»   »  புரமோஷனே பண்ணாத கடவுள் நிறுவனம்... கடுப்பில் சாண்டல் காமெடி!

புரமோஷனே பண்ணாத கடவுள் நிறுவனம்... கடுப்பில் சாண்டல் காமெடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நாளை மறுநாள் ரிலீஸாகவிருக்கிறது சாண்டல் காமெடி ஹீரோவாக நடித்த படம்.

படம் பூஜை போட்ட சமயத்திலேயே நாங்கள் ரிலீஸ் செய்துகொள்கிறோம் என படத்தை கைப்பற்றியது கடவுள் நிறுவனம். நிறுவனம் நமக்கு நட்பில் இருப்பதுதானே என்று நல்ல விலைக்கு கொடுத்தும் விட்டார் ஹீரோ.

Top comedian upset over producer

படம் தயாரான பிறகு புரமோஷனில் ஆர்வமே காட்டவில்லை நிறுவனம். முக்கியமாக ஆடியோ நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்த நேரத்தில் நாயகனின் தந்தை மறைந்ததால் அது தள்ளிப்போனது. சரி, ரிலீஸ் சமயத்தில் பெரிய அளவில் புரமோட் செய்வார்கள் என நினைத்தார் ஹீரோ.

கபாலி படம் தள்ளிப்போகவே திடீரென சென்ற சனிக்கிழமை இந்த வாரமே, அதுவும் வியாழக்கிழமையே படம் ரிலீஸ் என அறிவித்தார்கள். இதனால் ஷாக்காகிப் போனாராம் ஹீரோ.

ஒரு பிரஸ்மீட் கூட வைக்கப்படாமல் ரிலீஸ் ஆகவிருக்கிறது படம். டிவி ஹீரோவை போட்டியாளராக நினைக்கும் ஹீரோ அவர் படத்துல பத்து பெர்செண்ட் கூட கூட்டம் வராதே... என முடிவை முன்கூட்டியே உணர்ந்து நொந்து போயிருக்கிறார்.

Read more about: gossip கிசுகிசு
English summary
Top comedian is disappointing with his producer for not giving publicity for his upcoming movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil