»   »  தமிழ் + ஆங்கிலத்தில் கலந்து கட்டி டிவிட்டரைக் கலக்கும் கமல்...!

தமிழ் + ஆங்கிலத்தில் கலந்து கட்டி டிவிட்டரைக் கலக்கும் கமல்...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவுகளை வெளியிடத் தொடங்கியுள்ளார் நடிகர் கமல்.

தங்களது கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் களமாக உள்ள சமூகவலைதளங்கள் மூலம் பிரபலங்கள் தங்களது ரசிகர்களைத் தொடர்பு கொள்வது அதிகரித்து வருகிறது. தனது அபிமான நடிகரையோ, நடிகையையோ பார்க்க வேண்டும் என்றால் சென்னைக்கு புறப்பட்டு வந்து, அவர்களது வீட்டு வாசலில் காத்து நின்று காரை மட்டுமே பார்த்துச் சென்ற தலைமுறை இப்போது இல்லை.

தனது செல்போனில் வீட்டில் இருந்தபடியே ரசிகர்களால் எளிதாக சமூகவலைதளங்கள் மூலமாக தனது ஆஸ்தான நடிகர்களைத் தொடர்பு கொள்ள முடிகிறது. தனது கருத்துக்களை, கோரிக்கைகளை எளிதாக அவர்களிடம் கூற முடிகிறது.

டிவிட்டரில் கமல்...

டிவிட்டரில் கமல்...

அந்தவகையில், சமீபத்தில் நடிகர் கமலும் சமூகவலைதளங்களில் பிரபலமான டிவிட்டர் பக்கத்தில் இணைந்தார். கமலின் வருகைக்கு திரையுலக பிரபலங்கள் மத்தியில் மட்டுமின்றி ரசிகர்களிடத்திலும் அமோக ஆதரவு.

ரசிகர்கள்...

ரசிகர்கள்...

கமல் டிவிட்டரில் இணைந்த சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கானோர் அவரைப் பின் தொடர ஆரம்பித்துள்ளனர். கமலும் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

ஆங்கிலத்தில் மட்டும்...

ஆங்கிலத்தில் மட்டும்...

ஆரம்பத்தில் கமலின் பதிவுகள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே இருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழில் பதிவிடுமாறு ரசிகர்கள் கேட்டுக் கொண்டனர்.

என் தோழி...

ரசிகர்களின் அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட கமல், முதல் தமிழ் பதிவாக, ‘என் ட்வீட்டில் தமிழில்லையென மனங்கோணும்அன்பர்கட்கு... இத்தோழி என் தோள் மிஞ்சப் பல காரணங்கள் அக்காலணியின் உயரமும் சேரும்?' என தெரிவித்துள்ளார்.

புரியலையே...

இது புரியவில்லை என அவரது ரசிகர்கள் பலர் தெரிவித்துள்ளனர். சிலர் மீண்டும் ஆங்கிலத்திலேயே பதிவிடுமாறு வேண்டுகோளும் விடுத்துள்ளனர்.

ஸ்ருதியின் பர்த்டே...

அதாவது சில தினங்களுக்கு முன்னர் கமலின் மகளும், நடிகையுமான ஸ்ருதியின் பிறந்ததினம் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் ஸ்ருதியை முத்தமிடுவது போன்ற புகைப்படத்தை கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

மகளின் உயரம்...

மகளின் உயரம்...

அதில், ‘முன்பு என் மகளை முத்தமிட நான் குனிந்து கொண்டிருந்தேன். தற்போது என் மகள் என்னை விட வளர்ந்து விட்டார். என்னிடம் முத்தம் பெற அவர் சற்று குனிந்து கன்னத்தைக் காட்டுகிறார். ஒருவேளை என் மகளின் உயரத்திற்குக் காரணம் அவரது ஹைஹீல்ஸ் செப்பலாகவும் இருக்கலாம்' என குறும்பாக ஆங்கிலத்தில் பதிவு செய்திருந்தார்.

அதே தான்...

அதே தான்...

தற்போது அந்தப் பதிவினைத் தான் கமல் தமிழில் வெளியிட்டுள்ளார். இதில், தன் மகளை அவர் தோழி எனக் குறிப்பிட்டுள்ளார்.

நண்பேன்டா...

நண்பேன்டா...

முன்பொருமுறை டிவிட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த ஸ்ருதி, தனது தந்தை தன்னைச் செல்லமாக கூப்பிடும் வார்த்தைக் குறித்து சீக்ரெட் எனப் பதிலளித்திருந்தார். ஒருவேளை கமல், ஸ்ருதியை செல்லமாக பிரண்ட் என்று கூப்பிடுவாரோ?

English summary
Recently, Kamal Haasan took to Twitter to share a picture of him kissing his daughter Shruti Haasan. In the tweet, he sarcastically said that back in the days he used to bend down to his kiss her, but now the tables have turned. He also wittingly put that it might be because of Shruti Hassan's high heels.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil