twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மறைந்த பாடகர் கேகே குறித்து ஏஆர் ரஹ்மான் உருக்கமான பதிவு

    |

    சென்னை: மாரடைப்பால் காலமான பிரபல பாடகர் கேகே குறித்து இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

    கிருஷ்ணகுமார் குன்னத் என்ற கேகே, தமிழில் ஹிட்டான பல பாடல்களைப் பாடியிருக்கிறார். 'காக்க காக்க' படத்தில் வரும் 'உயிரின் உயிரே' பாடல் அவர் பாடியது தான்.

    Recommended Video

    Singer KK Passed Away | மேடையில் பாடி முடித்ததும் பிரிந்த உயிர் | #India

    இந்நிலையில், கொல்கத்தாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் பாடி முடித்ததும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது.

    “என்ன அவசரம் நண்பா“... பாடகர் கேகே மறைவு... பிரபலங்கள் உருக்கம்!

    ஏன் அவசரம் கேகே?

    ஏன் அவசரம் கேகே?

    இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் மறைந்த கேகே குறித்து தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது: "அன்பு கேகே.. ஏன் இந்த அவசரம் நண்பனே.. உன்னைப் போன்று வரம் வாங்கி வந்த பாடகர்களும், கலைஞர்களும் இந்த வாழ்க்கையை அதிகம் தாங்கக் கூடியதாக்கினீர்கள். அமைதியாக ஓய்வெடுங்கள்" என ஏஆர் ரஹ்மான் குறிப்பிட்டிருக்கிறார்.

    கமல் இரங்கல்

    கமல் இரங்கல்

    கேகேவின் மரணம் குறித்து நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டிருக்கும் இரங்கலில், "பன்மொழிகளிலும் பாடி ரசிகர்களை மகிழ்வித்த கேகே எனும் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் அகால மரணமடைந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாழும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் என் ஆறுதல்கள்" எனத் தெரிவித்திருக்கிறார்.

    ஹிட் பாடல்கள்

    ஹிட் பாடல்கள்

    தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என அத்தனை மொழிகளிலும் பாடியிருக்கும் கேகே தமிழில் பல ஹிட்டான பாடல்களைப் பாடியிருக்கிறார். 1997-ம் ஆண்டு மின்சாரக் கனவு திரைப்படத்தில் 'ஸ்ட்ராபெரி பெண்ணே' என்ற பாடல் மூலம் தமிழிலில் அறிமுகமான கேகே, அதன் பின்னர் உயிரின் உயிரே, நினைத்து நினைத்துப் பார்த்தேன், அண்டங்காக்கா கொண்டக்காரி, காதல் வளர்த்தேன், பட்டாம்பூச்சி, ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி, அப்படிப்போடு, கல்யாணம் தான் கட்டிக்கிட்டு என நாம் ரசித்த பல ஹிட் பாடல்களைப் பாடினார்.

    தலையிலும், முகத்திலும் காயம்?

    தலையிலும், முகத்திலும் காயம்?

    இதனிடையே, கொல்கத்தாவில் நிகழ்ச்சி மேடையில் பாடி முடித்த கேகே நெஞ்சுவலியோடு நடந்து வரும் வீடியோ வைரல் ஆகி வருகின்றது. இந்நிலையில், அவரது தலையிலும், முகத்திலும் காயங்கள் இருந்ததாகவும், கேகேவின் மரணம் இயற்கைக்கு மாறான மரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் சில தகவல்கள் வெளிவந்தன. ஆனால் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், கேகே கார்டியாக் அரெஸ்ட்டினால் தான் இறந்திருக்கிறார் என்றும், அவருக்கு நீண்ட காலமாக இருதய பிரச்சினை இருந்திருக்கிறது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இன்று ஜூன் 2-ம் தேதி கேகேவின் இறுதிச்சடங்குகள் மும்பையில் நடத்தப்படுகின்றது. பாலிவுட்டைச் சேர்ந்த பல பிரபலங்கள் கேகேவிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Ar Rahman Emotional Tweet about Singer KK
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X