X
தமிழ் » திரைப்படங்கள் » திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்

Comedy | Drama | Family | 18 Aug 2022 | U/A | 133 Mins
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

திருச்சிற்றம்பலம் கதை

திருச்சிற்றம்பலம் - இயக்குனர் மித்திரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ், ராசி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், பாரதி ராஜா என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தனது ' சன் பிக்சர்ஸ் ' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். தமிழ் சினிமா ரசிகர்கள் குடும்பங்களோடு ரசிக்கும் வண்ணத்தில் ஒரு அழகனாக திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிரசன்னா ஜி கே எடிட்டிங் செய்துள்ளார். திருச்சிற்றம்பலம் படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து, தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் ' ரெட் கெய்ன்ட் மூவிஸ் ' நிறுவனம் விநியோகம் செய்துள்ளது. திருச்சிற்றம்பலம் படத்திற்கு தமிழக தணிக்கை குழு ' யு/ஏ ' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படம் உலகம் முழுவதும் 2022 ஆகஸ்ட் 18ல் வெளியாகியுள்ளது. திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் படக்குழு / திரைநட்சத்திரங்கள் தகவல்கள் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் புகைப்படங்கள் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வீடியோக்கள் திருச்சிற்றம்பலம் படத்தின் கதை கதை ஒரு பட்டதாரி இளைஞரான திருச்சிற்றம்பலம் என்கிற பழம் (தனுஷ்) சரியான வேலை கிடைக்காததால் Food Delivery வேலை செய்கிறார். இவரது தந்தை நீலகண்டன் (பிரகாஷ் ராஜ்) இதனை கண்டித்து ஒரு அதிகாரியாகவோ இல்லை ஒரு நிறுவனத்திற்கு கௌரவமான வேலைக்கு செல்ல வலியுறுத்தி வருகிறார். தனுஷ் - பிரகாஷ் ராஜ் (அப்பா) மற்றும் பாரதி ராஜா (தாத்தா) ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். 10 வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் தனுஷின் தாய் மற்றும் தங்கை இறந்து விடுகிறார்கள். இதற்கு காரணம் பிரகாஷ் ராஜ் தான் என தனது அப்பாவின் மேல் அதிர்த்தியில் உள்ளார், தனுஷ். இதனால் தனுஷ் அப்பாவிடம் பேசுவதே இல்லை. தனுஷின் இக்கட்டான சூழலிலும் இவருக்கு ஆறுதலாக உயிர் தோழி நித்யா மேனன் உள்ளார். இருவரும் சிறுவயதில் இருந்து நண்பர்கள்.  பள்ளி, கல்லூரிகளில் நன்றாக படித்துள்ள தனுஷ், Food Delivery வேலை செய்வதை அறிந்த அவரது நண்பர்கள் பலர் கிண்டல் செய்கின்றனர். தனுஷ் ராசி கண்ணாவை காதலிக்கிறார். ஆனால் இந்த காதல் நிறைவடையவில்லை. பின் பிரியா பவானி ஷங்கரை காதலிக்க தொடங்குகிறார், ஆனால் ஒரே நாளில் அதுவும் தோல்வி அடைகிறது. தனுஷின் தாத்தா பாரதிராஜா, தனுஷிற்கு சரியான ஜோடி என நித்யா மேனனை குறிக்கிறார். இதற்கு பின் என்ன ஆனது என்பதே படத்தின் கதை. தனுஷ் - நித்யா மேனன் இடையே உள்ள நட்பு காதலாக மாறுகிறதா?இல்லையா? என்பதே படத்தின் அழகான திரைக்கதை. திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் பிரத்யேக தகவல்கள் படிக்காதவன் (2009), ஆடுகளம் & மாப்பிள்ளை (2011) படங்களுக்கு பின்னர் தனுஷ் - சன் பிக்சர்ஸ் கூட்டணியில் நான்காவது முறையாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் இயக்குனர் மித்ரன் ஜவகர் - தனுஷ் கூட்டணியில் யாரடி நீ மோகினி (2008), குட்டி, உத்தமபுத்திரன் (2010) படங்களுக்கு பின்னர் இருவரும் திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம் இணைந்துள்ளனர். 3, மாரி போன்ற ஹிட் ஆல்பம் படங்களுக்கு பின்னர் தனுஷ் - அனிருத் ( DNA ) கூட்டணியில் இப்படம் உருவாகி திரை ரசிகர்கள் கவனம் பெற்றுள்ளது. தனுஷ் - அனிருத் முந்திய படங்களை போன்று இந்த திரைப்படத்தின் ஆல்பம் பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஹிட் பாடலாக புகழ் பெற்றுள்ளது. திருச்சிற்றம்பலம் படத்தின் பாடலான மேகம் கருக்காதா, தாய் கிழவி, தேன்மொழி, லைப் ஆஃப் பழம் பாடல்கள் சமூக வலைத்தளங்களில் திரை ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு புகழ் பெற்றுள்ளது. திருச்சிற்றம்பலம் படத்தின் அறிவிப்புகள் திருச்சிற்றம்பலம் படத்தின் முதற்கட்ட அறிவுப்பு சன் பிக்சர்ஸ் மற்றும் தனுஷ் - அனிருத் (DNA) கூட்டணியில் உருவாகவாகவுள்ள படமாக 2020 அக்டோபர் மாதம் வெளியானது. இப்படத்தில் நாயகியாக நடிக்க முதலில் ஹன்சிகா மோத்வானி அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடந்தாக கூறப்படுகிறது. பின்னர் இப்படத்தின் நாயகிகள் ஆக ராசி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், நித்யா மேனன் என அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகின. திருச்சிற்றம்பலம் படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவுப்பு 2021 ஆகஸ்ட் 5ல் வெளியானது. இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களின் வீடியோ ரிலீஸ் 2022 ஜூன் மாதம் முதல் வெளியாகியுள்ளது.
Read More

திருச்சிற்றம்பலம் நடிகர்கள் & படக்குழுவினர்

திருச்சிற்றம்பலம் அணியின் தகவல்

இயக்குனர் மித்திரன் ஜவகர்
ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்
தொகுப்பாளர் பிரசன்ன ஜி.கே
இசை அனிருத் ரவிச்சந்தர்
தயாரிப்பாளர் கலாநிதி மாறன்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

திருச்சிற்றம்பலம் விமர்சகர்களின் விமர்சனம்

ABP திரைவிமர்சனம்
சாமனியனுக்கான வாழ்வில் நடக்கும் சின்ன விஷயங்களை கூட சுவாரசியத்தோ சொல்ல முடியும் என்று நிருபித்து இருக்கிறார் ஜவஹர்.
நியூஸ் 7 தமிழ்
ஒரு ஃபீல் குட் மூவி என்றே திருச்சிற்றம்பலம் படத்தை சொல்லலாம்.
தமிழ் சமயம்
படம் பார்த்த திருப்தியில் புன்னகையுடன் கிளம்ப செய்கிறார் மித்ரன் ஜவஹர்.
தினமலர் - சினிமா
திருச்சிற்றம்பலம் - திருப்தி
நியூஸ் 18 தமிழ்
வழக்கமான கதையை சுயாரஸ்யமாக எடுத்து ஒரு Feel Good Movie என சொல்ல வைத்துள்ளார் இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவகர்.

திருச்சிற்றம்பலம் ட்ரெய்லர்

Video Thumbnail

திருச்சிற்றம்பலம் பாடல்கள்

திருச்சிற்றம்பலம் செய்திகள்

திருச்சிற்றம்பலம் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

திருச்சிற்றம்பலம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+