உபர் கால் டாக்ஸி டிரைவருக்கும் ரித்விகாவுக்கும் இடையே தகராறு
நடிகை ரித்விகா ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற ரியாலிட்டி ஷோ பிக்பாஸ் சீசன் 2ன் டைடில் வின்னர்.
ரித்விகா சினிமா வாழ்க்கையை நாம் பிக்பாஸ்க்கு முன் பிக்பாஸ்க்கு பின் என பிரிக்கலாம். ஏனெனில் ரித்விகா பிக்பாஸ்க்கு பிறகு அனைவருக்கும் தெரிந்த ஒரு பிரபலம் ஆகி விட்டார். பிக்பாஸ் சீசன் 1ல் ஆரவ் பிக்பாஸ் டைடிலை வென்றார் . தற்போது அக்டோபர் 6ல் முடிந்த சீசன் 3ல் முகேன் தலைப்பை வென்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று வருடமாக விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்று வருகிறது .மூன்று வருடங்களுக்குமே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார் உலக நாயகன் 'கமல்ஹாசன்' .இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலரும் பிரபலமாகியுள்ளனர். வாய்ப்பு மறுக்கபட்டு இருந்த பல நடிகர்களுக்கு இந்த நிகழ்ச்சியின் மூலம் மறுவாழ்வும் கிடைத்தது .
ஆரவ் , ஹரிஷ் கல்யான், ஓவியா, ஜீலி, ரைஷா, மும்தாஜ், ஜஸ்வர்யா தத்தா, ரித்விகா, ஜனனி ஐயர், தாடி பாலாஜி, மகத், யாஷிகா போன்ற பலருக்கு பல வாய்ப்புகள் தேடி வர காரணமாக இருந்தது பிக்பாஸ் தான் . இந்த நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்து கொண்ட பலருக்கும் தற்போது படவாய்ப்புகள் குவிந்து வருகிறது .
தற்போது ரித்விகா அறிமுக இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி வரும் ,இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்தில் நடித்துள்ளார் .
ரித்விகா தனக்கு நடந்த மோசமான பயணத்தை பற்றி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் .உபர் நிறுவன கால்டாக்ஸியில் ரித்விகா சென்று இருக்கிறார். அந்த கால்டாக்ஸி ஓட்டி வந்த ஓட்டுனர் ரித்விகாவிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டதாகவும், அந்த காரும் மிக மோசமாக இருந்ததாகவும் ரித்விகா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறிய உபர் நிறுவனத்திற்கும் இந்த தகவலை டேக் செய்து இருக்கிறார்.உபர் நிறுவன்த்திற்கும் இந்த தகவலை டேக் செய்து இருக்கிறார் .
இதுக்கெல்லாமா விளம்பரம்.. சிம்பு போட்ட போட்டோவை பார்த்து நொந்துகொள்ளும் நெட்டிசன்ஸ்!
இதை போல் சம்பவங்கள் நிறைய நடந்து கொண்டு இருக்கின்றன . சிலர் வெளியில் சொல்கிறார்கள் சிலர் சொல்வதில்லை. ஒரு முனையில் கடினமாய் உழைத்து வாழ்வில் முன்னேற நினைத்து கால்டாக்ஸி தொழிலை சிறப்பாக செய்து வரும் பலருக்கு மத்தியில் இப்படியும் சில ஓட்டுனர்கள் இருக்க தான் செய்கிறார்கள். இவர்களினால் நல்ல ஓட்டுனர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. இதை யூபர் நிறுவனம் கண்டு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ட்விட்டரில் பலரும் ரித்விகாவின் பதிவிற்கு கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இது போன்ற பல பிரச்சனைகளை கால் டாக்ஸி மூலம் சந்தித்தவர்கள் ரித்விகாவின் இந்த அதிரடியான ட்விட்டர் பதிவிற்காக வாழ்த்து தெரிவிப்பர்.


Click it and Unblock the Notifications