செம சர்ப்ரைஸ்...வலிமை ரிலீஸ் ஹாட் அப்டேட் ரெடி...அதுவும் எப்படி தெரியுமா ?

சென்னை : அஜித் நடித்த வலிமை படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த அப்டேட்டை ரசிகர்களுக்காக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் வலிமை ரிலீசை ரசிகர்கள் மீண்டும் எதிர்பார்க்க துவங்கி விட்டனர்.

டைரக்டர் ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அதிகரித்த கொரோனா பரவல் காரணமாக கடைசி நிமிடத்தில் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. புதிய தேதி அறிவிக்கப்படாததால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.

ஆர்ஆர்ஆர் அறிவித்த இரண்டு ரிலீஸ் தேதி

ஆர்ஆர்ஆர் அறிவித்த இரண்டு ரிலீஸ் தேதி

அஜித்தின் வலிமை படத்தை போலவே மிகவும் எதிர்பார்த்து தள்ளி வைக்கப்பட்ட படம் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படம். இந்த படம் ஜனவரி 7ம் தேதி ரிலீஸ் செய்வதாக கூறி, பிறகு தள்ளி வைத்தனர். இந்நிலையில் சமீபத்தில் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக மார்ச் 18 அல்லது ஏப்ரல் 28 அன்று படம் ரிலீஸ் செய்யப்படும் என இரண்டு ரிலீஸ் தேதிகளை ஆர்ஆர்ஆர் படக்குழு அறிவித்தது.

வலிமை டீம் பிளான் இதுவா

வலிமை டீம் பிளான் இதுவா

இந்நிலையில் தற்போது ஆர்ஆர்ஆர் படக்குழு பாணியில் வலிமை படக்குழுவும் இரண்டு ரிலீஸ் தேதிகளை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாம். இதன்படி பிப்ரவரி 25 அல்லது மார்ச் 4ம் தேதி வலிமை படத்தின் ரிலீஸ் தேதிகளாக அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். ஆனால் தமிழகத்தில் அமலில் உள்ள ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, இரவு நேரவு ஊரடங்கு போன்றவற்றை பொறுத்து ரிலீஸ் திட்டத்தில் மாற்றம் கொண்டும் வரலாம் என கூறப்படுகிறது.

ஏகே 61 அப்டேட்டும் ரெடி

ஏகே 61 அப்டேட்டும் ரெடி

இதற்கிடையில் அஜித்தின் அடுத்த படமான ஏகே 61 படத்தின் அப்டேட்களும் வெளியிடப்பட்டு வருகிறது. மார்ச் 9ம் தேதி ஏகே 61 படம் பூஜையுடன் ஷுட்டிங் துவங்கப்படும் என கூறப்படுகிறது. அதனால் அதற்கு முன்பே வலிமை படத்தை ரிலீஸ் செய்து விட படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இரண்டு படங்களின் அப்டேட்களையும் ரசிகர்கள் கவனித்து வருகிறார்கள்.

இது தான் காரணமா

இது தான் காரணமா

வலிமை படத்தில் போலீஸ் ரோலில் நடித்துள்ள அஜித்தின் அதிரடி ஆக்ஷன், பைக் ரேஸ் காட்சிகளை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக காத்திருக்கிறார்கள். ஏற்கனவே படம் துவங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. தொடர்ந்த படம் தள்ளி போய் கொண்டிருந்தால் ரசிகர்கள் சலிப்படைய வாய்ப்புள்ளது என்பதாலேயே, ரசிகர்களை ஏமாற்றமடைய செய்ய வேண்டாம் என்பதற்காக புதிதாக இரண்டு ரிலீஸ் தேதிகளை வலிமை படக்குழுவினர் வெளியிட போகிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X