X
மாமன்னன்

மாமன்னன்

Action | 29 Jun 2023 | U/A | 157 Mins
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

மாமன்னன் கதை

மாமன்னன் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் என பல முக்கிய பிரபலங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தின் நாயகன் திரு. உதயநிதி ஸ்டாலின் தனது ' ரெட் ஜெயன்ட் மூவிஸ் ' தயாரிப்பு நிறுவனம் மூலம் இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமூகம் சார்ந்த கருத்துகள் உள்ளடக்கிய ஒரு ஜனரஞ்சகமான படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் செல்வா ஆர் கே எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தின் நாயகனும், தயரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் இப்படத்தினை தமிழகம் முழுவதும் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் விநியோகம் செய்துள்ளார். மாமன்னன் திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு ' யு/ஏ ' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படம் உலகம் முழுவதும் 2023 ஜூன் 29ல் பக்ரீத் தின ஸ்பெஷல் ரிலீஸ் படமாக வெளியாகியுள்ளது. மாமன்னன் படத்தில் பணியாற்றியுள்ள படக்குழு மற்றும் திரைநட்சத்திரங்கள் மாமன்னன் படத்தின் புகைப்படங்கள் மாமன்னன் திரைப்படத்தின் டீசர், டிரைலர் என பாடல் வீடியோக்கள் மாமன்னன் திரைப்படத்தின் கதை கதைக்கரு முந்திய காலகட்டத்தில் நடிக்கும் கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. மேல் சமூகத்தினரின் ஆதிக்கத்தை எதிர்த்து ஓங்கும் கீழ் சமூகத்தினரின் குரல் தான் மாமன்னன் திரைப்படத்தின் கதைக்கரு. கதை சேலத்தில் பகத் ஃபாசில் தந்தை ஒரு அரசியல் கட்சியில் தலைவராக உள்ளார். அதே கட்சியில் அடிமட்ட தொண்டனாக இருக்கும் வடிவேலு இறுதியில் எம் எல் ஏ-வாக மாறுகிறார். இருப்பினும் வடிவேலு அந்த கட்சியில் மேல் சமூகத்தினர் சொல்வதை மட்டும் கேட்டு நடந்து வருகிறார். சிறுவயதில் உதயநிதி மற்றும் அவரது நண்பர்கள் ஒரு கிணற்றில் குளிக்க செல்கின்றனர். அச்சமயம் மேல் சமூகத்தினர் அவர்களை கல்லால் அடித்து கொலை செய்ய முயற்சிக்கின்றனர். அங்கிருந்து தப்பி வரும் உதயநிதி தனது அப்பாவிடம் சொல்ல, அப்பா பகத் ஃபாசில் தந்தையிடம் பணிவாக சொல்கிறார். அப்பாவின் இந்த நிலையை கண்ட உதயநிதி கோவத்தில் அவரிடம் 15 ஆண்டுகளாக பேசாமல் இருக்கிறார். பின் அடுத்த தலைமுறை அரசியலாக பகத் ஃபாசில் தலைமை பொறுப்பிற்கு வருகிறார். பகத் ஃபாசில் தனது அப்பாவை நடத்தும் விதத்தை கண்டு கோபமடையும் உதயநிதி, பகத் ஃபாசிலை தாக்குகிறார். பின் என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை. ரிலீஸ் மாமன்னன் திரைப்படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு, இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் 2022 மார்ச் 04-ல் இணையத்தில் படக்குழு சார்பில் வெளியானது. மாமன்னன் படத்தின் டிரைலர் 2023, ஜூன் 16ல் வெளியானது. இப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி பிரமாண்ட முறையில் நடைபெற்று பலரின் கவனத்தை கவர்ந்துள்ளது. மாமன்னன் திரைப்படத்தின் டிஜிட்டல் ஓடிடி ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ள நிலையில், இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது.
Read More

மாமன்னன் நடிகர்கள் & படக்குழுவினர்

மாமன்னன் அணியின் தகவல்

இயக்குனர் மாரி செல்வராஜ்
கதை மாரி செல்வராஜ்
சங்கதி மாரி செல்வராஜ்
ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்
தொகுப்பாளர் செல்வா
இசை ஏ ஆர் ரஹ்மான்
தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

மாமன்னன் விமர்சகர்களின் விமர்சனம்

ABP திரைவிமர்சனம்
மாமன்னன் ..... இவன் மக்களின் மன்னன்...
தமிழ் சமயம்
மொத்தத்தில் மாமன்னன் திரைப்படம் ஆஹா, ஓஹோ என சொல்லும் அளவிற்கு இல்லை.
சினிஉலகம்
மொத்தத்தில் 'மாமன்னன்' அரியணை ஏறினான்
இந்து தமிழ்
மொத்தத்தில், ‘மாமன்னன்’ பேச வந்த அரசியலும், பேசிய விதமும் கவனத்துக்குரியது.
தினமலர் - சினிமா
மாமன்னன் - உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்

மாமன்னன் ட்ரெய்லர்

Video Thumbnail

மாமன்னன் பாடல்கள்

மாமன்னன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

மாமன்னன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+