twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொறி பறக்கும் விஜய்-ன் போக்கிரி...15 ஆண்டு சாதனையை கொண்டாடும் ரசிகர்கள்

    |

    சென்னை : பிரபு தேவா இயக்கத்தில் விஜய் நடித்த படம் போக்கிரி. 2007 ம் ஆண்டு ஜனவரி 12 ம் தேதி இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டு இன்றுடன் 15 வருடங்கள் நிறைவடைந்து விட்டது. இதனை விஜய் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.

    விஜய், அசின் லீட் ரோலில் நடித்திருந்த போக்கிரி படத்தில் பிரகாஷ் ராஜ், நாசர், வடிவேலு, ஸ்ரீமன், நெப்போலியன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். முமைத் கான் மற்றும் பிரபு தேவா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் ஷுட்டிங் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்டது.

    விடுமுறை கொண்டாட்டத்தில் ரிலீசாகிறதா வடிவேலுவின் கொண்டாட்டமான படம் விடுமுறை கொண்டாட்டத்தில் ரிலீசாகிறதா வடிவேலுவின் கொண்டாட்டமான படம்

    தெலுங்கு ரீமேக்

    தெலுங்கு ரீமேக்

    2006 ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த போக்கிரி படத்தின் ரீமேக் தான் விஜய் நடித்த போக்கிரி. ஆனால் ரீமேக் படம் என்பதை போல் இல்லாமல் ஆக்ஷன் காட்சிகளும், விஜய்யின் மாஸான நடிப்பும் படத்தை மிகப் பெரிய அளவில் ரசிக்க வைத்தது. காமெடி, ஆக்ஷன், மியூசிக் என அனைத்திலும் ஸ்கோர் செய்தது போக்கிரி படம். 200 நாட்களுக்கு மேல் ஓடி பாக்ஸ் ஆபீசில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது.

    ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படம்

    ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படம்

    2009 ம் ஆண்டு லண்டனில் ப்ளூ ரேவிலும் போக்கிரி படம் வெளியிடப்பட்டது. 2019 ம் ஆண்டு விஜய் பிறந்த நாளை முன்னிட்டு போக்கிரி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழில் பிரபுதேவா முதன் முதலாக டைரக்ட் செய்த படம் இது. முதல் படமே பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது. இந்த படத்திற்கு மணி சர்மா இசை அமைத்திருந்தார். தெலுங்கில் பயன்படுத்திய இரண்டு பாடல்களின் இசையை தமிழிலும் பயன்படுத்தி இருந்தார். அதே போல் 1958 ம் ஆண்டு சாரங்கதாரா படத்தில் இடம்பெற்ற வசந்தமுல்லை பாடலும் ரீ மிக்ஸ் செய்து பயன்படுத்தப்பட்டது.

     உலகம் முழுக்க வரவேற்பு

    உலகம் முழுக்க வரவேற்பு

    2007 ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு போக்கிரி படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அஜித்தின் ஆழ்வார், விஷாலின் தாமிரபரணி போன்ற படங்களும் அதே சமயத்தில் வெளியிடப்பட்டது. போக்கிரி படம் முதல் நாளே அமெரிக்காவில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படம் தமிழகத்தில் மட்டும் 6 கோடிக்கும் அதிகமான தொகையை வசூல் செய்தது. தமிழகத்தில் மட்டும் மொத்தம் 142 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. கேரளாவிலும் 100 நாட்களை கடந்து ஓடியது.

    அனைத்து மொழிகளிலும் ஹிட்

    அனைத்து மொழிகளிலும் ஹிட்

    தெலுங்கில் போக்கிரி என்ற பெயரில் புரி ஜெகந்நாத் இயக்கிய இந்த படம் தமிழ் மட்டுமின்றி பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. அனைத்து மொழிகளிலும் இந்த படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. தமிழில் போக்கிரி என்ற பெயரிலும், இந்தியில் வாண்டட் என்ற பெயரிலும் பிரபுதேவா டைரக்டர் செய்தார். இரண்டு மொழிகளிலும் வில்லன் ரோலில் பிரகாஷ் ராஜே நடித்திருந்தார்.

    வடிவேலுவின் வட போச்சே

    வடிவேலுவின் வட போச்சே

    இந்த படத்தில் வடிவேலு பேசும், வட போச்சே. பிளான் பண்ணி பண்ணணும், பாடி சோடா, மண்ட மேல இருக்க கொண்டைய மறந்துட்டனே போன்ற வசனங்கள் மிக பிரபலம். இந்த வசனங்கள் அதற்கு பிறகு வந்த பல படங்களில் பயன்படுத்தப்பட்டது. அதே போல் விஜய் பேசும், ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்ச நானே கேட்க மாட்டேன் என்ற பஞ்ச் டயலாக்கும் மிக பிரபலமாக பேசப்பட்டது.

    English summary
    Vijay's Pokkiri movie completed 15 years of theatre release. It was a telugu remake movie. This was the first movie which was directed by Prabhu deva in tamil. He also remake this same story in hindi also.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X