X
காலா

காலா

Drama | 07 Jun 2018 | U/A | 166 Mins
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

காலா கதை

காலா இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேஷி நடித்த அதிரடி திரைப்படம். இத்திரைப்படம் கபாலியை தொடர்ந்து ரஜினி மற்றும் ரஞ்சித்தின் இரண்டாவது கூட்டணி படமாகும். இப்படத்தினை தனுஷின் ஒளண்டார் பிலிம்ஸ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்துள்ளார். கதை: மும்பையின் மையப்பகுதியான தாராவியில் வாழும் தமிழர்களை காக்கும் காவல் வீரன் காலா (ரஜினி). மனைவி செல்வி (ஈஸ்வரி ராவ்), நான்கு மகன்கள், பேரக்குழந்தைகள் என கூட்டுக் குடும்பமாக தாராவியில் வாழ்ந்து வருகிறார். மகாராஷ்டிராவின் முக்கிய அரசியல் கட்சியின் தலைவரான ஹரிதேவ் (நானா படேகர்) தாராவியை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில், குடிசைகளை அகற்றிவிட்டு நவீன வீடுகள் கட்டித்தரும் 'தூய்மை மும்பை' திட்டத்தை செயல்படுத்த நினைக்கிறார். இதனை செயல்படுத்த தனது கட்சி பிரமுகரான விஷ்ணு பாயை (சம்பத் ராஜ்) நியமிக்கிறார். ஆனால் அதனை செயல்படுத்த காலா தடையாக இருக்கிறார். தமது படை தளபதியாக இருக்கும் இரண்டாவது மகன் செல்வத்தைக் கொண்டு (திலிபன்) அடாவடியாக எதிரிகளை காலா அடக்குகிறார். மறுபுறம் அடிதடியை விரும்பாத இளைய மகன் லெனின்(மணிகன்டன்), அஞ்சலி பாட்டிலுடன் இணைந்து மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தியும், விழிப்புணர்வை ஏற்படுத்தியும், தாராவியை சொர்க்கமாக்கும் வேலையை செய்கிறார். இதற்கிடையே தன்னார்வ தொண்டரான ரஜினியின் முன்னாள் காதலி சரினா (ஹூமா குரேஷி), தான் பிறந்த இடமான தாராவிக்கு மீண்டும் வருகிறார். ரஜினியின் மகன் லெனினுடன் இணைந்து தாராவியின் முகத்தை மாற்றும் வேலையில் ஈடுபடுகிறார். காலாவும், சரினாவும் மலரும் நினைவுகளில் மூழ்க, மனைவி செல்வி மனக்குழப்பத்துடன் கோபம் கொள்கிறார். இந்நிலையில், காலாவை போட்டுத்தள்ள சம்பத் ராஜ் போடும் ஸ்கெட்சில், அப்பாவி இளைஞன் ஒருவன் கொல்லப்படுகிறான். இதற்கு பழி தீர்க்கிறார் காலா. இதையடுத்து, மெயின் வில்லன் ஹரிதேவ் நேரடியாக களத்தில் இறங்குகிறார். காலாவும், ஹரிதேவும் நேரடி மோதலில் ஈடுபட, கடைசியில் ரஜினி எப்படி தாராவியை காப்பாற்றுகிறார் என்பது மீதிக்கதை.
Read More

காலா நடிகர்கள் & படக்குழுவினர்

காலா அணியின் தகவல்

இயக்குனர் பா ரஞ்சித்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை சந்தோஷ் நாராயணன்
தயாரிப்பாளர் தனுஷ்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

காலா விமர்சகர்களின் விமர்சனம்

tamil.flimibeat.com
ரஜினி - காலாவில் ரஜினியின் நடிப்பு வேற லெவல். பேரக்குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடுவது, மனைவியிடம் பம்மி விழிப்பது, சரினாவை பார்த்ததும் காதலில் மூழ்குவது, எதிரிகளை கண்களாலேயே அடக்குவது என கிளாசாக மிரட்டி இருக்கிறார். கபாலியை போல், ரஜினிக்குள் இருக்குள் ஒரு நல்ல நடிகனை அழகாக வெளிகாட்டி இருக்கிறார். குறிப்பாக எந்த ஈகோவும் பார்க்காமல், இயக்குனரின் நடிகராக நடித்துக் கொடுத்திருக்கிறார். நானா படகேர் - ஒரு அரசியல் கட்சி தலைவராகவே திரையில் அப்படியே அச்சு அசலாக வாழ்ந்திருக்கிறார். தன்னை விட ஒரு பவர் புல்லான வில்லன் காலாவுக்கு இருக்க முடியாது என நிரூபித்திருக்கிறார். இரண்டாம் பாதி முழுவதையும் ஆக்கிரமித்துக்கொள்கிறார். ஈஸ்வரி ராவ் - இவர் தான் காலா படமே என சொல்லும் அளவுக்கு, காட்சிக்கு காட்சி ஸ்கோர் செய்கிறார். கணவனின் முன்னாள் காதலியை பார்த்து பொறாமைபடுவது, கணவனிடம் சண்டைபோடுவது போல், அவர் இசைவுக்கு ஏற்ற மாதிரி நடந்துகொள்வது என செல்விக்கு உயிர்கொடுத்திருக்கிறார். ஒரு நல்ல ரீ-என்ட்ரி ஈஸ்வரி ராவுக்கு. அழகாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். காலா சொல்ல வரும் செய்தி இந்த உலகுக்கு உரக்க சொல்லப்பட வேண்டும். அந்த வகையில் காலா, ரஜினி பாதி, ரஞ்சித் பாதி கலந்து செய்த கலவை.

காலா செய்திகள்

காலா திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

காலா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+