X
தமிழ் » திரைப்படங்கள் » கிரிஷ்ணம்
கிரிஷ்ணம்

கிரிஷ்ணம்

Romance | Sci - Fi | 15 Mar 2019 | U | 128 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

கிரிஷ்ணம் கதை

கிரிஷ்ணம் இயக்குனர் தினேஷ் பாபு இயக்கத்தில் புதுமுக நடிகர்கள் பலர் நடிக்கும் அறிவியல் புனைவு திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் பி என் பலராம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஹரி பிரசாத் ஆர் இசையமைத்துள்ளார். கதைச்சுருக்கம்  மனித சக்திக்கு அப்பாற்பட்டு நிகழும் ஒரு அற்புதத்தை பற்றிய படம் தான் கிரிஷ்ணம். கதை  ஒரு நண்பனை போன்று அனைத்து விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் தந்தை சாய்குமார், கண்டிப்புடன் பாசத்தை பொழியும் தாய் சாந்தி கிருஷ்ணா என சந்தோஷமான பணக்காரக் குடும்பத்து பையன் தான் நாயகன் அக்ஷய். ஆனால் எந்த பந்தாவும் இல்லாமல் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் நண்பர்களுடன் சகஜமாக பழகும் நல்ல குணம் படைத்தவராகவே இருக்கிறார். குறிப்பாக கஷ்டம் என யார் வந்து நின்றாலும் உதவி செய்யக்கூடியவர். அதே கல்லூரியில் படிக்கும் ஐஸ்வர்யா உல்லாஸ் மீது அக்ஷய்க்கு காதல் மலர்கிறது. முதலில் மறுப்பு தெரிவிக்கும் ஐஸ்வர்யா, ஒருகட்டத்தில் அக்ஷய் மீது காதல் கொள்கிறார். வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கும் வேலையில், ஒரு அரிய வகை இதய நோயால் பாதிக்கப்படுகிறார் அக்ஷய். அவர் உயிர் பிழைக்க ஒரு சதவீதம் மட்டுமே சாத்தியம் என மருத்துவர்கள் கூற, கிருஷ்ண பக்தரான சாய்குமார் கடவுளின் உதவியை நாடுகிறார். அக்ஷய் எப்படி உயிர் பிழைக்கிறார்? அந்த அற்புதம் என்ன என்பது தான் படம்.
Read More

கிரிஷ்ணம் நடிகர்கள் & படக்குழுவினர்

கிரிஷ்ணம் அணியின் தகவல்

இயக்குனர் தினேஷ் பாபு
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ஹரி பிரசாத் ஆர்
தயாரிப்பாளர் பி என் பலராம்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

கிரிஷ்ணம் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் இந்த கதையை எழுதி, படத்தை தயாரித்திருக்கிறார் பி.என்.பலராமன். படத்தின் ஹீரோவாக அவரது மகனே நடித்துள்ளார். இவர் தான் அந்த அரிய வகை நோயில் இருந்து உயிர் பிழைத்து வந்தவர். தன்னுடையே வாழ்க்கை கதை தான் என்பதால் மிகவும் எதார்த்தமாக நடித்துள்ளார் அக்ஷய். புதுமுக நடிகர் போல் இல்லாமல், நன்றாகவே நடித்துள்ளார். கதையில் கவனம் செலுத்திய இயக்குனர் திரைக்கதையிலும் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம். இன்னும் சிறப்பான திரைக்கதை அமைத்திருந்தால், படம் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். ஹீரோயின் பிராமண பெண்ணாக இருந்தாலும், அவரது மதத்தை தூக்கி பிடிக்கும் வகையிலான வசனங்கள் தேவையில்லாத திணிப்பு. ஆன்மீகம் சம்பந்தப்பட்ட படமாகவே இருந்தாலும், அதை மிகப்படுத்தாமல் வெகுஜன மக்கள் ரசிக்கும் படியாக உருவாக்கப்பட்டுள்ளதால், 'கிரிஷ்ணம்' கவனம் ஈர்க்கிறது.

கிரிஷ்ணம் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

கிரிஷ்ணம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+