வெள்ளாவிதான் வச்சித்தான் வெளுத்தாய்ங்கள வரிகள கேக்கும்போது காண்டாகுது... வெற்றிமாறன் பளிச் பேட்டி

சென்னை: தற்சமயம் நடிகர் சூரியை கதாநாயகனாக வைத்து விடுதலை திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் வெற்றிமாறன்.

அந்தப் படத்தை முடித்த பிறகு நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தை இயக்கப் போகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டியில் தன்னுடைய படங்கள், தான் செய்த பிழைகள் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார் வெற்றிமாறன்.

இந்தி தான் தெரியும்.. தமிழில் எழுத தெரியாது.. நிஜமாவே இது தமிழ் பிக் பாஸ் தானா கமல் சார்?'

வரலாற்றுப் படம்

வரலாற்றுப் படம்

விசாரணை படம் முடிந்த பின்னரே சூர்யாவிற்கு வரலாற்று கதை ஒன்றை கூறினாராம் வெற்றிமாறன். ஆனால் வேறு கதை பண்ணலாம் என்று சூர்யா சொன்னதால், வட சென்னை திரைப்படத்தை முடித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டாராம். வட சென்னை எடுத்துக் கொண்டிருக்கும்போதே தயாரிப்பாளர் தாணு அசுரன் திரைப்படத்திற்கு ஒப்பந்தம் செய்துவிட்டார். அதன் பின் சூர்யாவும் பிசியானதால் இப்போதுதான் ஒன்றாக வேலை செய்வதற்கு நேரம் அமைந்ததுள்ளது என்று கூறியுள்ளார்.

பிற பணிகள்

பிற பணிகள்

படங்கள் இயக்குவது மட்டுமின்றி தயாரிப்பதிலும், கதை எழுதுவதிலும் தன்னை பிசியாகவே வைத்துள்ளார் வெற்றிமாறன். அந்த வகையில் இயக்குநர் அமீர் அடுத்ததாக இயக்கப் போகும் 'இறைவன் மிகப் பெரியவன்' என்கிற கதையை எழுதிக் கொடுத்தவர் வெற்றிமாறன் தான். அது மட்டுமின்றி 'நிலமெல்லாம் இரத்தம்' என்கிற வெப் சீரிஸின் கதையையும் அமீருக்காக எழுதிக் கொடுத்திருக்கிறாராம். இதற்கு முன்னர் இயக்குநர் மணிமாறன் இயக்கியிருந்த உதயம் என்.எச் 4 என்கிற திரைப்படத்தின் கதையையும் வெற்றிமாறன்தான் எழுதியிருந்தார்.

பொது மன்னிப்பு கேட்டேன்

பொது மன்னிப்பு கேட்டேன்

இதுவரை நீங்கள் எடுத்து படங்களில் தவறாக எடுத்து விட்டோமே, இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம் என்று நினைத்துள்ளீர்களா என்ற கேள்விக்கு, தொழில்நுட்ப ரீதியாக செய்யும் தவறுகளை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் அரசியல் ரீதியாக ஒரு கருத்தை சொன்னபோது அதனை மாற்றி இருக்கலாமோ என்று தோன்றியிருக்கிறது. நம்மை அறியாமல் சில தவறுகளை செய்து விடுவோம். ஆடுகளம் திரைப்படத்தில் ஒரு வசனம் ஊனமுற்றவர்களின் மனதை புண்படுத்தியதால் என்னை பொது மன்னிப்பு கேட்கச் சொன்னார்கள் நானும் அப்போது கேட்டேன்.

காண்டாகுது

காண்டாகுது

அதே போல அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா பாடல் வரிகள் மிகப் பெரிய ஹிட்டானது. பாடல் வெளியாகும்போதே எனக்குள் இருந்த ஒரு உறுத்தல் பிற்காலத்தில் வருத்தமடையச் செய்தது. இப்போது அந்த வரிகளை நினைத்தாலும் காண்டாக இருக்கிறது. வெள்ளையாக இருக்கும் பெண்ணைத்தான் காதலிக்க வேண்டுமா என்ற ஒரு அர்த்தத்தில் இருப்பதால் அதுபோன்ற அரசியல் ரீதியான தவறுகளை செய்யக்கூடாது என்று நினைப்பதாக வெற்றிமாறன் கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X