»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil

திருட்டு விசிடி முற்றிலும் ஒழிந்து விடவில்லை என்று விஜயகாந்த் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராகப் பொறுப்பேற்ற பின்பு எடுத்த பல நல்ல நடவடிக்கைகள் காரணமாக அவரது இமேஜ் திரையுலகினர்மத்தியில் பெருமளவு உயர்ந்தது.

பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருந்த நடிகர் சங்கக் கடனை அவர் தீர்த்தபோது நடிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் அவரைப்பாராட்டினர். ஆனால் இப்போதோ நிலைமை தலைகீழ்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக விஜயகாந்த் மீது அதிருப்தி குற்றச்சாட்டுகள் வந்தவண்ணம் உள்ளன. முதலில் சரத்குமார்,பின்பு பார்த்திபன் என முக்கிய நடிகர்கள், சங்கத்தின் பொறுப்புகளிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.

இதில் சரத்குமார் மட்டும் தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றார். இவர்களைப் போலவே திரையுலகில் வேறு சிலரும் விஜயகாந்த் மீதுஅதிருப்தியில் உள்ளனர்.

தற்போது மகாநடிகன் பட விவகாரம் தொடர்பாக விஜயகாந்திற்கும், சத்யராஜுக்கும் இடையே மோதல் உருவாகியுள்ள நிலையில்,விஜயகாந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

திருட்டு விசிடி குறித்து முதல்வர் ஜெயலலிதாவிடம் புகார் கொடுத்தோம். அவரது நடவடிக்கையால் திருட்டு விசிடி விற்பனை குறைந்தது.திருட்டு விசிடி கடைகள் மூடப்பட்டன.

ஆனால் இப்போதும் விற்பனை நடந்து கொண்டு தான் இருக்கிறது. போலீஸ் உதவியுடன் தி.நகர் ரங்கநாதன் தெரு, சத்யா பஜார், பர்மாபஜார், அண்ணா நகர் ஆகிய இடங்களில் விற்பனை நடக்கிறது. அரசு பேருந்துகளில் திருட்டு விசிடி பயன்படுத்தப்படுகிறது.

இது குறித்து ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். மீண்டும் அவரது கவனத்துக்கு இதைக் கொண்டு செல்வேன்.

வருகிற 29ம் தேதி நடைபெறுகிற நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், சங்க தேர்தல் பற்றிய விவரங்கள் வெளியிடப்படும். தலைவர்பதவிக்கு மீண்டும் போட்டியிடுவது பற்றி இன்னும் யோசிக்கவில்லை.

சினிமாவில் நடிகர்கள் ஒருவரையொருவர் தாக்கிப் பேசுவது தேவையற்றது. இது ஆரோக்கியமானது அல்ல. நடிகர் சங்கத் தலைவர் என்றமுறையில் அஜித்திடம் இது தொடர்பாக பேசினேன்.

இனி அப்படி காட்சிகள் வைப்பதில்லை என்றார். அதேபோல் விஜய்யும் கூறினார். நடிகர்களிடையே போட்டி இருக்கலாம். பொறாமைஇருக்கக்கூடாது.

நான் அரசியலுக்கு வருவது உறுதி. அரசியலுக்கு வர மாட்டேன் என்று எப்போதும் கூறவில்லை. அதற்கான ஆயத்தப்பணிகள் நடக்கிறது.கட்சி துவங்கப்படும்போது முறைப்படி தெரிவிப்பேன்.

நடிகர் சங்கத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. சரத்குமார் ராஜினாமா செய்தது என்னால்தான் என்று கூறினார்கள். ஆனால் அடுத்ததேர்தலிலும் விஜயகாந்த்தான் நிற்க வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.

பார்த்திபனும் என் மீது எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை. இந்தப் பதவி தனிப்பட்டவரின் சொத்து அல்ல. எனக்கும் நடிகர் சங்கப்பணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நிர்வாகம்தான் அதைக் கவனிக்கிறது. இது ஒன்றும் நேபாள மன்னர் சொத்து அல்ல என்றுகாட்டமாகக் கூறினார் விஜயகாந்த்.

டேக் இட் ஈஸி, கேப்டன்.

சத்யராஜ் Vs விஜயகாந்த்: மோதல் ஆரம்பம்

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil