ஜெயிலர் கதை
ஜெயிலர் - இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி & திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தமிழ் திரையுலக பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனமான ' சன் பிக்சர்ஸ் ' தயாரிப்பு நிறுவன சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ஜெயிலர் படத்திற்கு இசையமைத்துள்ளார். அதிரடி ஆக்ஷன் மற்றும் திரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் நிர்மல் ஆர் எடிட்டிங் செய்துள்ளார். இத்திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், ஷிவ ராஜ்குமார், மோகன்லால், யோகி பாபு, மிர்னா என பல முக்கிய பிரபலங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியுள்ளனர். ஜெயிலர் படத்தினை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தினை தானே தமிழகம் முழுவதும் விநியோகம் செய்துள்ளது. 2023 ஆகஸ்ட் 10ல் உலகமெங்கும் பல மொழிகளில் வெளியாகும் ஜெயிலர் திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் திரைவாழ்வில் 'ஜெயிலர்' திரைப்படம் இவர் நடிக்கும் 169வது ( தலைவர் 169 ) படமாகும். கிட்டத்தட்ட 200 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி பெற்றுள்ள நிலையில், ஆன்லைன் ஓடிடி உரிமையை சன் நெக்ஸ்ட் மற்றும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஜெயிலர் திரைப்படத்தின் படக்குழு & நட்சத்திர தகவல்கள் ஜெயிலர் திரைப்படத்தின் டீசர், டிரைலர் & பாடல் வீடியோக்கள் ஜெயிலர் திரைப்படத்தின் புகைப்படங்கள் ஜெயிலர் திரைப்படத்தின் கதை கதைக்கரு : ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி தனது குடும்பத்தோடு அமைதியாக வாழ்ந்து வருகிறார், இந்நிலையில் போலீஸ் அதிகாரியான தனது மகனை சிலர் கடத்தியுள்ளனர் என்று அறியும் நாயகன் ரஜினி, எலி போல தனது ஓய்வு காலத்தில் வாழும் நாயகன் மீண்டும் புலியாக மாறி தனது குடும்பத்தை காப்பாற்றுவதே இந்த படத்தின் கதை. கதை ஒரு ஜெயிலர் அதிகாரியாக பணியாற்றிய முத்துவேல் பாண்டியன் என்னும் ரஜினிகாந்த், தனது ஓய்வு காலத்தில் குடும்பத்தோடு சென்னையில் அமைதியாக வாழ்ந்து வருகிறார். இவரது மகனான வசந்த் ரவி ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி, இவர் அசிஸ்டன்ட் கமிஷ்னராக பணியாற்றி வருகிறார். ரம்யா கிருஷ்ணன் மனைவி, பேரனாக ரித்விக் என தனது குடும்பத்தோடும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார், முத்து வேல் பாண்டியன். சென்னையில் சிலை திருட்டு போன்ற பல சட்டவிரோதமான செயல்களை செய்து வரும் விநாயகன் என்பவரை ரஜினியின் மகன், வசந்த் ரவி தேடி வருகிறார். இந்நிலையில் வசந்த் ரவி தீடிரென காணாமல் போக, ரஜினியின் குடும்பம் நிலைகுலைகிறது. தனது மகனை நேர்மையாக வளர்த்தது தான் தன் மகன் இழப்பிற்கு காரணம் என ரஜினியை ரம்யா கிருஷ்ணன் திட்டி தீர்க்கிறார். ரஜினியின் மகனை கொன்ற விநாயகன், பின் ரஜினியின் பேரனின் மீது குறிவைக்கிறார். தனது குடும்பத்தின் பாதுகாப்பிற்காக மீண்டும் அடிதடியில் களம் இறங்குகிறார், ரஜினி. பின் தனது நண்பர்களான ஷிவ ராஜ்குமார் மற்றும் மோகன்லால் உதவியோடு விநாயகன் மற்றும் அவரின் மொத்த கூட்டத்தையும் முத்து வேல் பாண்டியன் எப்படி அழிக்கிறார் என்பதே ஜெயிலர் திரைப்படத்தின் முழு கதை. ஜெயிலர் திரைப்படத்தின் பிரத்யேக தகவல்கள் ஜெயிலர் படத்தின் அறிவுப்பு அதிகாரப்பூர்வமாக 2022 பிப் 10ல் சன் பிக்சர்ஸ்-ன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் மூலம் படக்குழு சார்பில் வெளியானது. ஜெயிலர் திரைப்படத்திற்கு இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் திரைக்கதை எழுதியுள்ளார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 2022 - ஜூலை மாதம் தொடங்கியுள்ளது. ஆரம்பத்தில் ஜெயிலர் திரைப்படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட பல பிரபலங்கள் மாற்றி அமைத்த படக்குழு பின் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மிர்னா, ஜாக்கி (ஹிந்தி நடிகர்), மோகன்லால், கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார், சுனில் என பல முன்னணி பிரபலங்களை கமிட் செய்து கலக்கியுள்ளது. படையப்பா படத்திற்கு பின் 24 வருடங்களுக்கு பின் ரஜினிகாந்த் & ரம்யா கிருஷ்ணன் மீண்டும் ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் இணைந்து நடித்துள்ளனர். ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் ரஜினியின் திரைப்படத்தில் முதன் முதலாக கூட்டணி அமைத்து நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தமிழ், மலையாளம் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர்களான மோகன்லால், ரஜினிகாந்த் மற்றும் ஷிவ ராஜ்குமார் என மூவர் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். ஜெயிலர் திரைப்படத்தினை விநியோகம் செய்துள்ள நிறுவனங்கள் கோகுலம் கோபாலன் - கேரளா ஏசியன் சினிமா - தெலுங்கானா & ஆந்திர பிரதேஷ் ஐங்கரன் இன்டர்நேஷனல் - ஓவர்சீஸ் எம் சி சி - இலங்கை ஜெய்யன்னா - கர்நாடக
Read More