»   »  அந்த படத்தை திட்டி திட்டி பப்ளிசிட்டி கொடுக்காதீங்க மேடம்: நடிகைக்கு ரசிகர்கள் கோரிக்கை

அந்த படத்தை திட்டி திட்டி பப்ளிசிட்டி கொடுக்காதீங்க மேடம்: நடிகைக்கு ரசிகர்கள் கோரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அந்த படத்தை திட்டி திட்டி பப்ளிசிட்டி கொடுக்க வேண்டாம் என்று நடிகை ஒருவருக்கு ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான மூன்று எழுத்து படம் பலருக்கும் பிடித்துவிட்டது. அந்த படத்தில் பிரபல டிவி நிகழ்ச்சி ஒன்றை கலாய்த்துள்ளனர். டிஆர்பிக்காக அனைத்தும் செய்கிறார்கள் என்பது போன்று கூறியுள்ளனர்.

இதையடுத்து அந்த டிவி நிகழ்ச்சியை நடத்தி வரும் நடிகை கோபம் அடைந்துள்ளார். படத்தை ட்விட்டரில் கிழி கிழி என்று கிழித்து தொங்கவிட்டுவிட்டார்.

மேலும் இயக்குனர், அவரது குடும்பத்தாரையும் விமர்சித்துள்ளார். தான் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவராக இருந்து கொண்டு மீடியாவில் இருப்பது கடினம் என்றும் கூறியுள்ளார்.

இவர் திட்டுவதை பார்க்க பார்க்க அந்த படத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது என்பதை பார்க்கும் ஆவல் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது. தயவு செய்து திட்டி திட்டி நெகட்டிவ் பப்ளிசிட்டி கொடுக்காதீங்க மேடம். நீங்கள் விமர்சிப்பது மக்கள் மத்தியில் படத்தின் மீதான ஆவலை தூண்டிக் கொண்டிருக்கிறது என்று அவருக்கு அவரது ரசிகர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

English summary
Fans have requested a senior actress to stop criticising a movie that hit the screens few days back. Director has blasted the actress's TV show in his movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X