»   »  மேனேஜர் மூலம் காதலை முறித்துக் கொண்டாரா விஷால்?: வரலட்சுமி விளக்கம்

மேனேஜர் மூலம் காதலை முறித்துக் கொண்டாரா விஷால்?: வரலட்சுமி விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மேனேஜர் மூலம் காதலை முறித்துக் கொண்டது விஷாலா இல்லையா என்பது குறித்து நடிகை வரலட்சுமி விளக்கம் அளித்துள்ளார்.

[Read This Too: டிரவுசரில் மகளுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட 'ஜில்லா' நடிகை: 'ஷாக் வீடியோ']

நடிகர் விஷாலும், நடிகை வரலட்சுமி சரத்குமாரும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. நடிகர் சங்க தேர்தலின்போது விஷாலும், சரத்குமாரும் மோதிக் கொண்டபோதும் வரலட்சுமி காதலில் உறுதியாக இருந்தார்.

காதலித்தாலும் அவர்களின் திருமணம் பற்றி பேசாமல் இருந்தனர்.

காதல் முறிவு

காதல் முறிவு

நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமாரை சஸ்பெண்ட் செய்தது தொடர்பாக விஷாலுக்கும், வரலட்சுமிக்கும் இடையே சண்டை ஏற்பட்டு அவர்களின் காதல் முறிந்துவிட்டதாக அண்மையில் செய்திகள் வெளியாகின.

வரலட்சுமி

விஷாலுடனான காதல் முறிந்துவிட்டது என்று கூறப்பட்ட நிலையில் வரலட்சுமி கடந்த 28ம் தேதி ட்விட்டரில் காதல் முறிவை பற்றி பேசியிருந்தார். அந்த ட்வீட்டில் அவர் கூறியிருந்ததாவது, காதல் முறிவுகள் தரம் தாழ்ந்துள்ளன..ஒரு ஆண் தனது மேனேஜர் மூலம் 7 ஆண்டு கால காதலை முறித்துள்ளார்...காதல் எங்கே? என்றார்.

கன்பர்ம்

கன்பர்ம்

வரலட்சுமியின் ட்வீட்டை பார்த்தவர்கள் விஷால் தான் தனது மேனேஜரை தூது விட்டு வரலட்சுமியுடனான காதலை முறித்துக் கொண்டார் என்றும், அந்த கடுப்பை வரலட்சுமி ட்விட்டரில் காட்டியதாகவும் பேசினார்கள்.

இல்லை

என் கடைசி ட்வீட்டை பார்த்து பல யூகங்கள்..நான் என் வேலையை மட்டுமே தற்போது காதலிக்கிறேன்..அதனால் அனைவரும் அமைதியாகுங்கள். இது என்னைப் பற்றி அல்ல.. அது ஒரு ட்வீட் என வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

வேலை

வேலை

நடிகர் சங்க கட்டிடம் கட்டியவுடன் தனக்கும், வரலட்சுமிக்கும் அங்கு திருமணம் நடக்கும் என்று விஷால் தெரிவித்தார். அப்போது கூட நான் என் வேலையை மட்டுமே காதலிக்கிறேன் என்றார் வரலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Varalakshmi Sarath Kumar cleared the air about her last tweet talking about a guy breaking-up with his girlfriend through manager.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil