twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வட சென்னை படத்தை ஏன் பார்க்க வேண்டும்?: இதோ சில முக்கிய காரணங்கள்

    |

    Recommended Video

    தனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்- வீடியோ

    சென்னை: வட சென்னை திரைப்படத்தை பார்ப்பதற்கான முக்கிய காரணங்களை காணலாம்.

    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி அமீர், கிஷோர் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் வட சென்னை.

    மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று ரிலீஸாகியுள்ளது.

    [வட சென்னை: கிளாஸ், மாஸ், செம, வெறித்தனம்- ட்விட்டர் விமர்சனம் #vadachennai]

    தனுஷ்

    தனுஷ்

    வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது படம் என்பது முக்கிய காரணம். ஏனென்றால் இவர்களின் கூட்டணியில் வந்த பொல்லாதவன் மற்றும் ஆடுகளம் திரைப்படங்கள் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தின என்பது தெரிந்த விஷயம். அந்த மேஜிக்கல் திரைக்கதை இப்படத்திலும் இருக்கும் என எதிர்பார்க்கலாம். ஒரு நடிகனுக்குள் இருக்கும் திறமையை இன்னும் மெருகேற்றி சிறப்பாக வேலை வாங்குவதில் கெட்டிக்காரர் வெற்றி. படம் பார்ப்பவர்கள் திரைக்கு வெளியே இருக்கிறார்கள் என்பதை மறக்கும் விதமாக கதை சொல்லக்கூடியவர்.

    திரைக்கதை

    திரைக்கதை

    இப்படத்தின் கதை கேரம் விளையாட்டில் பல உயரங்களை அடைய வேண்டும் என நினைக்கும் ஒரு வட சென்னை இளைஞன் எப்படி திசைமாறி கேங்ஸ்டராக மாறுகிறான் என்பது தான். அன்பு என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருக்கிறார். திருவிழாக்கோலம் பூணும் முன்னிரவு வட சென்னைப் பகுதியில் லவ்வர் பாயாக ஐஸ்வர்யாவைச் சுற்றிவரும் அன்பையும், "அவ்ளோ பெரிய கப்பலையும் ஒரு தம்மாத்தூண்டு ஆங்கர் தாண்டா நிறுத்துது" எனச் சொல்லும் கேங்ஸ்டர் அன்பையும் புரமோவில் காட்டிவிட்டார். அதனால் ரியலஸ்டிக்கான திரைக்கதையில் அன்பு கதாபாத்திரத்தின் பரிமாணங்கள் எப்படி கையாளப்பட்டுள்ளன என்பது முக்கியமான விஷயமாக இருக்கிறது. நிச்சயம் எதிர்பாராததை எதிர்பார்க்க முடியும்.

    ட்ரையாலஜி

    ட்ரையாலஜி

    தமிழ் சினிமாவில் வரும் முதல் ட்ரையாலஜி படமாக இதைச் சொல்லலாம். ஒரு படத்தின் தொடர்ச்சியை அடுத்த படத்தில் காட்டுவதற்கெல்லாம் தனி கட்ஸ் வேண்டும். கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்பது போன்ற கேள்வியை கேட்க வைத்தால்தான் அடுத்த பாகம் ரிலீஸாகும் போது அந்த கனெக்டிவிட்டி மிஸ் ஆகாது. வெற்றிமாறனுக்கு இது புது முயற்சி. சுவாரஸ்யம் குறையாமல் முதல் பாகம் இருக்கும் என்ற நம்பிக்கை எல்லோருக்குமே உள்ளது. அதே நேரம் அடுத்த பாகத்தை பார்ப்பதற்கான எதிர்பார்ப்பாக எதை சொல்லப்போகிறார் என்பது முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது.

    மற்ற நடிகர்கள்

    மற்ற நடிகர்கள்

    வெற்றிமாறன் படங்களைப் பொருத்தவரை ஒரு கதாபாத்திரம் ஒரு காட்சியில் வந்தாலுமே அதற்கான முக்கியத்துவம் கதையில் இருக்கும். இப்படத்தில் பல முக்கிய நடிகர்கள் இருக்கிறார்கள். சமுத்திரக்கனி, அமீர், கிஷோர் டேனியல் பாலாஜி ஆண்ட்ரியா என லிஸ்ட் நீளுகிறது. அமீருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா எனும்போது அவர்களுக்கெனெ தனி போர்ஷன் இருக்கலாம். சமுத்திரக்கனி நெஞ்சில் பெரிய தழும்புடன் காட்சியளிக்கிறார். அதனால் அதற்கொரு ஃபிளாஷ்பேக் நிச்சயம். வெற்றிமாறன் படங்களில் தவிர்க்க முடியாத சக்தியாய் இருப்பவர் நடிகர் கிஷோர். இப்படி பல படங்களில் ரசிக்கப்பட்ட முக்கிய நடிகர்கள் படத்தில் இருப்பது மற்றுமொரு ப்ளஸ் பாய்ண்ட். தனுஷ் ஐஸ்வர்யா ராஜேஷ் கெமிஸ்ட்ரி வேற லெவல்ல இருப்பதை டீசரிலேயே பார்த்தோம்.

    இசை

    இசை

    இருளில் நடக்கும் ஒரு மனிதன் துணையாய் சிறிய டார்ச் வைத்திருப்பதுபோல் ரியலஸ்டிக்கான படங்களுக்கு பின்னணி இசையின் பங்கு அத்தியாவசியமானது. இசையமைப்பாளர் என்றால் எப்போது எதாவது ஒலி எழுப்பிக்கொண்டே இருக்க வேண்டுமென்று இல்லாமல் தேவையான போது அதைச் செய்தால் போதும் என்ற மனநிலையில் இசையமைக்கும் சந்தோஷ் நாராயாணன். வட சென்னைப் பகுதியில் வாழ்ந்து அனுபவித்த மனிதரைப் போல பாடல்களைக் கொடுத்துள்ளார். பின்னணி இசையும் அவ்வாறே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

    English summary
    Here we have listed five important reasons to watch Vada Chennai movie in theatres.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X