விக்ரம் படத்தில் ஆண்டவர் தான் வில்லனா? விஜய்சேதுபதியும் பகத் பாசிலும் என்ன பண்ண போறாங்களோ?

சென்னை: கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் படத்தின் டைட்டிலை கமல் நடித்த விக்ரம் படத்தில் இருந்தே எடுத்து வைத்திருக்கிறார் என்று பார்த்தால், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலும் ஃபேன் பாய் மொமென்ட் அப்படியே அப்பட்டமாக தெரிகிறது.

ஆம், கமலின் வெறித்தனமான விருமாண்டி படத்தின் போஸ்டரை இன்ஸ்பிரேஷனாக கொண்டே விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை உருவாக்கி உள்ளனர்.

விக்ரம் படத்தில் ஆண்டவர் ஹீரோ இல்லை என்றும் அவர் தான் எமகாதக வில்லன் என்றும் புதிய தகவல் ஒன்று தீயாக பரவி வருகிறது.

மும்மூர்த்திகளாக மாறிய கமல் – விக்ரம் – பகத்.. விருமாண்டி மாதிரியே இருக்கே என கண்டுபிடித்த ஃபேன்ஸ்!

தேசிய விருது நடிகர்கள்

தேசிய விருது நடிகர்கள்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள விக்ரம் படத்தில் மூன்று தேசிய விருது நடிகர்கள் மிரட்டப் போகின்றனர். கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் மலையாள நடிகரான பகத் ஃபாசில் என மூவரின் நடிப்பை திரையில் காணவே படத்தை அனைவரும் பார்த்து விடுவார்கள்.

மிரட்டல் லுக்

மிரட்டல் லுக்

மாஸ்டர் படத்தின் மூன்றாவது லுக்கில் விஜய்சேதுபதியும் விஜய்யும் சண்டை போடுவது போல போஸ்டர் வடிவமைக்கப்பட்டு இருந்தது. அதே போல விக்ரம் ஃபர்ஸ்ட் லுக்கிலும் நகக் கீறல்களுடன் ரத்தக் காயங்களுடன் போஸ்டர் வித்தியாசமாக மிரட்டுகிறது.

ஃபேன் பாய்

ஃபேன் பாய்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இதுவரை இயக்கிய அத்தனை படங்களிலும் நடிகர் கமல்ஹாசன் படங்களின் சாயல் இருந்து வந்த நிலையில், விக்ரம் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கிலேயே கமலின் சாயல் அப்பட்டமாக அவரது ஃபேன் பாய் தோற்றத்தை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. படத்தில் கமல் நடித்த படங்களின் என்ன என்ன இன்ஸ்பிரேஷன்கள் இருக்கப் போகிறதோ தெரியவில்லை.

வில்லன் யார்

வில்லன் யார்

அரசியல் தலைவர்கள், காவல் துறை அதிகாரிகள் என அனைவரையும் ஒரு வீட்டிற்குள் அழைத்து சுட்டுத் தள்ளும் டீசர் உடன் விக்ரம் பட டைட்டில் அறிவிக்கப்பட்ட நிலையில், விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லன் விஜய்சேதுபதியா? பகத் ஃபாசிலா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆண்டவர் தான்

ஆண்டவர் தான்

இந்நிலையில், புதிதாக ஒரு சுவாரஸ்யமான ரகசியமும் கசிந்துள்ளது. இந்த படத்தில் விஜய்சேதுபதி, பகத் ஃபாசிலை ஓரங்கட்டும் எமகாதக வில்லனாக நடிகர் கமல் தான் இருக்கப் போகிறார் என்றும் கூறுகின்றனர். எது எப்படியே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு செம நடிப்பு விருந்து வெயிட்டிங்! படம் முழுசா ரெடியாகி வந்துடும்ல ஆண்டவரே!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X