»   »  திருமணத்திற்கு பெண் தேடும் 'மாப்பிள்ளை ஆர்யா' - விளையாட்டா வியாபாரமா? #Exclusive

திருமணத்திற்கு பெண் தேடும் 'மாப்பிள்ளை ஆர்யா' - விளையாட்டா வியாபாரமா? #Exclusive

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகர் ஆர்யா நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் என்னைத் திருமணம் செய்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் அழைக்கவும் என ஒரு தொலைபேசி எண்ணைத் தெரிவித்து ஒரு வீடியோ அறிவிப்பை வெளியிட்டார்.

ஆர்யாவின் இந்த அறிவிப்பு விளையாட்டாக இருக்கும் என பலரும் நினைத்த வேளையில், 'மாப்பிள்ளை ஆர்யா.காம்' என்றொரு இணையதளம் தொடங்கப்பட்டது.

அந்த இனையதளத்தில் ஆர்யாவை திருமணம் செய்துகொள்ள விரும்பும் பெண்கள் பதிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டது. இது விளையாட்டா இல்லை விபரீதமா எனப் புரியாமல் மக்கள் குழம்பிப்போய் உள்ளனர்.

கனவு நாயகன் ஆர்யா

ஆர்யா, தனக்கு திருமணம் செய்துகொள்ள பெண் கிடைக்கவில்லை எனக் கூறி வருகிறார். ஆனால், பல வருடங்களாகவே ஆர்யா ஒரு காதல் மன்னன் என வெளிப்படையாகவே திரையுலகில் பேச்சுகள் வந்துகொண்டிருக்கின்றன. நடிகைகளுக்கு நெருக்கமானவரான ஆர்யா இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டிருப்பது பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.

மாப்பிள்ளை ஆர்யா

மாப்பிள்ளை ஆர்யா

ஆர்யா தெரிவித்த மொபைல் நம்பரில் கூறப்பட்ட படி MappillaiArya.com எனும் வெப்சைட் துவக்கப்பட்டுள்ளது. ஆர்யாவை திருமணம் செய்ய இந்தப் பக்கத்திற்குள் நுழைய வேண்டுமாம்.
இந்த வெப்சைட் மும்பையைச் சேர்ந்த வயோகாம் எனும் நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

பதிவு செய்ய வேண்டும்

பதிவு செய்ய வேண்டும்

இந்த இணையப் பக்கத்தில், ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள விரும்பும் பெண்கள் அவர்களைப் பற்றிய பயோடேட்டா முதல் பாஸ்போர்ட் விபரங்கள் வரை, ஆர்யாவை திருமணம் செய்ய விரும்புவதற்கான காரணம், மற்றும் திருமணம் செய்ய விரும்புபவர்கள் பேசிய ஒரு நிமிட வீடியோ க்ளிப் ஆகியவற்றைப் பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வயோகாம் நிறுவனம்

வயோகாம் நிறுவனம்

'மாப்பிள்ளைஆர்யா.காம்' தளத்தை பதிவு செய்துள்ள வயோகாம் நிறுவனம் பாலிவுட் படங்களைத் தயாரித்து வருகிறது. இந்தியாவில் உள்ள பிரபலமான ஒரு படத் தயாரிப்பு நிறுவனம் இப்படி நடிகர்களுக்காக 'மேட்ரிமோனி' இணையதளங்களை எப்படி உருவாக்கிக் கொடுக்கும் என்பது பலருக்கும் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.

கலர்ஸ் டி.வி நிகழ்ச்சி

கலர்ஸ் டி.வி நிகழ்ச்சி

வயோகாம் தயாரிப்பு நிறுவனம் கலர்ஸ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளையும் தயாரித்து வருகிறது. இதைவைத்துப் பார்த்தால் தமிழில் தொடங்கப்படவிருக்கும் கலர்ஸ் டி.வி-யின் புதிய நிகழ்ச்சியாக ஆர்யா நடத்தும் இந்த சுயம்வரம் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

நிகழ்ச்சிப் பின்னணி

நிகழ்ச்சிப் பின்னணி

இதுபோன்ற வரன் தேடும் நிகழ்ச்சி அமெரிக்காவில் 2003-ம் ஆண்டிலேயே ஒளிபரப்பாகி இருக்கிறது. இந்தி தொலைக்காட்சி உலகில் 2009-ம் ஆண்டு 'சுயம்வர்' எனும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு நடிகைக்கு மாப்பிள்ளை தேடப்பட்டது. இதனையடுத்து 'பேச்சிலரேட் இந்தியா' என்றொரு சுயம்வர நிகழ்ச்சி 'மேரே கல்யாண் கி மல்லிகா' எனும் கேப்ஷனுடன் கிளம்பி மல்லிகா ஷெராவத்துக்கு மாப்பிள்ளை பார்த்தது.

கான்ட்ராக்ட் நிகழ்ச்சி

கான்ட்ராக்ட் நிகழ்ச்சி

இந்தியில் மல்லிகா ஷெராவத் கலந்துகொண்ட சுயம்வர நிகழ்ச்சி வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமே எனவும் ஒரு வருட கான்ட்ராக்ட் எனவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களால் விளக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட விஜய் சிங் என்பவரோடு மல்லிகா ஷெராவத் தொடர்ந்து வாழவில்லை. ஆர்யா கலந்துகொள்ளும் நிகழ்ச்சியும் இப்படியானதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ஜிம்மில் பேசும் வீடியோ

ஜிம்மில் பேசும் வீடியோ

சில நாட்களுக்கு முன்பு ஆர்யா ஜிம்மில் பேசிய வீடியோ ஒன்று வெளியானது. அது ஆர்யாவின் நண்பர்களால் தெரியாமல் பதிவு செய்யப்பட்டு வெளியானது எனக் கூறப்பட்டது. இப்போது நடைபெறுபவற்றைப் பார்த்தால் அந்த வீடியோவும் இந்த நிகழ்ச்சிகாக திட்டமிட்டு வெளியிடப்பட்டிருக்குமோ எனும் சந்தேகம் வலுக்கிறது.

English summary
Actor Arya uploaded a video on his twitter page yesterday. In that video, help to find a bride for arya. When many people thought Arya's announcement would be a prank, and then a website named 'Mappillai Arya.com' was launched. May be this is promotion for Arya's program in colors TV is to be launched in Tamil.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil