»   »  நான் போய் ராதிகா மேடத்தை அவமதிப்பேனா?: தர்மதுரை இயக்குனர்

நான் போய் ராதிகா மேடத்தை அவமதிப்பேனா?: தர்மதுரை இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தர்மதுரை படத்தில் சீனியரான ராதிகா மேடத்தை அவமதிக்கவில்லை என்று இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா உள்ளிட்டோர் நடித்த தர்மதுரை படத்தை நடிகர் சரத்குமார் பார்த்தார். படத்தின் டைட்டில் கார்டில் சீனியரான ராதிகாவை அவமதித்துவிட்டதாக ட்விட்டரில் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து சீனு ராமசாமி கூறியிருப்பதாவது,

ராதிகா மேடம்

ராதிகா மேடம்

தர்மதுரை படத்தில் வரும் ராதிகா மேடத்தின் கதாபாத்திரத்தை பார்த்தாலே நான் அவர் மீது எவ்வளவு மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளேன் என்று தெரியும். தர்மதுரை ராதிகா மேடத்தின் மரியாதைக்கு மணிமகுடமாக உள்ளது.

அலைந்தேன்

அலைந்தேன்

ராதிகா மேடத்துடன் பணியாற்ற வேண்டும் என்பது என் கனவு. தென்மேற்கு பருவக்காற்று படத்தின் கதையை முடித்துவிட்டு அம்மா கதாபாத்திரத்தில் ராதிகா மேடத்தை நடிக்க வைக்க ராடான் டிவி அலுவலகத்திற்கு ஒரு ஆண்டு காலமாக நடையாய் நடந்தும் அவரை பார்க்கக் கூட முடியவில்லை.

சரண்யா

சரண்யா

ராதிகா மேடத்தை சந்திக்க முடியாமல் போன பிறகு சரண்யாவை நடிக்க வைத்தேன். அவருக்கு தென்மேற்கு பருவக்காற்று படத்திற்காக தேசிய விருது கிடைத்தது. அதன் பிறகு ராதிகா மேடத்தை சந்தித்தபோது நான் நடையாய் நடந்த கதை மற்றும் அவருக்கு பதிலாக சரண்யாவை நடிக்க வைத்ததை கூறினேன்.

மரியாதை

மரியாதை

சீனியர் நடிகர் ராஜேஷின் பெயருடன் ராதிகா மேடத்தின் பெயரை போடுமாறு நான் தான் கூறினேன். டைட்டில் கார்டில் அவரின் பெயரை தனியாக போட வேண்டும் என்று சரத் சார் விரும்பியிருந்தால் அதை என்னிடம் சொல்லியிருந்தால் செய்திருப்பேனே. நான் ராதிகா மேடத்தை அவமதிக்கவில்லை.

English summary
Dharmadurai director Seenu Ramasamy said that senior actress Radhika Sarathkumar was not insulted.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil