X
லியோ

லியோ

Action | 19 Oct 2023 | U/A | 164 Mins
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

லியோ கதை

லியோ - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா கிருஷ்ணன், மன்சூர் அலிகான், அர்ஜுன் என தமிழ் திரைப்பட முன்னணி முக்கிய நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தமிழ் சினிமா முன்னணி தயாரிப்பாளரான லலித் குமார் தனது ' 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ ' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். லியோ திரைப்படத்தின் டீசர், டிரைலர் & பாடல் வீடியோக்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் குடும்பங்களோடு ரசிக்கும் வகையில் சுவாரஸ்யமான அதிரடி திரைக்கதை வடிவமைத்து உருவாக்கியுள்ள லியோ படத்திற்கு ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்ஸ ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். லியோ திரைப்படத்தின் படக்குழு & திரைநட்சத்திரங்கள் தகவல்கள் லியோ திரைப்படத்தின் புகைப்படங்கள் லியோ திரைப்படம் 2023 அக்டோபர் 19ல் பூஜை பண்டிகை ஸ்பெஷல் ரிலீஸ் படமாக வெளியாகிறது, இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படத்தினை தயாரித்த 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனத்தின் தயாரிப்பாளர் லலித் குமார், லியோ படத்தினை தமிழகம் முழுவதும் தானே விநியோகம் செய்துள்ளார். லியோ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்புவதற்கான உரிமையை சன் டிவி நிறுவனம் பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் ஆன்லைன் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. லியோ திரைப்படத்தின் பாடல்கள் லியோ படத்தின் கதை கதை ஒரு பேக்கரி & காபி ஷாப் ஓனராக காஸ்மீரில் வாழ்ந்து வருகிறார், பார்த்திபன் (விஜய்). இவரின் மனைவி சத்யா (திரிஷா கிருஷ்ணன்) மற்றும் இவரது குழந்தைகளாக இயல் & மதேவ் தாமஸ் நடித்துள்ளனர். அமைதியான ஒரு அழகான வாழ்க்கையை வாழும் இவர்களுக்கு தீடிரென சாண்டி மாஸ்டர் & மிஸ்க்கின் வருகையால் ஒரு பிரச்சனை தொடங்குகிறது. இதனால் அந்த இடத்தில் பிரபலமாகும் விஜய் பத்திரிக்கை & பல இடங்களில் பிரபலமாக பேசப்படுகிறார். மக்கள் மத்தியில் பிரபலமான விஜய்-யின் புகைப்படம் தவறுதலாக வில்லன்களுக்கு கிடைக்கிறது. பின் வில்லன் விஜய்-யை தேடி பழிவாங்க வருகிறார். ஆன்டனி தாஸ் (சஞ்சய் தட்) இவரது தம்பி ஹரோல்ட் தாஸ் (அர்ஜுன்), ஆன்டனி தாஸ்-ற்கு இரண்டு குழந்தைகள் (லியோ தாஸ் - விஜய் & மடோனா செபாஸ்டின்). மூட நம்பிக்கையில் அதிக ஆர்வம் கொண்ட ஆன்டனி தாஸ், ஒரு கட்டத்தில் தனது பிள்ளைகளை நரபலி கொடுக்க திட்டமிடுகிறார். அதிலிருந்து தப்பிக்கும் விஜய் & மடோனா இருவரும், தீ விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக பலர் நம்புகின்றனர். ஆனால் பார்த்திபனை லியோ என நினைத்து பலி தீர்க்க வருகின்றனர், சஞ்சய் தட் & அர்ஜுன். இறுதியில் என்ன ஆனது என்பதே படத்தின் கதை. லியோ - பார்த்தி இருவருக்கும் என்ன ஒற்றுமைகள் உள்ளன, இறுதியில் என்ன ஆனது என்பதே படத்தின் கதை. இப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கும் LCU பட வரிசையில் இடம்பெற்றுள்ளது. இப்படத்தின் இறுதியில் நடிகர் கமல் ஹாசனின் குரல் விஜய்-யை தனது இயக்கத்தோடு இணைந்து போராடா அழைக்கிறது. லியோ படத்தின் பிரத்யேக தகவல்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ திரைப்படம் 2005 ஆம் ஆண்டு வெளியான ஹிஸ்டரி ஆஃப் வைலென்ஸ் என்ற ஆக்ஷன் திரில்லர் ஹாலிவுட் திரைப்படத்தின் சாயல் ஆகும். இந்த ஹாலிவுட் படத்தின் கதை உரிமையை பெற்று விஜய் ரசிகர்களுக்கு ஏற்றவாறு கதையில் சில மாற்றங்கள் செய்து இப்படத்தினை உருவாக்கியுள்ளனர், படக்குழுவினர். லியோ படத்தின் மூலம் குருவி, திருப்பாச்சி, கில்லி, ஆதி படங்களுக்கு பின் ஐந்தாவது முறையாக விஜய் - திரிஷா ஜோடி இணைந்து நடித்துள்ளனர். மேலும் லியோ படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தட், ப்ரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மதெவ் தாமஸ், அர்ஜுன், மன்சூர் அலிகான் என ஒரு நடிகர் நடிகைகளின் பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு நடிகர் விஜய்யின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்ச ஒளிப்பதிவு செய்துள்ளார். மாஸ்டர் பட தயாரிப்பாளர் மற்றும் வாரிசு பட விநியோகஸ்தர் திரு. லலித் குமார் இப்படத்தினை தானே தயாரித்து தமிழகம் முழுவதும் விநியோகம் செய்துள்ளார். இப்படத்தினை உலகம் முழுவதும் பல தயாரிப்பு நிறுவனங்கள் விநியோகம் செய்துள்ளது. மாஸ்டர் படத்தினை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இப்படத்தின் மூலம் இரண்டாவது முறையாக விஜய்-யோடு கூட்டணி அமைத்துள்ளார். மாஸ்டர் திரைப்படம் 50-50 படமாக உருவான நிலையில் லியோ தற்போது 100 சதவீத லோகேஷ் படமாக உருவாகியுள்ளதாக இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் பேட்டி அளித்துள்ளார். லியோ திரைப்படம் LCU (lokesh cinematic universe) பட வரிசையில் இடம் பெறுமா இல்லையா என்ற குழப்பம் இப்படத்தின் ரிலீஸ் வரை ரசிகர்கள் மத்தியில் நீடிக்கிறது. லியோ படத்தின் முதல் சிங்கிள் பாடலான நா ரெடி பாடல் வெளியானதும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அன்புமணி ராமதாஸ், நடிகர் விஜய் புகை பிடிப்பதை கண்டு, அதற்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளார், இதற்கு பலர் தங்களின் ஆதரவை தெரிவித்த நிலையில் இந்த சம்பவம் சர்ச்சையாக மாறியது.
Read More

லியோ நடிகர்கள் & படக்குழுவினர்

லியோ அணியின் தகவல்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்
கதை லோகேஷ் கனகராஜ்
சங்கதி லோகேஷ் கனகராஜ், ரத்ன குமார், தீரஜ் வைத்தி
ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்ச
தொகுப்பாளர் பிலோமின் ராஜ்
இசை அனிருத் ரவிச்சந்தர்
தயாரிப்பாளர் லலித் குமார்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

லியோ விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
பார்த்திபன் (விஜய்) தனது மனைவி திரிஷா கிருஷ்ணன் மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். இவர் ஒரு பேக்கரி கடையை முதலாளியாக நிர்வாகம் செய்கிறார். இவர் வாழும் இடத்தில் சில அநீதிகள் நடக்க, அந்த பிரச்சனையில் சிக்கி தப்பிக்கிறார். இதனால் இவர் அந்த இடத்தில் பிரபலமாகிறார். இவரது பிரபலத்தால் பல இடங்களில் செய்திகள் பரவ, ஒரு போதை கடத்தல் கும்பல் இவரை தேடி வருகிறது. இவரை கொன்று பழி தீர்க்க துடிக்கும் அந்த போதை கும்பலிடம் இருந்து இவர் எப்படி தப்பிக்கிறார். எதற்காக இவரை அந்த கும்பல் கொல்ல துடிக்கிறது? யார் இவர் என்பதே படத்தின் கதை.

லியோ ட்ரெய்லர்

Video Thumbnail

லியோ செய்திகள்

லியோ திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

லியோ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+