Thathuvamasi 8: இந்த பாட்டில் இத்தனை தத்துவமா.. பாடலாசிரியர் பட்டையை கிளப்பி இருக்காரே!

சென்னை: தமிழ் சினிமாவில் இடம் பெறும் குத்துப் பாடல்கள், கிளாமர் பாடல்கள், ஐட்டம் பாடல்கள் என்று வகைப்படுத்தப்படுகிற, துள்ளலிசை பாடல்கள் என பலவற்றிலும் தத்துவங்களை வாரி வழங்கி உள்ளார்கள் தமிழ் சினிமா பாடலாசியர்கள். இதில் இம்முறை இயக்குநர் பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற கும்கி படத்தில் இடம் பெற்ற கிளைமாக்ஸ் பாடலான சொய் சொய் பாடலில் பாடலாசிரியர் என்னென்ன வாழ்க்கைத் தத்துவங்களை சொல்லி உள்ளார் என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

பாடலின் பல்லவியில் இருந்தே வாழ்க்கைக்கு நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகளைக் கொடுத்துள்ளார் பாடலாசிரியர் யுகபாரதி. அதாவது, " கையலவு நெஞ்சத்திலா
கடலலவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல
அது தான் காதல் மச்சான்
நாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும்
நினைப்பே போதும் மச்சான்" இந்த வரிகள் தான் அது. இதில், நமது இதயம் சிறியதாக இருந்தாலும் அதில் கடலளவு ஆசை உள்ளது. அளவில்லா காதல் உள்ளது, இந்த ஏற்றத்தாழ்வு நிறைந்த, வேறுபாடுகள் நிறைந்த உலகத்தில் அந்தக் காதல் கைகூட வில்லை என்றாலும் காதலின் நினைவுகளிலேயே வாழலாம் என்று கூறுகிறார்.

Thathuvamasi Series Lyricist Yugabharathi Wrote Wonderful Life Lesson Lyrics On Soi Soi Song Original

அதேபோல் முதல் சரணத்தில், " வானளவு விட்டதில்ல
வரப்பளவு தூரம் மச்சான்
அளவு தேவையில்ல
அதுதான் பாசம் மச்சான்
நாம வேண்டி கொண்டாலும்
வேண்டா விட்டாலும்
சாமி கேட்கும் மச்சான்" இந்த வரிகள் மிகவும் அழுத்தம் நிறைந்த வரிகள். அதாவது, பாசத்திற்கு என்றைக்கும் அளவு இருக்காது. அளவில்லாத பாசத்தை எப்போதும் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று கூறுகிறார். அதேபோல் கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்றால், அந்தக் கடவுள் நாம் வேண்டிக் கொண்டாலும் வேண்டா விட்டாலும் நமக்கான நியாங்களை கொண்டு வந்து சேர்க்க வேண்டும். அப்படிச் செய்தால் தான் கடவுள், தன்னை வேண்டாதவரை கடவுள் கண்டுகொள்ளவில்லை என்றால், அவர் கடவுள் இல்லை, வியாபாரி என்று சொல்லாமல் சொல்கிறார் என்று புரிந்து கொள்ளலாம்.

Thathuvamasi Series Lyricist Yugabharathi Wrote Wonderful Life Lesson Lyrics On Soi Soi Song Original
இரண்டாவது சரணத்தில் இடம் பெற்றுள்ள வரிகளான, " ஏடளவு எண்ணத்துல
எழுத்தளவு சிக்கல் மச்சான்
அளவு கோலே இல்ல
அது தான் ஊரு மச்சான்
நாம நாலு பேருக்கு நன்மை செஞ்சாலே
அதுவே போதும் மச்சான்
நாடளவு கஷ்டத்துல
நகத்தளவு இஷ்டம் மச்சான்
அளவு கோலே இல்ல
அது தான் நேசம் மச்சான்
நாம மாண்டு போனாலும்
தூக்கி தீ வைக்க
உறவு வேணும் மச்சான்" என்ற வரிகள் மிகவும் தத்துவச் செறிவு நிறைந்த வரிகள் என்று கூறலாம். ஒரு நமது எண்ணத்தில் சிறிய புள்ளி அளவுக்கு இருக்கும் சிக்கல் தான் மனிதனை முடக்குகிறது. அதேபோல் நாலு பேருக்கு நன்மை செய்யும் வாழ்க்கையை வாழ்ந்தாலே போதும் என்ற மனநிலையில் மனிதர்கள் வாழ வேண்டும். அதேபோல் நாம் இறந்த பின்னர், நமது உடலுக்கு நல்லடக்கம் செய்யக் கூடிய அளவுக்கு உறவுகளை சேமித்து வைத்திருக்கும் வாழ்க்கையை, அன்பு நிறைந்த வாழ்க்கையை வாழவேண்டும் என்றும் கூறுகிறார். பாடலாசிரியர் யுக பாரதி தனது பாடல்களில் எப்போது தத்துவங்களைச் சொல்லிக் கொண்டே இருப்பார், அந்த வகையில் இந்த பாடலிலும் தத்துவங்களை வாழ்க்கைக்கு நம்பிக்கை தரக்கூடிய சொற்களைக் கொண்டு உருவாக்கி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X