விடாமல் வற்புறுத்திய மனைவி..கவுண்டமணி அடித்த கவுண்ட்டர் தெரியுமா?..மனுஷனுக்கு உடம்பு முழுக்க லொள்ளு

சென்னை: காமெடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த கவுண்டமணி இப்போது படங்களில் எதுவும் நடிப்பதில்லை. அதேசமயம் அவரது காமெடியை இந்தத் தலைமுறையினராலும் தவிர்க்க முடியவில்லை என்பதுதான் உண்மை. அவரது ஆன் ஸ்க்ரீன் கவுண்ட்டர்கள் எவ்வளவு ரசிக்கப்படுமோ அதே அளவுக்கு ஆஃப் ஸ்க்ரீன் கவுண்ட்டர்களும் புகழ்பெற்றவை. இந்தச் சூழலில் அவர் தனது மனைவியிடம் அடித்த கவுண்ட்டரை இப்போது பார்க்கலாம்.

கவுண்ட்டர் மன்னன் என்று புகழப்படுபவர் கவுண்டமணி. அவரிடம் யார் என்ன பேசினாலும் உடனடியாக ஒரு டைமிங் கவுண்ட்டர் வந்து விழுந்துவிடும். அது மற்றவரை புண்படுத்தும்படி இருந்தாலும் அது ரசிக்கும்படி இருக்கும் என்பதுதான் அவரது காமெடி இன்றுவரை உயிர்ப்போடு இருக்க காரணம். பாக்யராஜால் பாரதிராஜாவிடம் அறிமுகப்படுத்தப்பட்டு சினிமாவுக்குள் வந்தவர் அவர்.

தொடர்ந்து பிஸி: இப்போது எத்தனையோ காமெடி நடிகர்கள் கோலோச்சியிருக்கலாம். ஆனால் கவுண்டமணி அளவுக்கு பிஸியாக இருந்ததில்லை. அவர் பீக்கில் இருந்தபோது ஒரு நாளைக்கு பல படங்களில் நடித்தவர். எத்தனை படங்களில் நடித்தாலும் ஒரு படத்தில் இருப்பது போன்று இன்னொரு படத்தில் அவரது நகைச்சுவைகள் இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவிலிருந்து ஒதுங்கிய கவுண்டமணி: 90கள்வரை ரொம்பவே பிஸியாக இருந்த அவருக்கு காலப்போக்கில் வாய்ப்புகள் டல்லடிக்க ஆரம்பித்தன. இனி தன்னால் சர்வைவ் ஆக முடியாது என்பதை உணர்ந்துகொண்ட அவர் டீசன்ட்டாக ஒதுங்கிவிட்டார். அவர் ஒதுங்கினாலும் அவர் ஸ்டைல் ஆஃப் காமெடியைத்தான் பல நடிகர்கள் பின்பற்றி நடிக்க செய்து வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

When Goundamani Gave a Hilarious Counter to His Wife An Unseen Off-Screen Moment
Photo Credit:

குடும்பத்துக்கு கட்டுப்பாடு: அவர் தனது குடும்பத்தை ரொம்பவே பெர்சனலாக வைத்திருப்பவர். சாந்தி என்பவரை திருமணம் செய்த அவருக்கு இரண்டு மகள்கள். அதில் ஒரு மகள் புற்றுநோயாளிகளுக்கு சேவை செய்துவருகிறார் என்பது பலரும் அறியாதது. அதேபோல் மகள்களுக்கு சினிமா துறையே வேண்டாம் என்று முடிவெடுத்து; கேமராவிருந்து தூரம் வைத்திருப்பவர் கவுண்ட்டர் மகான். மேலும் தனது மனைவி மீது அளவு கடந்த காதலை வைத்திருந்தவர். தான் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாயையும் மனைவியிடம் கொடுத்து குடும்பத்தை நிர்வகிக்க செய்தார். சமீபத்தில்தான் சாந்தி உடல்நல குறைவால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனைவியிடம் அடித்த கவுண்ட்டர்: சாந்தியின் மறைவு கவுண்டமணிக்கு ஆறாத வடுவை கொடுத்திருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். இந்நிலையில் எல்லோரையும் சகட்டுமேனிக்கு கலாய்க்கும் அவர் தனது மனைவி சாந்தியையும் விட்டு வைத்ததில்லை. ஒருமுறை சத்யராஜுடன் படத்தில் நடித்துக்கொண்டிருந்தாராம். மதிய சாப்பாட்டு நேரம் வந்தபோது இன்று கம்பெனி சாப்பாடு சாப்பிடப்போகிறேன் என்று சத்யராஜ் சொல்லியிருக்கிறார்.

Take a Poll

சிங்கத்தை அடித்தா குழம்பு வைத்த: உடனே இவரும் வீட்டுக்கு ஃபோன் செய்து, இன்று சாப்பாடு கொடுத்துவிட வேண்டாம். கம்பெனி சாப்பாடு சாப்பிடப்போகிறேன் என்று கூறியிருக்கிறார். அதற்கு சாந்தியோ, 'இல்லைங்க சமைச்சதெல்லாம் வேஸ்ட்டா போயிடும்' என சொல்ல; இல்லை இன்று வேண்டாம் என்று தெரிவித்திருக்கிறார். கவுண்டமணி பலமுறை சாப்பாடு வேண்டாம் என்று சொன்னாராம். சாந்தி விடுவதாக இல்லை. உடனே கவுண்டமணியோ, 'ஆமா என்னம்மோ சிங்கத்தை அடிச்சு குழம்பு வைச்ச மாதிரியும், புலியை பிடிச்சு பிரியாணி வைச்ச மாதிரியும் பேசுற' என சொல்லி ஃபோனை வைத்துவிட்டாராம். ஃபோனை வைத்த கையோடு, 'பாரு சத்யராஜ் கொடுக்கப்போறது கொஞ்சம் சோறு, கீரை, பருப்பு. அதை வேண்டாம் என்று சொல்கிறேன். என்னமோ சிங்கத்தை அடிச்சு குழம்பு வைச்ச மாதிரி பேசுறா' என கவுண்ட்டரை அள்ளிவிட்டாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X