Don't Miss!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- News
உடல்நலக் குறைவால் சிகிச்சை பெறும் நிலையிலும்.. அமைச்சரிடம் நல்லகண்ணு வைத்த பொதுநல கோரிக்கை! செம!
- Finance
1000 பேரை கொத்தாகப் பணிநீக்கம் செய்தும் நிறுவனம்.. ஊழியர்கள் பீதி..!
- Lifestyle
உங்க கொழுப்பை குறைத்து...உடல் எடையை சீக்கிரம் குறைக்க நீங்க இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணா போதுமாம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
வாரிசு பேனருடன் சபரிமலையில் தரிசனம் செய்த விஜய் ரசிகர்கள்.. ப்ளூ சட்டை மாறன் பகிர்ந்த புகைப்படம்!
சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் வாரிசு. இந்தப் படம் வரும் பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளது.
குடும்ப சென்டிமெண்ட்டை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு முன்னதாக பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.
விஜய்யின் முந்தைய படம் பீஸ்ட் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், வாரிசு படம் சிறப்பான விமர்சனங்களை பெறும் என்று தற்போது எதிர்பார்க்கப்படுகிறது.
பொங்கல்
ரேஸில்
உக்கிரமான
வாரிசு,
துணிவு…
பஞ்சாயத்தை
கூட்டிய
விஜய்,
அஜித்
ரசிகர்கள்!

நடிகர் விஜய்யின் வாரிசு படம்
நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் அடுத்ததாக அவரது வாரிசு படம் உருவாகியுள்ளது. வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் தில் ராஜு தயாரித்துள்ள இந்தப் படம் பேமிலி சென்டிமெண்டை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில், விஜய்க்கு ஜோடியாகியுள்ளார் ராஷ்மிகா மந்தனா.

சிறப்பான ரஞ்சிதமே பாடல்
இந்த படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. படத்தில் விஜய், மானசி பாடியுள்ள ரஞ்சிதமே பாடல் வெளியாகி தற்போது 75 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது. படத்தின் ரிலீசுக்கு முன்னதாக 100 மில்லியன்ஸ் வியூஸ்களை இந்தப் பாடல் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே டிசம்பர் முதல் வாரத்தில் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

தளபதி 67 படம்
இந்தப் படத்தை தொடர்ந்து தளபதி 67 படத்தில் விஜய் இணையவுள்ள நிலையில், விரைவில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே இந்தப் படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளன. மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் -லோகேஷின் இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது.

விஜய் -அஜித் படங்கள் மோதல்
நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு விஜய் -அஜித் படங்கள் இந்த பொங்கலையொட்டி ஒரே நேரத்தில் ரிலீசாகவுள்ளன. அஜித்தின் துணிவு படம் திரில்லர் படமாகவும் விஜய்யின் வாரிசு படம் பேமிலி ஆடியன்சை கவரும் வகையிலும் உருவாகியுள்ள நிலையில், இரண்டு படங்களும் சமமான அளவிலான திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரிசு பேனருடன் சபரிமலையில் ரசிகர்கள்
தற்போது வாரிசு படத்தின் பேனர்கள் உள்ளிட்டவற்றை திரையரங்குகளில் காண முடிகிறது. இதனிடையே வாரிசு படம் வெற்றி பெற வேண்டி, அந்தப் படத்தின் பேனருடன் பண்ருட்டியை சேர்ந்த விஜய் ரசிகர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்தனர். இதை பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எப்போதும் நடிகர்களை விமர்சனம் செய்யும் நோக்கத்தில் பதிவுகளை இட்டுவரும் ப்ளூ சட்டை மாறன் எந்தவிதமான விமர்சனமும் இல்லாமல் வெறுமனே இந்த நிகழ்வை பதிவிட்டுள்ளார்.