For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கே.எஸ்.ரவிகுமார் நடிக்கும் ’மதில்’ - ஜீ5 ஒரிஜினல் ... சொந்த வீடு கனவுகளுடன்

  |

  சென்னை: கே.எஸ்.ரவிகுமார் நடிக்கும் 'மதில்' படம் ஜீ 5 ஒரிஜினலில் உருவாகிறது. இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்குகிறார். 2020 ல் ஜீ5 'லாக்கப்' 'கபெ.ரணசிங்கம்' 'முகிலன்' 'ஒரு பக்க கதை' உள்ளிட்ட தரமான படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்தது.

  அதனை தொடர்ந்து இந்த ஆண்டும் சுவாரஸ்யமான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது.இந்த வரிசையில் ஜீ5 தனது அடுத்த படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. 'மதில்' என பெயரிடப்பட்டுள்ள இந்த சோசியல்-டிராமா படத்தில் முன்னணி இயக்குனரும் நடிகருமான கே.எஸ்.ரவிகுமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

  கால் மேல் கால் போட்டு.அப்படி ஒரு ஜிவ் லுக்கு...ஹீரோயின் சேஞ்சுக்கு கெத்து காட்டும்.பிக்பாஸ் பிரபலம்!கால் மேல் கால் போட்டு.அப்படி ஒரு ஜிவ் லுக்கு...ஹீரோயின் சேஞ்சுக்கு கெத்து காட்டும்.பிக்பாஸ் பிரபலம்!

  பிரபல இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள இந்த படத்தை எஸ்.எஸ்.குரூப்பின் உரிமையாளர் சிங்கா சங்கரன் தயாரித்துள்ளார். 'மதில்' படத்தில் மைம் கோபி, 'பிக்பாஸ்' புகழ் மதுமிதா, காத்தாடி ராமமூர்த்தி, 'லொள்ளு சபா' சாமிநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.பாலமுருகன் ஒளிப்பதிவை மேற்கொள்ள எம்.தியாகராஜன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

  முக்கிய பிரச்சனை பற்றி

  முக்கிய பிரச்சனை பற்றி

  "இந்த படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். இதுவரை நான் குடும்ப படங்கள் அல்லது நகைச்சுவை படங்கள் தான் இயக்கியிருக்கிறேன். இப்போது தான் முதல் முறையாக சமூக படம் இயக்கியுள்ளேன். மதில் திரைப்படம் தமிழ் நாட்டில் அடிக்கடி நிகழும் முக்கிய பிரச்சனை பற்றி பேசுகிறது. கடினமாக உழைத்து, சேமித்து அதன் மூலம் சொந்த வீடு கட்ட முயற்சிக்கும் அனைவரின் கதை இது. பல சூழ்நிலைகளில் நமக்கு மேல் இருப்பவர்களின் அதிகாரத்தை கண்டு, அஞ்சி நாம் அமைதியாக இருந்து விடுகிறோம். இவற்றுக்கு எதிரான நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்துவதன் அவசியம் ‘மதில்' படத்தில் விளக்கப்பட்டுள்ளது" என்று இயக்குனர் மித்ரன் ஜவஹர் கூறினார்.

  சொந்தம் கொண்டாடி

  சொந்தம் கொண்டாடி

  "இன்றைய சூழ்நிலைக்கு மிகவும் தேவையான கதை இது. நமது மதில் சுவர்களை கஷ்டப்பட்டு அலங்கரிக்கிறோம், தூய்மையாக வைத்திருக்கிறோம். ஆனால் வேறு யாரோ அதை பயன்படுத்துகின்றனர், சொந்தம் கொண்டாடுகின்றனர். இதை பற்றி படம் பேசுகிறது ." என்று மைம் கோபி கூறினார்

  தில்லான படைப்பு

  தில்லான படைப்பு

  "பக்கத்து தெருவில் அல்லது பக்கத்து வீட்டில் நடக்கும் தினசரி சம்பவங்களின் சுவாரஸ்யமான தொகுப்பு, அரசியல்வாதிகளுக்கு வகுப்பு, பொது மக்களுக்கு பொறுப்பு, களவாணி தனத்துக்கு மறுப்பு, காவல்துறைக்கு சிறப்பு, 'தனக்கென்ன' என்பவர்களுக்கு படிப்பு, திறமையானவர்களின் நடிப்பு, மொத்தத்தில் ‘மதில்' ஒரு தில்லான படைப்பு." என்று பல விதமான பன்சுகள் சொல்ல பட்டு வருகிறது

  ஏப்ரல் 14

  ஏப்ரல் 14


  மனசாட்சி சொல் படி தைரியமாக எதிரிகளை களத்தில் சந்திக்கும் ஒரு தகப்பனின் உரிமைகுரல்தான் ‘மதில்' ". என்று கூறினார் கே. எஸ். ரவிகுமார். ஜீ5 ஒரிஜினல் படமான ‘மதில்' ஏப்ரல் 14 அன்று ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளது.

  English summary
  Director KS Ravikumar is acting in Zee5 original Mathil.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X