X
தமிழ் » திரைப்படங்கள் » மாவீரன் கிட்டு
மாவீரன் கிட்டு

மாவீரன் கிட்டு

Action | Drama | 02 Dec 2016 | U | 125 Mins
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

மாவீரன் கிட்டு கதை

மாவீரன் கிட்டு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் ஸ்ரீ திவ்யா நடிக்கும் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.  இத்திரைப்படத்தின் கதை 1985-ம் ஆண்டு தமிழ் நாட்டு மக்களுக்காக போராடிய ஒரு வீரனின் கதையாக உருவாகியுள்ளது. கதை : ஊரில் மேல் ஜாதி, கீழ் ஜாதி என வேறுப்பாட்டின் கீழ் இயங்கும் 80'களில் படம் நகர்கின்றது. கீழ் ஜாதியினர் இறந்தால் அவர்களை ஊருக்குள் கொண்டுவரக்கூடாது என மேல் ஜாதியினர் கூற, இதனை எதிர்த்து போராடுகிறார் பார்த்திபன். கீழ் ஜாதியை சேர்ந்த கிட்டு (விஷ்ணு) தங்கள் நிலையை மாற்ற தான் ஒரு சிறந்த மாவட்ட கலெக்டராக வேண்டும் என முயற்சிக்கிறார். ஆனால், இவரது முயற்சியை தடுக்க ஒரு சிலர் சாதியின் பேரால், இவரை கொலை வழக்கில் சிறையில் தள்ளுகின்றனர்.  அந்த சாதியிலிருந்து மீள, ஜாமினில் வெளிவரும் கிட்டுவை காவல் துறை அதிகாரி ஹரிஷ் உத்தமன் மீண்டும் சிறையில் அடைத்து துன்புறுத்துகிறார். அதனால், அங்கிருந்து தப்பி ஓடிவிடுகிறார் கிட்டு.  அவரை கண்டுபிடிக்க ஊரே முயற்சிக்கிறது. ஆனால், அவர் கிடைத்தபாடில்லை. அதே நேரத்தில், இனியும் தாமதிக்க கூடாது என்று முடிவெடுத்த பார்த்திபன் போராட்டத்தை தொடங்குகிறார்.  இறுதியில், பார்த்திபனின் போராட்டம் வெற்றி பெற்றதா ? கிட்டு திரும்பி வந்தாரா ? அவருக்கு என்ன நேர்ந்தது ? என்பதே உணர்ச்சிகரமான மீதிக்கதை. 
Read More

மாவீரன் கிட்டு நடிகர்கள் & படக்குழுவினர்

மாவீரன் கிட்டு அணியின் தகவல்

இயக்குனர் சுசீந்திரன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை டி இமான்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

மாவீரன் கிட்டு விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
நூறாண்டு தமிழ் சினிமாவில் இப்போதுதான் பொது வழியில் தலித்தின் பிணம் ஏன் போகக் கூடாது? உனக்குச் சமமா நான் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தா தப்பா? விருப்பப்பட்ட ஆணும் பெண்ணும் ஒன்று சேர்வதில் சாதிக்கு என்ன வேலையிருக்கிறது? என்ற கேள்விகளுடன் படங்கள் வர ஆரம்பித்துள்ளன. மாவீரன் கிட்டு கதை மிக இயல்பானது... அன்றும் இன்றும் நாம் பார்த்துக் கொண்டிருப்பது, நிகழ்வுகளாக... செய்திகளாக. தமிழ் சினிமாவில் மக்களுக்கான முதல் பத்துப் படங்களுக்கான பட்டியலில் இடம் பெறும் தகுதி நிச்சயம் இந்த மாவீரன் கிட்டுவுக்கு உண்டு. எண்பதுகளின் பின்னணி... படம் நெடுக மனசுக்கு ரொம்ப நெருக்கமான, நெகிழ்வான காட்சிகள்.. பார்த்திபனின் பாத்திரம் அத்தனை நிறைவு. இவரைப் போன்ற சின்ராசு அண்ணன்களின் போராட்டங்கள்தான் பல இளைஞர்களை சாதியத்தின் அழுத்தத்தை மீறி சாதிக்க வைத்தன. கதையின் இன்னொரு நாயகன் வசனகர்த்தாக களமிறங்கியிருக்கும் கவிஞர் யுகபாரதி. பெரிய பிரச்சாரமெல்லாம் இல்லாமல், ஆனால் கேட்கும்போதே மனதைத் தைக்கிற, தகிக்க வைக்கிற வசனங்கள். "காலங்காலமா அடிவாங்கிட்டிருந்தவன், திமிறி திருப்பி அடிச்சான்னா திமிருங்கிறாங்க".. இது ஒரு சாம்பிள். டி இமானின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் இனிமை. சாதிகளற்ற சமூகம் சாத்தியமா தெரியவில்லை... ஆனால் எல்லா சாதியும் சமம் என்ற நிலையை சாத்தியப்படுத்த முடியும். திரையிலும் சமூகத்திலும் நிறைய சின்ராசுகள் உருவாக வேண்டும். கிட்டுகள் நின்று வாழ்ந்து அதிகாரத்தைக் கைப்பற்றி சாதிக்க வேண்டும் !

மாவீரன் கிட்டு திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

மாவீரன் கிட்டு

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+