twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாலியல் தொல்லைக்கு எதிர்ப்பு தெரிவித்து படத்தில் இருந்து வெளியேறிய ஐஸ்வர்யா ராய்

    By Siva
    |

    மும்பை: பாலியல் தொல்லைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐஸ்வர்யா ராய் ஒரு படத்தில் இருந்து வெளியேறியது தெரிய வந்துள்ளது.

    தனுஸ்ரீ தத்தாவின் துணிச்சலால் இன்று பல பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து தைரியமாக வெளியே சொல்கிறார்கள். மீ டூ எனப்படும் இந்த இயக்கத்திற்கு பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் பச்சனும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

    [ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணியை பேசும் 'மெரினா புரட்சி' படத்திற்கு தடை!]

    ஃபுளோரா சைனி

    ஃபுளோரா சைனி

    ஃபுளோரா சைனி பாலிவுட் தயாரிப்பாளர் கவுரங் தோஷி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன் தன்னை தாக்கி தாடையை உடைத்ததாக அண்மையில் வெளியான ஸ்திரீ படத்தில் நடித்த ஃபுளோரா சைனி தெரிவித்தார். தனக்கு ஐஸ்வர்யா ராய் பச்சனை தவிர வேறு யாருமே ஆதரவு அளிக்கவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    ஐஸ்வர்யா ராய்

    ஐஸ்வர்யா ராய்

    கவுரங் தோஷி எனக்கு செய்த கொடுமையை பார்த்து ஐஸ்வர்யா ராய் கோபம் அடைந்தார். இதையடுத்து கவுரங் தயாரிக்கவிருந்த படத்தில் இருந்து ஐஸ்வர்யா வெளியேறினார். பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து தாக்கும் நபரின் படத்தில் நடிக்க முடியாது என்று அவர் தெரிவித்தார் என ஃபுளோரா கூறினார்.

    ரசிகர்கள்

    ரசிகர்கள்

    பல ஆண்டுகளுக்கு முன்பே பாலியல் தொல்லைக்கு எதிராக படத்தை விட்டு வெளியேறிய ஐஸ்வர்யா ராயை அவரது ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். தற்போது பாலியல் புகார் தெரிவித்து வரும் அனைவருக்கும் ஆண்டவன் அருள்புரிவானாக என்று ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார். ஐஸ்வர்யா ராய் ஆதரவு அளித்திருப்பது பல நடிகைகளுக்கு புது தெம்பாக உள்ளது.

    பேசுவேன்

    பேசுவேன்

    இந்த பிரச்சனை குறித்து நான் ஏற்கனவே பேசியிருக்கிறேன், பேசுகிறேன் இனியும் தொடர்ந்து பேசுவேன். சமூக வலைதளங்கள் மூலம் பெண்களின் குரல் பலருக்கும் கேட்கிறது. மீ டூ இயக்கம் தான் தற்போது தேவை. இது வலுப்பெறும் என்று நம்புகிறேன் என ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார். இயக்குனர் விகாஸ் பெஹல், நடிகர் ஆலோக் நாத் பற்றி பேச அவர் மறுத்துவிட்டார்.

    English summary
    Stree actress Flora Saini said that Aishwarya Rai walked out of a movie opposing sexual harassment.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X