»   »  சந்தேகப் பேர்வழி: தாடி பாலாஜியிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி மனு

சந்தேகப் பேர்வழி: தாடி பாலாஜியிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி மனு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜியிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் அவரின் மனைவி நித்யா.

நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக அவரின் மனைவி நித்யா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தன் மீது சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்துவதாக கூறினார்.

இந்நிலையில் அவர் விவகாரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தொடர்பு

தொடர்பு

நித்யா சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் மற்றும் ஜிம் பயிற்சியாளரின் பிடியில் இருப்பதாக பாலாஜி தெரிவித்தார். மேலும் நித்யாவுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் கூறினார்.

மறுப்பு

மறுப்பு

பாலாஜி எப்பொழுது பார்த்தாலும் சந்தேகப்படுகிறார். அவர் கூறியது போன்று சப்-இன்ஸ்பெக்டர், ஜிம் பயிற்சியாளர் ஆகியோருடன் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று நித்யா தெரிவித்துள்ளார்.

விவாகரத்து

விவாகரத்து

இனியும் பாலாஜியுடன் சேர்ந்து வாழ முடியாது. தேவையில்லாமல் என்னை பற்றி தவறான தகவல்களை பரப்பி வருகிறார். அவரிடம் இருந்து விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன் என்கிறார் நித்யா.

குழந்தை

குழந்தை

என் மகளை என்னிடம் இருந்து பிரிக்க முயற்சி செய்கிறார்கள். என் மகளை நான் நல்ல முறையில் வளர்ப்பேன். அவளை பாலாஜியிடம் கொடுக்க மாட்டேன் என்று நித்யா கூறியுள்ளார்.

English summary
Actor Balaji's wife Nithya has approached a court in Chennai seeking divorce from him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X