»   »  ஸ்னேகாவுக்கு விரைவில் டும் டும் டும்?

ஸ்னேகாவுக்கு விரைவில் டும் டும் டும்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோடம்பாக்கத்தில் கடந்த இரு நாட்களாய் ஒரே பரபரப்பு. ஸ்னேகாவுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்று.

துபாயில் பிறந்து வளர்ந்தவரான ஸ்னேகாவுக்கு அங்கேயே மாப்பிள்ளை பார்க்கும் படலத்தில் அவரது வீட்டினர்ரகசியமாய் இறங்கியுள்ளதாக சொல்கிறார்கள். ஆனால், இதை அவரது தந்தை மறுக்கிறார்.

குமுதம் பத்திரிக்கை நடத்திய அட்டைப் பட போட்டியில் பங்கேற்று, விரும்புகிறேன் படத்தின் மூலம்சினிமாவுக்கு வந்தவர் ஸ்னேகா. இவரது தந்தை துபாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.அண்ணன், அக்கா ஆகியோரும் அங்கு தான் வசிக்கின்றனர்.

இவரது அண்ணனைத் தான் டான்ஸ் மாஸ்டர் கலா திருமணம் முடித்திருந்தார். சமீபத்தில் இருவரும் விவாகரத்துவாங்கிவிட்டனர்.

இந் நிலையில் சமீப காலமாக புதுப் படங்களை ஒப்புக் கொள்வதை ஸ்னேகா தவிர்த்து வந்தார். வசூல்ராஜாஎம்.பி.பி.எஸ்சுக்குப் பிறகு எந்தப் படத்துக்கும் அவர் அட்வான்ஸ் வாங்கவில்லை.

அதே போல காசு வாங்கிய அனைத்து டிவி விளம்பரப் படங்களையும் நடித்துக் கொடுத்துவிட்டார்.

இது தவிர ஏற்கனவே புக் ஆன அது (இதில் ஸ்னேகாவுக்கு பேய் வேஷம்) போஸ் (இதில் ஸ்னேகாவுடன்பலமாகவே கிசுகிசுக்கப்பட்ட ஸ்ரீகாந்த் தான் ஜோடி. இந்த கிசுகிசுவால் இருவருமே மார்க்கெட் இழந்து தவித்ததுதனிக் கதை), பிரஷாந்துடன் ஆயுதம் மற்றும் ஒரு தெலுங்குப் படம் ஆகியவற்றில் தான் நடித்துக்கொண்டிருந்தார்.

வசூல்ராஜாவுக்காக சுவிஸ் போய்விட்டு வந்த கையோடு போஸ் படத்துக்காக ஸ்ரீகாந்துடன் கிரீஸ், கிர்கிஸ்தான்,தெலுங்கு படத்துக்காக பின்லாந்த், ஆயுதம் படத்துக்காக ஆஸ்திரேலியா என்று தொடர்ச்சியாக 25 நாட்கள்சுற்றிவிட்டு சென்னைக்கு வந்தார் ஸ்னேகா.

வந்தவர் 4 படங்களின் டைரக்டர், தயாரிப்பாளர்கள், ஹீரோக்களிடம் சொல்லிவிட்டு நீண்ட ஓய்வில் துபாய்க்குப்பறந்திருக்கிறார். அவர் சூட்டிங்கில் இருந்து நீண்ட பிரேக் கேட்டபோது, கேரளாவில் அழகு சிகிச்சைக்காகசெல்வதாக கோடம்பாக்கம் கிசுகிசுத்தது.

ஆனால், கேரளா பக்கம் போகவில்லை ஸ்னேகா. நேராக தனது தாயார் பத்மாவதியுடன் துபாய்க்குப்பறந்திருக்கிறார். கையில் பணப் பெட்டிகளுடன் ஏராளமான தயாரிப்பாளர்கள் ஸ்னேகாவுக்காக காத்திருக்க,யாரிடமும் கை நீட்டாமல் தி.நகர் பங்களாவைப் பூட்டிவிட்டு துபாய்க்குப் போய்விட்ட இவரை ஆச்சரியமாய்பார்க்கிறார்கள்.


கோடம்பாக்கம் குருவிகளிடம்விசாரித்தபோது, ஸ்னேகாவுக்கு மாப்பிள்ளை பார்ப்பதாகவும் விரைவில் டும் டும்கொட்டப்படும் என்றும் காதைக் கடித்தன.

ஆனால், இதை ஸ்னேகாவின் தந்தை ராஜாராம் அடியோடு மறுத்தார். அவர் கூறுகையில்,

ஓய்வுக்காகத் தான் ஸ்னேகா துபாய் வந்திருக்கிறார். துபாய் அவள் வளர்ந்த நாடு, அவளுக்கு மிகவும் பிடித்தநாடு. அவள் திரும்பி வந்தவுடன் 4 தெலுங்குப் படங்கள், 2 தமிழ்ப் படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுக்கஇருக்கிறாள். ஸ்னேகா இப்போது தான் வேகமாக வளர்ந்து வருகிறாள். இதைப் பிடிக்காத சிலர் தான் திருமணம்,கிசுகிசு என எதையாவது கிளப்பி விடுகிறார்கள்.

என் மகளுக்கு எப்போது திருமணம் செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும் என்றார்.

சில ஓல்டு பார்ட்டிகளுடன் ஜோடி சேர மறுத்த ஸ்னேகா, கமல்ஹாசனுடன் மட்டும் சேர்ந்து நடித்ததார். இதனால்எரிச்சலில் உள்ள சில பார்ட்டிகள் தான் ஸ்னேகா ஊருக்கு போன சமயம் பார்த்து கோடம்பாக்கத்தில் வத்தியைக்கொளுத்திப் போட்டதாகவும் சொல்கிறார்கள்.

ஒன்னுமே புரியல..

இப்போதைக்கு கல்யாணம் இல்லை: ஸ்னேகா

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil