Don't Miss!
- News பாஜக கேம்பில் தொற்றிய பதற்றம்.. குழப்பம்.. அப்படி என்னதான் நடந்தது? புயலை கிளப்பிய உளவு ரிப்போர்ட்?
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஒல்லி பெல்லி கீர்த்தி சுரேஷ்…. வைரலாகும் மிஸ்.இந்தியா ஸ்னீக் பிக் காட்சிகள்
சென்னை: தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் நடிக்கும் மிஸ்.இந்தியா திரைப்படத்தின் ஸ்னீக் பிக் காட்சிகள் படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் காட்சிகள் மற்றும் படத்தின் மேக்கிங் வெளியிடப்பட்டுள்ளது. கீர்த்தி சுரேஷ் இந்த படத்திற்காக கொஞ்சம் உடல் எடையை குறைத்து படத்தில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
கீர்த்தி சுரேஷ் மலையாள தயாரிப்பாளர் சுரேஷ் குமார் மற்றும் நடிகை மேனகாவின் மகள். இவர் குழந்தையாக இருக்கும் போதே சில படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் கீதாஞ்சலி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இவர் தன் முதல் படத்திலே மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலுடன் நடித்தார். மேலும் அந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இது எந்த ஒரு கதாநாயகிக்கும் கிடைக்காத ஒரு அறிமுகம்.
தனது முதல் படத்திலேயே இரட்டை வேடத்தில் நடித்து அசத்தி பலரது பாராட்டையும் பெற்றார். இதற்கு பிறகு ரிங் மாஸ்டர், தமிழில் இது என்ன மாயம் போன்ற படங்களில் நடித்தார் இதற்கு பிறகு ரஜினி முருகன் படம் அவருக்கு தமிழில் நல்ல பெயரை பெற்று தந்தது.
அதற்கு பிறகு தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வந்தார். 2018ஆம் ஆண்டில் கீர்த்தி சுரேஷ் நடித்து வெளி வந்த மகாநடி படம் மாபெரும் வெற்றி அடைந்தது. அதோடு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருதையும் பெற்று தந்தது. இதில் நடிகையர் திலகம் சாவித்ரி போலவே மிகச் சிறப்பாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ்.
அய்யய்யோ.. செல்லக்குட்டி ஊருக்கு போயிடுச்சா.. சோகத்தில் மூழ்கிய ரசிகாஸ்!
தற்போது அவர் மிஸ்.இந்தியா எனும் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்கி வருகிறார் நரேந்திர நாத். மகேஷ்.எஸ்.கோனேரு ஈஸ்ட் கோஸ்ட் புரடக்ஸன் மூலம் படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்து வருகிறார்.
மிஸ்.இந்தியா பட செட்களில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் காட்சிகள் மற்றும் படத்தின் மேக்கிங் வெளியிடப்பட்டுள்ளது. கீர்த்தி சுரேஷ் இந்த படத்திற்காக கொஞ்சம் உடல் எடையை குறைத்து படத்தில் நடித்து வருகிறார் என்று தெரிகிறது. சமீபத்தில் கூட அவரின் உடல் எடையை குறைத்து சில போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. அது இந்த படத்திற்காக தான் என பலரும் கூறியுள்ளனர்.
மிஸ்.இந்தியா பட செட்களில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் காட்சிகள் மற்றும் படத்தின் மேக்கிங் வெளியிடப்பட்டுள்ளது. கீர்த்தி சுரேஷ் இந்த படத்திற்காக கொஞ்சம் உடல் எடையை குறைத்து படத்தில் நடித்து வருகிறார் என்று தெரிகிறது. சமீபத்தில் கூட அவரின் உடல் எடையை குறைத்து சில போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. அது இந்த படத்திற்காக தான் என பலரும் கூறியுள்ளனர்.