டிவிட்டரில்.. நோஸ் கட் வாங்கிய லிப்லாக் நாயகி நிகிஷா!

சென்னை: 2010ல் தெலுங்கில் பவன் கல்யாண் நடித்து வெளிவந்த 'புலி' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிகிஷா பட்டேல். தமிழிலும் சில படங்களில் நடித்திருக்கிறார்.

என்னமோ ஏதோ படத்தில் துவங்கி ’நாரதன்’, அரவிந்த்சாமி உடன் ’பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ஜிவி பிரகாஷ் உடன் ’ஆயிரம் ஜென்மங்கள்’, மற்றும் தமிழ் ,தெலுங்கு, கன்னடம் மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை நிகிஷா பட்டேல்.

nikesha patel recieves the ire of pawan kalyan fans

தற்போது 'பாண்டி முனி, ஆயிரம் ஜென்மங்கள், மார்க்கெட்ராஜா எம்பிபிஎஸ்' ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.’ மார்க்கெட்ராஜா எம்பிபிஎஸ்' படத்திற்காக நடிகர் ஆரவுடன் லிப் லாக் காட்சியிலும் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் பவன் கல்யாண் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் போது முதலில் தவறான ஒரு ஹேஷ்டேக் வைத்து டுவிட்டரில் வாழ்த்து சொல்லிவிட்டார். அந்த ஹேஷ்டேக்கை பவன் கல்யாணின் எதிர்ப்பாளர்கள் உருவாக்கியிருந்தார்கள். அதை கவனிக்காமல் அந்த ஹேஷ்டேக்கிலேயே வாழ்த்து சொல்லி சில மணி நேரம் கழித்தே அதைக் கண்டுபிடித்து டெலிட் செய்து பின் வேறு ஒரு பதிவிட்டார். ஆனால், அதற்குள் நிகிஷாவின் டுவீட்டை பலரும் கிண்டலடித்துவிட்டார்கள்.

nikesha patel recieves the ire of pawan kalyan fans

இரண்டு நாட்களுக்கு முன்பு தான் நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு லண்டனின் தெருக்களில் ஷாப்பிங் செய்யும் போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை போன்ற கத்தாரின் அரசரின் படம் இருந்த சில மொபைல் அட்டைகளை பார்த்து படத்தில் உள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே என்று நினைத்த குஷ்பு, உடனடியாக தனது மைக்ரோ பிளாக்கிங் பக்கத்தில், “லண்டனில் ஆக்ஸ்போர்டு தெருவில் உள்ள ஒரு நினைவு பரிசு கடையில் நான் கண்டதைப் பாருங்கள் ... நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!!! என ட்விட் செய்து பின் ரசிகர் ஒருவர் அது கத்தார் அரசர் தமீம்பின்ஹமட் என்று திருத்தினார் என்பது குறிப்பிடத் தக்கது.

காதல் முறிவு? ஒத்த போட்டோவை போட்டு மொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்திய நடிகர் அமிர்கானின் மகள்!
இந்தக் காலத்தில் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து சொல்வதில் கூட எவ்வளவு கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. இது பிரபலங்களுக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X