மகளை அசிங்கமாக திட்டிட்டு உள்ளே வேஷம் போடுறாரு.. இன்ஸ்டாகிராம் லைவில் தாடி பாலாஜி மனைவி விளாசல்!

சென்னை: சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாத ஆட்களைத் தான் ஒவ்வொரு சீசனிலும் தேடி தேடி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்து வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 2வில் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா என இருவரையும் உள்ளே அனுப்பி இருந்தனர்.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தாடி பாலாஜி கலந்து கொண்டுள்ள நிலையில், தற்போது தனது மகளுடன் இன்ஸ்டாகிராம் லைவில் வந்த நித்யா தாடி பாலாஜி பற்றிய குற்றச்சாட்டுக்களை அடுக்கி அவரை விளாசித் தள்ளி உள்ளார்.

நாமினேஷனில் தப்பித்த தாடி பாலாஜி

நாமினேஷனில் தப்பித்த தாடி பாலாஜி

பிக் பாஸ் முதல் வாரத்தின் நாமினேஷனில் 8 பேர் நாமினேட் செய்யப்பட்ட நிலையில், அதிர்ஷ்டவசமாக தாடி பாலாஜி நாமினேஷனில் சிக்கவில்லை. இரண்டாவது சீசனை விட தற்போது சுறுசுறுப்பாக விளையாடி வருகிறார். அடிக்கடி தனது கருத்துக்களை எடுத்து வைத்து விளையாடி வருகிறார். இந்நிலையில், தாடி பாலாஜியை இன்ஸ்டாகிராம் லைவ்வில் அவரது மனைவி நித்யா வறுத்தெடுத்துள்ளார்.

அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்

அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்

தனது மகளுடன் இன்ஸ்டாகிராம் லைவிற்கு வந்த நித்யா, "பாலாஜி என்னுடைய கேரக்டரை ரொம்ப அசிங்கப்படுத்திக்கொண்டு இருக்கிறார். இதை பற்றி பேசவேண்டிய கட்டாயம் இருக்கு. இனிமேலும் என்னைப்பற்றி ரொம்ப ரொம்ப தப்பா பேசினால் நான் கண்டிப்பாக அவர் என்னை அவர் அசிங்க அசிங்கமாக திட்டிய வாய்ஸ் மெசேஜ் வெளியிடுவேன்." என மிரட்டி உள்ளார்.

மகளை அசிங்கமாக திட்டினார்

மகளை அசிங்கமாக திட்டினார்

"எனது மகளை மிகவும் அசிங்கமாக தாடி பாலாஜி திட்டி இருக்கும் ஆடியோ என்னிடம் இருக்கிறது. குடிச்சிட்டு அவருடைய டிரைவரை வைத்து என்னை போனில் அசிங்கமாக திட்ட வைத்து, அவர் அருகில் சிரித்து மகிழ்ந்த ஆடியோவும் என்னிடம் இருக்கிறது. பிக் பாஸில் அப்படியே பாசக்கார தந்தை போல நடிக்கிறார் என விளாசி தள்ளி உள்ளார்.

டேமேஜ் செய்வேன்

டேமேஜ் செய்வேன்

"இனிமேலும் அவர் இப்படி பேசினால் நான் youtube ல் ஒவ்வொன்றாக வெளியிடுவேன். இதை நான் viewers பெறுவதற்காக செய்கிறேன் என நீங்க நினைக்கலாம், அப்படி எல்லாம் இல்லை. அவர் என் இமேஜை டேமேஜ் செய்தால் நான் கண்டிப்பாக சும்மாவிட மாட்டேன்." எனக் கூறியுள்ளார்.

வைல்டு கார்டாக போனால் அவ்வளவுதான்

வைல்டு கார்டாக போனால் அவ்வளவுதான்

"என்னை வைல்டு கார்டு என்ட்ரியாகி அனுப்பினால் கூட அவரை பங்கமாக வெச்சி செஞ்சிடுவேன். மகளை பிரிந்திருக்கிறேன் என அவர் உள்ளே நடித்து கொண்டிருக்கிறார். அதை வைத்து அவர் கோர்ட்டில் சாதகமாக பயன்படுத்திகொள்ளலாம் என பார்க்கிறார்" என நித்யா கூறி உள்ளார்.

அப்பா நடிக்காதீங்க

அப்பா நடிக்காதீங்க

மேலும் தாடி பாலாஜி மற்றும் நித்யாவின் மகள் அந்த இன்ஸ்டாகிராம் லைவில் பேசும்போது "நீங்க (பாலாஜி) மீடியாவுக்காக மட்டும் இப்படி பண்ணாதீங்க. எது நல்லது எது கெட்டது என எனக்குத் தெரியும் அளவுக்கு மெச்சுரிட்டி வந்திருக்கிறது" எனக் கூறி உள்ளார்.

Recommended Video

Pavani Instagram-கு Abhinay அனுப்பிய? உண்மை உடைத்த Balaji Murugadoss | BB Ultimate Thamarai Selvi
வாய்ப்புக்காகவா

வாய்ப்புக்காகவா

சின்னக் குழந்தையை ஏன் லைவில் கொண்டு வந்து அவரது எதிர்காலத்தையும் கெடுக்குறீங்க என நித்யாவை பலரும் கண்டித்து வருகின்றனர். மேலும், பிக் பாஸ் அல்டிமேட் வைல்டு கார்டு வாய்ப்புக்காகவா இந்த டிராமா? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X