»   »  ஜூரம் தணிந்தது.. பாகுபலி ஆர்வம் அதிகரித்தது.. தியேட்டர்களில் அலைமோதும் ரசிகர்கள்

ஜூரம் தணிந்தது.. பாகுபலி ஆர்வம் அதிகரித்தது.. தியேட்டர்களில் அலைமோதும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த பாகுபலி படம் இன்று வெளியாகி விட்டது, தென்னிந்திய மொழிகள், இந்தி தவிர்த்து உலகெங்கும் இன்று வெளியாகி இருக்கிறது படம்.

ஒருவார காலமாக மக்களைப் பிடித்திருந்த பாகுபலி ஜுரம் இன்று படம் பார்த்ததில் சற்றுத் தணிந்திருக்கும் என்று நம்பலாம், முதல் நாள் முதல் காட்சி பார்க்க வேண்டும் என்று காத்திருந்தவர்களின் ஆசை இன்று நிறைவேறி விட்டது.


எல்லாம் சரி ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் நிறைவேற்றி இருக்கிறதா என்று பார்க்கலாம்.


[பாகுபலி விமர்சனம்]


தென்னிந்திய நட்சத்திரங்களின் கலவை

தென்னிந்திய நட்சத்திரங்களின் கலவை

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர்,சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், சுதீப் போன்ற தென்னிந்திய நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் படம் பாகுபலி, நான் ஈ படப்புகழ் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கியிருக்கும் சரித்திரத் திரைப்படம் இது.


ஒளிப்பதிவும், இசையும்

ஒளிப்பதிவும், இசையும்

புகழ்பெற்ற தெலுங்கு இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையில், படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் செந்தில்குமார். பாகுபலிக்கு எடிட்டிங் செய்திருப்பது கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவ்.


2 பாகங்கள்

2 பாகங்கள்

2 பாகங்களாக உருவாகி இருக்கும் பாகுபலி படத்தின் முதல் பாகம் இன்று வெளியாகி இருக்கிறது, அடுத்த பாகம் விரைவில் வெளியாகும் என்று கூறியிருக்கிறார் படத்தின் இயக்குநர் ராஜமௌலி.


ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா படம் ?

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா படம் ?

இன்று வெளியாகி இருக்கும் பாகுபலி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறது, என்று படத்தைப் பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறார்கள்.


ஒளிப்பதிவும், போர்க்காட்சிகளும் சூப்பர்

ஒளிப்பதிவும், போர்க்காட்சிகளும் சூப்பர்

படத்தின் ஒளிப்பதிவும், போர்க்காட்சிகளும் மிகவும் நன்றாக இருக்கிறது என்று பரவலாக கருத்துகளைக் கூறியுள்ளனர் படத்தைப் பார்த்தவர்கள். மொத்தத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி இருக்கிறது படம்.


English summary
Baahupali Tamil Movie – Fans Review, History been recreated by SSR & team.Tamil and Telugu movie stars Prabhas, Rana Daggubati, Anushka Shetty and Tamanna Bhatia feature in the lead roles.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil