ஆணைமலை மாசாணி அம்மன் கோவிலில் வழிபட்ட நடிகர் சிவகார்த்திகேயன்.. தீயாய் பரவும் போட்டோ!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் ஆணை மலையில் உள்ள மாசாணி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த போட்டோ வைரலாகி வருகிறது.

தொலைகாட்சியில் இருந்து சினிமாவுக்கு வந்த சிவகார்த்திகேயன் பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். அவரது நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர், அயலான் படங்கள் திரைக்கு வர தயாராக உள்ளன.

8 மாத குழந்தையை இதய நோயிலிருந்து மீட்க உதவுங்களேன் ப்ளீஸ்

சிவகார்த்திகேயன் தயாரித்த கனா படம் பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வாழ், டாக்டர் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

தெலுங்கில் அறிமுகமாகும் சிவ கார்த்திகேயன்

தெலுங்கில் அறிமுகமாகும் சிவ கார்த்திகேயன்

இந்த நிலையில் தெலுங்கில் வெற்றி பெற்ற ஜதி ரத்னலு என்ற படத்தை இயக்கி பிரபலமான அனுதீப் இயக்கும் புதிய படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகி உள்ளார். இந்தப் படத்திற்காக முதல் முறையாக 25 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார் சிவகார்த்திகேயன்.

கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பு

கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பு

இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் படத்தை அறிமுக இயக்குனர் அசோக் என்பவர் இயக்க இருப்பதாகவும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 மேலும் இரண்டு படங்களில் சிவகார்த்திகேயன்

மேலும் இரண்டு படங்களில் சிவகார்த்திகேயன்

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் மேலும் இரண்டு தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் ஒரு படத்திலும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்திலும் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆணைமலையில் டான் படப்பிடிப்பு

ஆணைமலையில் டான் படப்பிடிப்பு


நடிகர் சிவகார்த்திகேயன், தற்போது டான் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் ஆணைமலை பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அனுமதியில்லாமல் படப்பிடிப்பு நடத்தியதாக படக்குழுவுக்கு நேற்று முன்தினம் அரசு அதிகாரிகள் 19,500 ரூபாய் அபராதம் விதித்தனர். 17 பேர் மீது வழக்குப் பதிவும் செய்தனர்.

Recommended Video

'Vijay Sethupathi-க்கும் Sivakarthikeyan-க்கும் ஒரே ஒரு வித்தியாசம் | Anandraj Interview
ஓய்வு நேரத்தில் சுற்றி பார்த்து

ஓய்வு நேரத்தில் சுற்றி பார்த்து

இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்த பிறகு ஓய்வு நேரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், அங்கு சுற்றி பார்த்து வருகிறார். சமீபத்தில் நடிகர் சூரியும் நடிகர் சிவகார்த்திகேயனும் பைக்கில் சென்ற வீடியோ வெளியானது. அதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் வெளியில் சென்ற போது அவரை பார்த்த அப்பகுதி மக்கள் பொள்ளாச்சி எப்படி இருக்கு என்று கேட்டனர்.

மாசாணி அம்மன் கோவிலில் சாமி தரிசனம்

மாசாணி அம்மன் கோவிலில் சாமி தரிசனம்

அதற்கு சூப்பரா இருக்கு என்று கூறினார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் தற்போது, ஆணைமலையில் உள்ள மாசாணி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் சிவகார்த்திகேயன். அந்த போட்டோவை சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். இந்த போட்டோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X