க வேண்டும்.

Thaththuvamasi Series Kamal Haasan Vasool Raja Seena Thana Song Philosophy Lyrics - Original
Photo Credit:

பயணப்படு: சுத்தமான காற்றைச் சுவாசிக்க வேண்டும், ஒரே ஊர் காற்றை மற்றும் சுவாசிக்காமல் பல நாடுகளுக்கு பயணப்பட்டு அந்தந்த நாட்டு காற்றைச் சுவாசிக்க வேண்டும். பல மணங்களை நுகர்ந்து பார்க்க வேண்டும். தோலுக்கும் அதேதான். பல நீரோடைகளில் குளிக்க வேண்டும், கடும் வெயிலையும் எதிர்கொள்ள வேண்டும், நடுங்கும் பனியையும் எதிர்கொள்ள வேண்டும். இது மட்டும் இல்லாமல் சக மனிதனுக்கு ஆறுதல் தேவைப்படும் போது அவர்களின் கைகளைப் பிடித்தோ, தோளின் மீது கைகளைப் போட்டோ நல்ல உணர்வைக் கடத்த வேண்டும் என்பதை உணர்த்துகிறது. மொத்தத்தில் உலகம் முழுவதும் பயணப்பட்டால் ஐம்புலன்களுக்கும் விருந்து வைக்கலாம், அதன் மூலம் பல அனுபவங்களைப் பெறலாம் என்கிறது இந்த வரிகள்.

Take a Poll

முதல் சரணத்தில் இடம் பெற்றுள்ள சில வரிகள், " உலகம் இன்பத்துக்கு
ஏங்கி கெடக்கு ஒழுக்கம்
ஊருக்கு ஊர் மாறி கெடக்கு
தப்புகள் இல்லையென்றால்
தத்துவம் இல்லையடா
தத்துவம் பிறக்கட்டுமே
தப்பு பண்ணேன்டா" .

Thaththuvamasi Series Kamal Haasan Vasool Raja Seena Thana Song Philosophy Lyrics - Original
Photo Credit:

தவறு: இந்த வரிகள் சொல்லும் தத்துவமே சிறப்பு எனலாம். அதாவது, இந்த உலகமே தவறில் இருந்து தான் அனைத்தையும் கற்றுக் கொண்டுள்ளது. எனவே, தவறு செய்தால் கொஞ்சமும் தயங்க வேண்டாம், அதை நினைத்து குற்ற உணர்வுக்கு ஆளாக வேண்டாம் என்று நம்பிக்கை கொடுக்கிறது.

பாடலின் இரண்டாவது சரணத்தில் இடம் பெற்றுள்ள வரிகளும் வாழ்க்கைத் தத்துவத்தை உள்ளடக்கியதுதான். அதாவது, " ஓடும் தண்ணியில
பாசியில்லையே உணர்ச்சி
கொட்டி புட்டா நோயும்
இல்லையே வாழ்க்கை
வாழ்வதற்கே ஜெமினி
எடுத்த படம் அத நான்
உனக்கு மட்டும் காட்ட
போறேன்டா".

Thaththuvamasi Series Kamal Haasan Vasool Raja Seena Thana Song Philosophy Lyrics - Original
Photo Credit:

இயக்குநரின் போராட்டம்: இந்த வரிகள் மிகவும் எதார்த்தமான வரிகளும் கூட. அதாவது மனதில் எதையும் மறைத்து கொள்ளாமல் இருப்பவர்கள், தங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படையாக பேசுவார்கள். அப்படி இருக்கும்போது, அவர்களுக்கு மனதளவில் தொய்வோ, உடலளவில் நோயுமோ கூட ஏற்படாது. இந்த பாடலை நீக்கிவிட்டால் படத்திற்கு யூ சான்றிதழ் தருகிறோம் என்று சென்சார் தரப்பில் சொல்ல, இயக்குநரோ இந்த பாடலுக்காக சென்சார்போர்டில் வாக்குவாதம் செய்து படத்தில் இடம்பெறச் செய்துள்ளார் இயக்குநர் சரண்.

Thaththuvamasi Series Kamal Haasan Vasool Raja Seena Thana Song Philosophy Lyrics - Original
Photo Credit:

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X