ஹாலிவுட் பிரபல நடிகர் மேத்யூ மிண்ட்லர்… மர்மமான முறையில் மரணம்!
லாஸ் ஏஞ்சல்ஸ் : ''Our idiot Brother'' படத்தில் குழந்தை நட்சத்திரமான நடித்த மேத்யூ மிண்ட்லர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 19.
பென்சில்வேனியாவில் அவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு அவர் மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பிசாசு 2 ஷுட்டிங்கை முடித்த மிஷ்கின் ... அடுத்த திகில் அப்டேட் எப்போ மில்லெர்ஸ்வில் பல்கலைக்கழகத்தின் தலைவர் டேனியல் ஏ. வுபா மேத்யூவின் மரணத்தை உறுதிப்படுத்தினார்.

குழந்தை நட்சத்திரமாக
Our Idiot Brother, As the World Turns, Frequency போன்ற படங்களில் மேத்யூ மிண்டலர் நடித்துள்ளார். மில்லெர்ஸ்வில் பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவரான மேத்யூ. பென்சில்வேனியாவின் ஹெல்லர்டவுனைச் சேர்ந்தவர். இவருக்கு 19 வயது. இவர் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் பல இடங்களில் தேடிவந்தனர்.

மர்மமான முறையில் இறந்தார்
இந்நிலையில் மேத்யூ மிண்ட்லர் ஆகஸ்ட் 28 சனிக்கிழமை காலை மத்தேயு வளாகத்திற்கு அருகிலுள்ள மானோர் டவுன்ஷிப்பில் மர்மமான முறையில் இறந்து கிடத்துள்ளார். உடலை கைப்பற்றிய போலீசார் மரணத்திற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

காணாமல் போனார்
செவ்வாய் கிழமை கல்லூரிக்கு சென்ற மேத்யூத் மாலை விடுதிக்கு சென்றுள்ளார். இரவு 8மணி அளவில் விடுதியிலிருந்து வெளியில் புறப்பட்ட மேத்யூ எங்கு போனார் என்ன ஆனார் என்ற எந்த தகவலும் இல்லை.மேலும் அவர் விடுதியிலிருந்து புறப்படும் போது மில்லெர்ஸ்வில் பல்கலைக்கழக ஹூடி அணிந்திருந்தார்.

உறுதிப்படுத்தினார்
இந்நிலையில், மில்லெர்ஸ்வில் பல்கலைக்கழகத்தின் தலைவர் டேனியல் ஏ. வுபா வெளியிட்ட அறிக்கையில் மேத்யூவின் மரணத்தை உறுதிப்படுத்தினார். மேத்யூவின் மரணம் குறித்து நான், உங்களுக்கு வருத்தத்துடனும், கனத்த இதயத்துடன் தெரிவிக்கிறேன் என்றார். இது மிகவும் கடினமான நேரம் என்று வுபா கூறினார்.


Click it and Unblock the Notifications











